எண்ணாகமம் 29:1-40
29 பின்பு அவர், “‘ஏழாம் மாதம் முதலாம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும்.+
2 ஒரு இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.
3 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவுடன் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும்.
4 ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும்.
5 அவற்றோடு, ஒரு வெள்ளாட்டுக் கடாக் குட்டியை உங்களுடைய பாவப் பரிகாரத்துக்காகக் கொண்டுவர வேண்டும்.
6 ஒவ்வொரு மாதமும் செலுத்துகிற தகன பலி, அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கை+ மற்றும் திராட்சமது காணிக்கை, தினமும் செலுத்துகிற* தகன பலி, அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கை+ மற்றும் திராட்சமது காணிக்கை+ ஆகியவற்றோடு, இவற்றையும் நீங்கள் செலுத்த வேண்டும். வழக்கமான முறைப்படியே இவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
7 ஏழாம் மாதம் 10-ஆம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும்.+ அன்றைக்கு உங்களையே வருத்திக்கொள்ள வேண்டும்.* எந்த வேலையும் செய்யக் கூடாது.+
8 ஒரு இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
9 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இளம் காளையோடு ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், செம்மறியாட்டுக் கடாவோடு ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும்.
10 ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும்.
11 பாவப் பரிகாரம் செய்வதற்கான பலியையும்+ அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் தவிர, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும்.
12 ஏழாம் மாதம் 15-ஆம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+
13 அப்போது 13 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
14 அவற்றோடு சேர்த்து, எண்ணெய் கலந்த நைசான மாவை உணவுக் காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். 13 காளைகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் மூன்று பங்கு* மாவையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு* மாவையும் கொண்டுவர வேண்டும்.
15 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு* மாவைக் கொண்டுவர வேண்டும்.
16 பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கொண்டுவர வேண்டும். அதோடு, தினமும் செலுத்துகிற* தகன பலியையும் அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் கொண்டுவர வேண்டும்.+
17 பண்டிகையின் இரண்டாம் நாளில் 12 இளம் காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
18 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
19 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், அதனோடு கொடுக்க வேண்டிய திராட்சமது காணிக்கையையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
20 மூன்றாம் நாளில் 11 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
21 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
22 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
23 நான்காம் நாளில் 10 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
24 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
25 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
26 ஐந்தாம் நாளில் 9 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
27 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
28 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
29 ஆறாம் நாளில் 8 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
30 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
31 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
32 ஏழாம் நாளில் 7 காளைகள், 2 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 14 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைச் செலுத்த வேண்டும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
33 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
34 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
35 எட்டாம் நாளில், விசேஷ மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+
36 ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள ஏழு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும். அவை எல்லாமே குறையில்லாத மிருகங்களாக இருக்க வேண்டும்.+
37 அந்தக் காளைகள், செம்மறியாட்டுக் கடாக்கள், செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் வழக்கமான முறைப்படி செலுத்த வேண்டும்.
38 அதோடு, பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும், தினமும் செலுத்துகிற* தகன பலியையும், அதனோடு கொடுக்க வேண்டிய உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டும்.+
39 இவற்றையெல்லாம் பண்டிகை நாட்களில்+ யெகோவாவுக்குச் செலுத்த வேண்டும். நேர்ந்துகொண்டதை நிறைவேற்றவோ+ நீங்களாகவே விருப்பப்பட்டோ செலுத்தும்+ தகன பலி,+ உணவுக் காணிக்கை,+ திராட்சமது காணிக்கை,+ சமாதான பலி+ ஆகியவற்றோடு இவற்றையெல்லாம் செலுத்த வேண்டும்’ என்று ஜனங்களிடம் சொல்” என்றார்.
40 யெகோவா கொடுத்த எல்லா கட்டளைகளையும் மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னார்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, “சுமார் 3 கிலோ.”
^ அதாவது, “சுமார் 2 கிலோ.”
^ அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
^ வே.வா., “வழக்கமான.”
^ விரதம் இருப்பதன் மூலமோ வேறு விதத்தின் மூலமோ தங்களைத்தாங்களே கஷ்டப்படுத்திக்கொள்வதைக் குறிக்கலாம்.
^ அதாவது, “சுமார் 2 கிலோ.”
^ அதாவது, “சுமார் 3 கிலோ.”
^ அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
^ வே.வா., “வழக்கமான.”
^ அதாவது, “சுமார் 3 கிலோ.”
^ அதாவது, “சுமார் 2 கிலோ.”
^ அதாவது, “சுமார் ஒரு கிலோ.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”
^ வே.வா., “வழக்கமான.”