எரேமியா 14:1-22

14  வறட்சிக் காலங்களைப் பற்றி எரேமியாவிடம் யெகோவா சொன்னது இதுதான்:+   யூதா அழுது புலம்புகிறது.+ அதன் நுழைவாசல்கள் பாழடைந்து கிடக்கின்றன.துக்கத்தில் தரையோடு தரையாக விழுந்து கிடக்கின்றன. எருசலேம் நகரமே கதறுகிறது.   தண்ணீர் எடுத்துவரச் சொல்லி எஜமான்கள் வேலைக்காரர்களை அனுப்புகிறார்கள். வேலைக்காரர்களும் தண்ணீர்த் தொட்டிகளுக்குப் போய்ப் பார்க்கிறார்கள்; அங்கே தண்ணீர் இல்லை. அதனால் காலியான ஜாடிகளை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்தோடும் அவமானத்தோடும்தலையில் முக்காடு போட்டுக்கொண்டு திரும்பி வருகிறார்கள்.   விவசாயிகளும் என்ன செய்வதென்றே தெரியாமல் தலையில் முக்காடு போட்டுக்கொள்கிறார்கள்.ஏனென்றால், தேசத்தில் மழையே இல்லை.+நிலமெல்லாம் வெடித்துக் கிடக்கிறது.   எங்குமே புல் இல்லை.அதனால், பெண் மான்கள்கூட குட்டிகளை விட்டுவிட்டுப் போய்விடுகின்றன.   காட்டுக் கழுதைகள் குன்றுகள்மேல் நிற்கின்றன. நரிகளைப் போல மூச்சிரைக்கின்றன.சாப்பிடுவதற்குப் புல்பூண்டுகள் இல்லாமல் அவற்றின் கண்கள் இருண்டுவிடுகின்றன.+   யெகோவாவே, நாங்கள் குற்றவாளிகள் என்பதற்கு எங்கள் குற்றங்களே சாட்சி சொல்கின்றன.எத்தனையோ தடவை உங்களுக்குத் துரோகம் செய்திருக்கிறோம்.+ உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.ஆனாலும், உங்களுடைய பெயரின் மகிமைக்காக இப்போது எங்களுக்கு உதவி செய்யுங்கள்.+   இஸ்ரவேலர்களுக்கு நம்பிக்கை தருகிறவரே, ஆபத்துக் காலத்தில் அவர்களை மீட்கிறவரே,+ஏன் அவர்களுடைய தேசத்தில் ஒரு அன்னியரைப் போல இருக்கிறீர்கள்?ராத்திரி மட்டும் தங்கிவிட்டுப் போகிற பயணியைப் போல ஏன் இருக்கிறீர்கள்?   என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போயிருக்கிற மனுஷனைப் போலவும்,காப்பாற்ற முடியாத ஒரு வீரனைப் போலவும் ஏன் இருக்கிறீர்கள்? யெகோவாவே, நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்.+நாங்கள் உங்களுடைய பெயரைத் தாங்கியிருக்கிறோம்.+ அதனால், எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள். 10  இந்த ஜனங்களைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: “அவர்கள் மனம்போல் சுற்றித் திரியவே ஆசைப்படுகிறார்கள்.+ அவர்களுடைய கால்களை அவர்கள் கட்டுப்படுத்துவதே இல்லை.+ அதனால், யெகோவா அவர்களை வெறுக்கிறார்.+ இப்போது அவர்களுடைய குற்றங்களையெல்லாம் நினைத்துப் பார்த்து அவர்களைத் தண்டிக்கப்போகிறார்.”+ 11  பின்பு யெகோவா என்னிடம், “இந்த ஜனங்களுக்கு நல்லது செய்யச் சொல்லி என்னிடம் கேட்காதே.+ 12  இவர்கள் விரதமிருந்து ஜெபம் செய்தாலும் நான் அதைக் கேட்க மாட்டேன்.+ இவர்கள் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் செலுத்தினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.+ இவர்களை வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாக்குவேன்”+ என்று சொன்னார். 13  அதற்கு நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே! தீர்க்கதரிசிகள் இந்த ஜனங்களிடம், ‘நீங்கள் வாளால் கொல்லப்படவும் மாட்டீர்கள், பஞ்சத்தால் சாகவும் மாட்டீர்கள். கடவுள் உங்களை இந்தத் தேசத்திலேயே நிம்மதியாக வாழ வைப்பார்’+ என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே” என்றேன். 14  அப்போது யெகோவா என்னிடம், “அந்தத் தீர்க்கதரிசிகள் என் பெயரில் பொய்யாகத் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.+ நான் அவர்களிடம் பேசவும் இல்லை, அவர்களைப் பேசச் சொல்லவும் இல்லை, அவர்களை அனுப்பவும் இல்லை.+ அவர்கள் பார்த்ததாகச் சொல்லும் தரிசனங்களெல்லாம் பொய். அவர்கள் குறிசொல்கிறபடி எதுவுமே நடக்காது. அவர்களே கதைகளை ஜோடித்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.+ 15  அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாவிட்டாலும் அவர்கள் என் பெயரில் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். நீங்கள் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாக மாட்டீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்களைப் பற்றி யெகோவாவாகிய நான் சொல்வது இதுதான்: ‘அந்தத் தீர்க்கதரிசிகள் வாளினாலும் பஞ்சத்தினாலும் சாவார்கள்.+ 16  அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வதைக் கேட்ட மக்கள் எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் பலியாகி எருசலேமின் வீதிகளில் கிடப்பார்கள். அவர்களையும் அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் புதைக்க யாருமே இருக்க மாட்டார்கள்.+ அவர்களுடைய பாவங்களுக்குத் தகுந்த தண்டனையை நான் கொடுப்பேன்.’+ 17  நீ அவர்களிடம்,‘ராத்திரி பகலாக என் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கட்டும்.+ஏனென்றால், என் ஜனங்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.பயங்கரமாக அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள்.+ 18  நான் வயல்வெளிக்குப் போய்ப் பார்த்தால்,வாளினால் வெட்டிக் கொல்லப்பட்டவர்களின் பிணங்கள்தான் கிடக்கின்றன.+ நகரத்துக்குள் வந்தால்,பஞ்சத்தினால் உண்டான கொடிய வியாதிகளைத்தான் பார்க்கிறேன்.+ தீர்க்கதரிசிகளும் குருமார்களும் திக்குத்தெரியாமல் அலைந்துகொண்டிருக்கிறார்கள்’+ என்று சொல்” என்றார். 19  நீங்கள் யூதாவை ஒதுக்கித்தள்ளிவிட்டீர்களா? சீயோனை அடியோடு வெறுத்துவிட்டீர்களா?+ நாங்கள் குணமாக முடியாத அளவுக்கு ஏன் எங்களை நொறுக்கிவிட்டீர்கள்?+ நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்; ஆனால், நல்லது எதுவுமே நடக்கவில்லை.குணமாகும் காலத்துக்காகக் காத்திருந்தோம்; ஆனால், திகில்தான் எங்களை ஆட்டிப்படைக்கிறது!+ 20  யெகோவாவே, நாங்கள் அக்கிரமம் செய்ததை ஒத்துக்கொள்கிறோம்.எங்கள் முன்னோர்களும் அக்கிரமம் செய்தது உண்மைதான்.நாங்கள் எல்லாருமே உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்திருக்கிறோம்.+ 21  ஆனாலும் உங்களுடைய பெயரை மனதில் வைத்து, எங்களை ஒதுக்காமல் இருங்கள்.+உங்களுடைய மகிமையான சிம்மாசனத்தை வெறுத்துவிடாதீர்கள். எங்களோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிடாதீர்கள்; அதை முறித்துவிடாதீர்கள்.+ 22  வானம் தானாகவே மழையைப் பொழியுமா?அல்லது, உலகத்திலுள்ள வீணான தெய்வங்களால் மழை தர முடியுமா? எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களால் மட்டும்தானே அதைச் செய்ய முடியும்?+ நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்.உங்களால் மட்டும்தான் எல்லாவற்றையும் செய்ய முடியும்.

அடிக்குறிப்புகள்

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா