எண்ணாகமம் 7:1-89

7  வழிபாட்டுக் கூடாரத்தை மோசே அமைத்து முடித்ததும்,+ அதே நாளில் அந்தக் கூடாரத்தையும் அதன் சாமான்களையும் பலிபீடத்தையும் எல்லா பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து+ புனிதப்படுத்தினார்.+ அப்படி அபிஷேகம் செய்து புனிதப்படுத்திய பின்பு,+  இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்கள்,+ அதாவது தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். இவர்கள்தான் பெயர்ப்பதிவு வேலையைக் கண்காணித்த கோத்திரத் தலைவர்கள்.  இரண்டிரண்டு கோத்திரத் தலைவர்களுக்கு ஒரு கூண்டுவண்டி* என ஆறு கூண்டுவண்டிகளையும், ஒவ்வொரு கோத்திரத் தலைவருக்கு ஒரு காளை என 12 காளைகளையும் இவர்கள் கொண்டுவந்து வழிபாட்டுக் கூடாரத்தின் முன்னால், யெகோவாவின் முன்னிலையில் கொடுத்தார்கள்.  அப்போது யெகோவா மோசேயிடம்,  “இவற்றை அவர்களிடமிருந்து வாங்கி, சந்திப்புக் கூடார வேலைகளுக்காக லேவியர்களிடம் கொடு. அவரவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்றபடி அவரவருக்குக் கொடு” என்றார்.  அதனால், மோசே அந்த வண்டிகளையும் காளைகளையும் அவர்களிடமிருந்து வாங்கி லேவியர்களிடம் கொடுத்தார்.  கெர்சோனியர்களின் வேலைகளுக்கு ஏற்றபடி,+ அவர்களுக்கு இரண்டு வண்டிகளையும் நான்கு காளைகளையும் கொடுத்தார்.  மெராரியர்களின் வேலைகளுக்கு ஏற்றபடி, அவர்களுக்கு நான்கு வண்டிகளையும் எட்டுக் காளைகளையும் கொடுத்தார். அவர்கள் எல்லாருடைய வேலைகளையும் குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமார் மேற்பார்வை செய்தார்.+  ஆனால், கோகாத்தியர்களுக்கு மோசே ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனென்றால், பரிசுத்த இடத்தின் பொருள்களை+ அவர்கள் தங்களுடைய தோள்களில் சுமந்தார்கள்.+ 10  பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட நாளில், அதாவது அது அர்ப்பணிக்கப்பட்ட நாளில்,+ கோத்திரத் தலைவர்கள் தங்களுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். அவற்றைப் பலிபீடத்துக்கு முன்னால் கொண்டுவந்து கொடுத்தபோது, 11  யெகோவா மோசேயிடம், “ஒரு நாளுக்கு ஒருவர் என கோத்திரத் தலைவர்கள் தங்களுடைய காணிக்கைகளைப் பலிபீடத்தின் அர்ப்பணத்துக்காகக் கொண்டுவர வேண்டும்” என்றார். 12  முதலாம் நாளில், யூதா கோத்திரத்தைச் சேர்ந்த அம்மினதாபின் மகன் நகசோன்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 13  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 14  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 15  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 16  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 17  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மினதாபின் மகன் நகசோன்+ கொண்டுவந்த காணிக்கைகள். 18  இரண்டாம் நாளில், இசக்கார் கோத்திரத்தின் தலைவரும் சூவாரின் மகனுமாகிய நெதனெயேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 19  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 20  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 21  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 22  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 23  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் சூவாரின் மகன் நெதனெயேல் கொண்டுவந்த காணிக்கைகள். 24  மூன்றாம் நாளில், செபுலோன் கோத்திரத்தின் தலைவரும் ஹேலோனின் மகனுமாகிய எலியாப்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 25  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 26  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 27  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 28  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 29  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் ஹேலோனின் மகன் எலியாப்+ கொண்டுவந்த காணிக்கைகள். 30  நான்காம் நாளில், ரூபன் கோத்திரத்தின் தலைவரும் சேதேயூரின் மகனுமாகிய எலிசூர்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 31  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 32  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 33  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 34  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 35  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் சேதேயூரின் மகன் எலிசூர்+ கொண்டுவந்த காணிக்கைகள். 36  ஐந்தாம் நாளில், சிமியோன் கோத்திரத்தின் தலைவரும் சூரிஷதாயின் மகனுமாகிய செலூமியேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 37  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 38  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 39  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 40  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 41  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் சூரிஷதாயின் மகன் செலூமியேல்+ கொண்டுவந்த காணிக்கைகள். 42  ஆறாம் நாளில், காத் கோத்திரத்தின் தலைவரும் தேகுவேலின் மகனுமாகிய எலியாசாப்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 43  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 44  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 45  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 46  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 47  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் தேகுவேலின் மகன் எலியாசாப்+ கொண்டுவந்த காணிக்கைகள். 48  ஏழாம் நாளில், எப்பிராயீம் கோத்திரத்தின் தலைவரும் அம்மியூத்தின் மகனுமாகிய எலிஷாமா+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 49  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 50  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 51  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 52  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 53  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மியூத்தின் மகன் எலிஷாமா+ கொண்டுவந்த காணிக்கைகள். 54  எட்டாம் நாளில், மனாசே கோத்திரத்தின் தலைவரும் பெதாசூரின் மகனுமாகிய கமாலியேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 55  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 56  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 57  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 58  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 59  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் பெதாசூரின் மகன் கமாலியேல்+ கொண்டுவந்த காணிக்கைகள். 60  ஒன்பதாம் நாளில், பென்யமீன் கோத்திரத்தின் தலைவரும்+ கீதெயோனியின் மகனுமாகிய அபிதான்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 61  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 62  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 63  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 64  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 65  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் கீதெயோனியின் மகன் அபிதான்+ கொண்டுவந்த காணிக்கைகள். 66  பத்தாம் நாளில், தாண் கோத்திரத்தின் தலைவரும் அம்மிஷதாயின் மகனுமாகிய அகியேசேர்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 67  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 68  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 69  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 70  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 71  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்+ கொண்டுவந்த காணிக்கைகள். 72  பதினோராம் நாளில், ஆசேர் கோத்திரத்தின் தலைவரும் ஓகிரானின் மகனுமாகிய பாகியேல்+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 73  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 74  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 75  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 76  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 77  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் ஓகிரானின் மகன் பாகியேல்+ கொண்டுவந்த காணிக்கைகள். 78  பன்னிரண்டாம் நாளில், நப்தலி கோத்திரத்தின் தலைவரும் ஏனானின் மகனுமாகிய அகீரா+ தன்னுடைய காணிக்கைகளைக் கொண்டுவந்தார். 79  அவருடைய காணிக்கைகள்: பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ 130 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளித் தட்டு, 70 சேக்கல் எடையுள்ள ஒரு வெள்ளிக் கிண்ணம்—உணவுக் காணிக்கையாகிய எண்ணெய் கலந்த நைசான மாவு அவற்றில் நிரப்பப்பட்டிருந்தது;+ 80  10 சேக்கல் எடையுள்ள ஒரு தங்கக் கோப்பை—அது தூபப்பொருளால் நிரப்பப்பட்டிருந்தது; 81  தகன பலியாக+ ஓர் இளம் காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒருவயதுள்ள செம்மறியாட்டுக் கடாக் குட்டி; 82  பாவப் பரிகார பலியாக ஒரு வெள்ளாட்டுக் குட்டி;+ 83  சமாதான பலியாக+ 2 மாடுகள், 5 செம்மறியாட்டுக் கடாக்கள், 5 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 5 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். இவைதான் ஏனானின் மகன் அகீரா+ கொண்டுவந்த காணிக்கைகள். 84  பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட நாளில், அதன் அர்ப்பணத்துக்காக இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள்+ இவைதான்: 12 வெள்ளித் தட்டுகள், 12 வெள்ளிக் கிண்ணங்கள், 12 தங்கக் கோப்பைகள்.+ 85  பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி,+ ஒவ்வொரு வெள்ளித் தட்டின் எடை 130 சேக்கல், ஒவ்வொரு வெள்ளிக் கிண்ணத்தின் எடை 70 சேக்கல். வெள்ளிப் பாத்திரங்களின் மொத்த எடை 2,400 சேக்கல். 86  பரிசுத்த* சேக்கலின் கணக்குப்படி, தூபப்பொருளால் நிரப்பப்பட்ட 12 தங்கக் கோப்பைகள் ஒவ்வொன்றின் எடை 10 சேக்கல். தங்கக் கோப்பைகளின் மொத்த எடை 120 சேக்கல். 87  தகன பலியாக 12 காளைகள், 12 செம்மறியாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 12 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் ஆகியவற்றையும், அவற்றுக்கான உணவுக் காணிக்கைகளையும், பாவப் பரிகார பலியாக 12 வெள்ளாட்டுக் குட்டிகளையும் அவர்கள் கொண்டுவந்தார்கள். 88  சமாதான பலியாக அவர்கள் கொண்டுவந்தவை: 24 காளைகள், 60 செம்மறியாட்டுக் கடாக்கள், 60 வெள்ளாட்டுக் கடாக்கள், ஒருவயதுள்ள 60 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள். பலிபீடம் அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு,+ அதன் அர்ப்பணத்துக்காகக் கொண்டுவரப்பட்ட காணிக்கைகள்+ இவைதான். 89  கடவுளோடு பேசுவதற்காக மோசே சந்திப்புக் கூடாரத்துக்குள் போகும்போதெல்லாம்,+ சாட்சிப் பெட்டியின் மூடிக்கு மேலிருந்து கடவுள் பேசுவதைக் கேட்பார்.+ இரண்டு கேருபீன்களுக்கு+ நடுவிலிருந்து கடவுள் அவரிடம் பேசுவார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “வளைவான கூரை போடப்பட்ட மாட்டு வண்டி.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”
வே.வா., “பரிசுத்த இடத்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா