எண்ணாகமம் 26:1-65

26  அந்தக் கொள்ளைநோய்+ ஓய்ந்த பின்பு, யெகோவா மோசேயிடமும் குருவாகிய ஆரோனின் மகன் எலெயாசாரிடமும்,  “படையில் சேவை செய்யத் தகுதியான ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ளவர்களை இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து தேர்ந்தெடுங்கள். அவர்களுடைய தந்தைவழிக் குடும்பங்களின்படி அவர்களைக் கணக்கெடுங்கள்”+ என்றார்.  அதனால், எரிகோவுக்குப்+ பக்கத்திலே யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில்+ இருந்த ஜனங்களிடம் மோசேயும் குருவாகிய எலெயாசாரும்,+  “மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்தபடியே, 20 வயதும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லாரையும் கணக்கெடுங்கள்”+ என்றார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த இஸ்ரவேல் வம்சத்தார் இவர்கள்தான்:  இஸ்ரவேலின் மூத்த மகன் ரூபன்.+ ரூபனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: ஆனோக், இவருடைய வம்சத்தார் ஆனோக்கியர்கள்; பல்லூ, இவருடைய வம்சத்தார் பல்லூவியர்கள்;  எஸ்ரோன், இவருடைய வம்சத்தார் எஸ்ரோனியர்கள்; கர்மீ, இவருடைய வம்சத்தார் கர்மீயர்கள்.  இவர்கள்தான் ரூபன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 43,730 பேர்.+  பல்லூவின் மகன் எலியாப்.  எலியாபின் மகன்கள்: நேமுவேல், தாத்தான், அபிராம். இந்த தாத்தானும் அபிராமும் ஜனங்களின் பிரதிநிதிகள். அவர்கள் கோராகுவின் கூட்டாளிகளோடு+ சேர்ந்துகொண்டு மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள்.+ இப்படி, யெகோவாவையே எதிர்த்தார்கள்.+ 10  அப்போது, பூமி பிளந்து அவர்களை விழுங்கியது. கோராகுவும் அவருடைய கூட்டாளிகள் 250 பேரும் நெருப்புக்குப் பலியானார்கள்.+ அவர்களுடைய கெட்ட உதாரணம் எல்லாருக்கும் ஓர் எச்சரிக்கையாக ஆனது.+ 11  ஆனால், கோராகுவின் மகன்கள் சாகவில்லை.+ 12  சிமியோனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: நேமுவேல், இவருடைய வம்சத்தார் நேமுவேலர்கள்; யாமின், இவருடைய வம்சத்தார் யாமினியர்கள்; யாகீன், இவருடைய வம்சத்தார் யாகீனியர்கள்; 13  சேராகு, இவருடைய வம்சத்தார் சேராகியர்கள்; சாவூல், இவருடைய வம்சத்தார் சாவூலியர்கள். 14  சிமியோன் வம்சத்தாராகிய இவர்கள் மொத்தம் 22,200 பேர்.+ 15  காத்தின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சிப்போன், இவருடைய வம்சத்தார் சிப்போனியர்கள்; ஹகி, இவருடைய வம்சத்தார் ஹகியர்கள்; சூனி, இவருடைய வம்சத்தார் சூனியர்கள்; 16  ஒஸ்னி, இவருடைய வம்சத்தார் ஒஸ்னியர்கள்; ஏரி, இவருடைய வம்சத்தார் ஏரியர்கள்; 17  ஆரோத், இவருடைய வம்சத்தார் ஆரோதியர்கள்; அரேலி, இவருடைய வம்சத்தார் அரேலியர்கள். 18  இவர்கள்தான் காத் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 40,500 பேர்.+ 19  யூதாவின் மகன்கள்+ ஏர், ஓனேன்.+ ஆனால், இவர்கள் இரண்டு பேரும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+ 20  யூதாவின் மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சேலா,+ இவருடைய வம்சத்தார் சேலாவியர்கள்; பாரேஸ்,+ இவருடைய வம்சத்தார் பாரேசியர்கள்; சேராகு,+ இவருடைய வம்சத்தார் சேராகியர்கள். 21  பாரேசின் மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: எஸ்ரோன்,+ இவருடைய வம்சத்தார் எஸ்ரோனியர்கள்; ஆமூல்,+ இவருடைய வம்சத்தார் ஆமூலியர்கள். 22  இவர்கள்தான் யூதா வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 76,500 பேர்.+ 23  இசக்காரின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: தோலா,+ இவருடைய வம்சத்தார் தோலாவியர்கள்; புவா, இவருடைய வம்சத்தார் புவாவியர்கள்; 24  யாசூப், இவருடைய வம்சத்தார் யாசூபியர்கள்; சிம்ரோன், இவருடைய வம்சத்தார் சிம்ரோனியர்கள். 25  இவர்கள்தான் இசக்கார் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 64,300 பேர்.+ 26  செபுலோனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சேரேத், இவருடைய வம்சத்தார் சேரேத்தியர்கள்; ஏலோன், இவருடைய வம்சத்தார் ஏலோனியர்கள்; யாலேயேல், இவருடைய வம்சத்தார் யாலேயேலியர்கள். 27  இவர்கள்தான் செபுலோன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 60,500 பேர்.+ 28  யோசேப்பின் மகன்களான+ மனாசே, எப்பிராயீம்+ ஆகியவர்களின் வம்சத்தார் இவர்கள்தான். 29  மனாசேயின்+ மகன்கள்: மாகீர்,+ இவருடைய வம்சத்தார் மாகீரியர்கள். மாகீரின் மகன் கீலேயாத்.+ கீலேயாத்தின் வம்சத்தார் கீலேயாத்தியர்கள். 30  கீலேயாத்தின் மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: ஈயேசேர், இவருடைய வம்சத்தார் ஈயேசேரியர்கள்; ஏலேக், இவருடைய வம்சத்தார் ஏலேக்கியர்கள்; 31  அஸ்ரியேல், இவருடைய வம்சத்தார் அஸ்ரியேலர்கள்; சீகேம், இவருடைய வம்சத்தார் சீகேமியர்கள்; 32  செமீதா, இவருடைய வம்சத்தார் செமீதாவியர்கள்; ஹேப்பேர், இவருடைய வம்சத்தார் ஹேப்பேரியர்கள். 33  ஹேப்பேரின் மகனாகிய செலோப்பியாத்துக்கு மகன்கள் இல்லை, மகள்கள் மட்டும்தான் இருந்தார்கள்.+ செலோப்பியாத்தின் மகள்களுடைய பெயர்கள்:+ மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள். 34  இவர்கள்தான் மனாசே வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 52,700 பேர்.+ 35  எப்பிராயீமின்+ மகன்களும் அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: சுத்தெலாக்,+ இவருடைய வம்சத்தார் சுத்தெலாக்கியர்கள்; பெகேர், இவருடைய வம்சத்தார் பெகேரியர்கள்; தாகான், இவருடைய வம்சத்தார் தாகானியர்கள்; 36  சுத்தெலாக்கின் மகன், ஏரான். இவருடைய வம்சத்தார் ஏரானியர்கள். 37  இவர்கள்தான் எப்பிராயீம் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 32,500 பேர்.+ இவர்கள்தான் யோசேப்பின் வம்சத்தார். 38  பென்யமீனின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: பேலா,+ இவருடைய வம்சத்தார் பேலாயர்கள்; அஸ்பேல், இவருடைய வம்சத்தார் அஸ்பேலர்கள்; அகிராம், இவருடைய வம்சத்தார் அகிராமியர்கள்; 39  செப்புப்பாம், இவருடைய வம்சத்தார் சுப்பீமியர்கள்; உப்பாம், இவருடைய வம்சத்தார் உப்பாமியர்கள். 40  பேலாவின் மகன்கள் ஆரேத், நாகமான்.+ ஆரேத்தின் வம்சத்தார் ஆரேத்தியர்கள்; நாகமானின் வம்சத்தார் நாகமானியர்கள். 41  இவர்கள்தான் பென்யமீன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 45,600 பேர்.+ 42  தாணின்+ மகன் சூகாம், இவருடைய வம்சத்தார் சூகாமியர்கள். தாண் வம்சத்தார் இவர்கள்தான். 43  சூகாமியர்களின் வம்சத்தாரில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 64,400 பேர்.+ 44  ஆசேரின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: இம்னா, இவருடைய வம்சத்தார் இம்னாவியர்கள்; இஸ்வி, இவருடைய வம்சத்தார் இஸ்வியர்கள்; பெரீயா, இவருடைய வம்சத்தார் பெரீயாவியர்கள்; 45  பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், இவருடைய வம்சத்தார் ஹேபெரியர்கள்; மல்கியேல், இவருடைய வம்சத்தார் மல்கியேலியர்கள். 46  ஆசேருடைய மகளின் பெயர் சேராள். 47  இவர்கள்தான் ஆசேர் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 53,400 பேர்.+ 48  நப்தலியின் மகன்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: யாத்சியேல், இவருடைய வம்சத்தார் யாத்சியேலியர்கள்; கூனி, இவருடைய வம்சத்தார் கூனியர்கள்; 49  எத்செர், இவருடைய வம்சத்தார் எத்செரியர்கள்; சில்லேம், இவருடைய வம்சத்தார் சில்லேமியர்கள். 50  இவர்கள்தான் நப்தலி வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 45,400 பேர்.+ 51  இப்படி, இஸ்ரவேலில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 6,01,730 பேர்.+ 52  பின்பு யெகோவா மோசேயிடம், 53  “ஒவ்வொரு கோத்திரத்திலும் உள்ள ஆட்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ 54  ஒரு தொகுதியில் நிறைய பேர் இருந்தால் அதிக நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும், கொஞ்சம் பேர் மட்டும் இருந்தால் கொஞ்சம் நிலத்தை மட்டும் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி ஒவ்வொரு தொகுதிக்கும் நிலத்தைக் கொடுக்க வேண்டும். 55  ஆனாலும், குலுக்கல் முறையில்தான் தேசத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும்.+ ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த கோத்திரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பங்குபோட்டுக் கொடுக்க வேண்டும். 56  பெரிய தொகுதிக்கும் சரி, சிறிய தொகுதிக்கும் சரி, யாருக்கு எந்தப் பகுதி என்பதைக் குலுக்கல் போட்டுத் தீர்மானிக்க வேண்டும்” என்றார். 57  பெயர்ப்பதிவு செய்யப்பட்ட லேவியர்களும்+ அவர்களுடைய வம்சத்தாரும் இவர்கள்தான்: கெர்சோன், இவருடைய வம்சத்தார் கெர்சோனியர்கள்; கோகாத்,+ இவருடைய வம்சத்தார் கோகாத்தியர்கள்; மெராரி, இவருடைய வம்சத்தார் மெராரியர்கள். 58  லேவியர்களின் வம்சத்தார் இவர்கள்தான்: லிப்னியர்கள்,+ எப்ரோனியர்கள்,+ மகேலியர்கள்,+ மூசியர்கள்,+ கோராகியர்கள்.+ கோகாத்தின் மகன் அம்ராம்.+ 59  அம்ராமின் மனைவி பெயர் யோகெபேத்.+ இவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்தவள். இவள் ஆரோனையும் மோசேயையும் இவர்களுடைய சகோதரி மிரியாமையும்+ அம்ராமுக்குப் பெற்றெடுத்தாள். 60  ஆரோனுக்கு நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்ற மகன்கள் பிறந்தார்கள்.+ 61  நாதாபும் அபியூவும் அத்துமீறி* தூபம் காட்டியதால் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+ 62  லேவியர்களில் ஒரு மாதமும் அதற்கு அதிகமான வயதும் உள்ள எல்லா ஆண்களும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டார்கள். அவர்கள் மொத்தம் 23,000 பேர்.+ ஆனால், அவர்கள் மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்த்து பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை.+ ஏனென்றால் இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் கொடுக்கப்படவில்லை.+ 63  எரிகோவுக்குப் பக்கத்தில் யோர்தானை ஒட்டியுள்ள மோவாப் பாலைநிலத்தில் மோசேயும் குருவாகிய எலெயாசாரும் பெயர்ப்பதிவு செய்த இஸ்ரவேலர்கள் இவர்கள்தான். 64  ஆனால், மோசேயும் குருவாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் பெயர்ப்பதிவு செய்த யாருமே இவர்களோடு இல்லை.+ 65  ஏனென்றால், “வனாந்தரத்தில் அவர்கள் நிச்சயம் சாவார்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார்.+ அதனால், எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவர்கூட இவர்களோடு இல்லை.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “தகாத விதத்தில்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா