எரேமியா 22:1-30

22  யெகோவா சொல்வது இதுதான்: “நீ யூதாவின் ராஜாவுடைய அரண்மனைக்குப் போய் இந்தச் செய்தியைச் சொல்:  ‘தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற யூதா ராஜாவே, நீங்களும் இந்த நுழைவாசல்கள் வழியாக வருகிற உங்கள் ஊழியர்களும் ஜனங்களும் யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்.  யெகோவா சொல்வது இதுதான்: “நியாயத்தோடும் நீதியோடும் நடந்துகொள்ளுங்கள். மோசடிக்காரர்களின் கையிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுங்கள். உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்து ஜனங்கள் யாரையும் மோசமாக நடத்தாதீர்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும்* விதவைகளுக்கும் கெடுதல் செய்யாதீர்கள். அப்பாவிகளைக் கொலை செய்யாதீர்கள்.+  நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு நடந்தால், தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காரும் ராஜாக்கள் இந்த அரண்மனை வாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள்.+ அவர்களோடு அவர்களுடைய ஊழியர்களும் ஜனங்களும் வருவார்கள்.”’  ‘ஆனால், நீங்கள் இந்த வார்த்தைகளின்படி நடக்காவிட்டால் இந்த அரண்மனை இடிந்து பாழாகிப்போகும் என்று என்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’+ என யெகோவா சொல்கிறார்.  யூதாவின் ராஜாவுடைய அரண்மனையைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்:‘நீ எனக்கு கீலேயாத்தைப் போலவும்,லீபனோன் மலை உச்சியைப் போலவும் இருக்கிறாய். ஆனால், நான் உன்னை ஒரு வனாந்தரமாக மாற்றிவிடுவேன்.உன்னுடைய நகரங்கள் எதிலுமே ஜனங்கள் குடியிருக்க மாட்டார்கள்.+   உன்னை அழிப்பதற்காக நான் எதிரிகளை வர வைப்பேன்.அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதங்களோடு வருவார்கள்.+ உன்னுடைய அருமையான தேவதாரு மரங்களை வெட்டிச் சாய்ப்பார்கள்.அவற்றை நெருப்பில் போடுவார்கள்.+  இந்த நகரத்தின் வழியாகப் போகிற மற்ற ஜனங்கள், “இவ்வளவு பெரிய நகரத்தை யெகோவா ஏன் இப்படி அழித்துவிட்டார்?”+ என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்கள்.  “அவர்கள் தங்களுடைய கடவுளான யெகோவாவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறி, மற்ற தெய்வங்களைக் கும்பிட்டதால்தான் அவர் அழித்துவிட்டார்”+ என்று சொல்லிக்கொள்வார்கள்.”’ 10  இறந்தவனுக்காக அழாதீர்கள்.அவனை நினைத்துத் துக்கப்படாதீர்கள். ஆனால், சிறைபிடிக்கப்பட்டுப் போகிறவனுக்காகக் கதறி அழுங்கள்.ஏனென்றால், அவன் இனி தன்னுடைய தாய்நாட்டுக்குத் திரும்பவே மாட்டான். 11  யோசியாவின் மகனும் யோசியாவுக்கு+ அடுத்ததாக யூதாவை ஆட்சி செய்த ராஜாவுமான சல்லூம்*+ இங்கிருந்து சிறைபிடிக்கப்பட்டுப் போனார். அவரைப் பற்றி யெகோவா சொல்வது இதுதான்: ‘அவன் இங்கே திரும்பி வர மாட்டான். 12  சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலேயே செத்துப்போவான். இனி இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டான்.’+ 13  கூலியாட்களுக்குக் கூலி கொடுக்காமல்,+அவர்களை ஏமாற்றி வேலை வாங்கி,தன்னுடைய அரண்மனையையும் மாடி அறைகளையும்அநியாயமாகக் கட்டுகிறவனுக்குக் கேடுதான் வரும். 14  ‘நான் ஒரு பெரிய மாளிகையைக் கட்டுவேன்.அதற்கு நிறைய ஜன்னல்களை வைப்பேன். மாடியில் பெரிய பெரிய அறைகளைக் கட்டுவேன்.சுவர்களில் தேவதாரு மரப்பலகைகளை அடித்து, சிவப்பு நிறம் பூசுவேன்’ என்று அவன் சொல்லிக்கொள்கிறான். 15  மற்ற யாரையும்விட நீதான் தேவதாரு மரத்தை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறாய் என்பதற்காக நீ எப்போதுமே ராஜாவாக இருப்பாய் என்று நினைக்கிறாயோ?உன் தகப்பனும் வயிறார சாப்பிட்டான், குடித்தான்.ஆனால், நியாயத்தோடும் நீதியோடும் நடந்துகொண்டான்.+ அதனால், சந்தோஷமாக வாழ்ந்தான். 16  ஏழை எளியவர்களுக்காக வாதாடினான்.அதனால், அவனுக்கு எல்லாமே நல்லபடியாக நடந்தது. ‘அவன் என்னைப் பற்றி எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான்!’ என்று யெகோவா சொல்கிறார். 17  ‘ஆனால், நீ அநியாயமாக லாபம் சம்பாதிக்கவும்,அப்பாவிகளைக் கொன்று குவிக்கவுமே ஆசைப்படுகிறாய். மோசடி செய்வதிலும் பணம் பறிப்பதிலுமே குறியாக இருக்கிறாய்.’ 18  அதனால், யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமாகிய யோயாக்கீமைப்+ பற்றி யெகோவா சொல்வது இதுதான்:‘யோயாக்கீம் சாகும்போது யாருமே ஒருவரை ஒருவர் பார்த்து, “ஐயோ, என் சகோதரனே! ஐயோ, என் சகோதரியே! ஐயோ, என் எஜமானே! ஐயோ, அவருடைய மகிமை போய்விட்டதே!” என்றெல்லாம் சொல்லி ஒப்பாரி வைக்க மாட்டார்கள். 19  செத்துப்போன கழுதை எப்படி இழுத்துக்கொண்டு போகப்பட்டுஎருசலேமின் நுழைவாசல்களுக்கு வெளியே+ தூக்கி வீசப்படுமோஅப்படியே அவனும் தூக்கி வீசப்படுவான்.’+ 20  நீ லீபனோனுக்கு ஏறிப்போய்க் கதறி அழு.பாசானில் ஒப்பாரி வை.அபாரீமில்+ ஓலமிடு.உன் ஆசைக் காதலர்கள் எல்லாரும் அழிந்துபோனார்களே.+ 21  நீ கவலையில்லாமல் வாழ்ந்தபோது நான் உன்னிடம் பேசினேன். ஆனால், ‘உங்கள் பேச்சைக் கேட்க மாட்டேன்’+ என்று நீ சொன்னாய். சிறு வயதிலிருந்தே இப்படித்தான் நடந்திருக்கிறாய்.என் பேச்சை மதிக்கவே இல்லை.+ 22  உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று துரத்தியடிக்கும்.+உன் ஆசைக் காதலர்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள். உனக்கு வந்த கதியை நினைத்து நீ கூனிக்குறுகுவாய். 23  லீபனோனில்+ குடியிருக்கிறவளே,தேவதாரு மரங்களுக்கு+ நடுவே வாழ்கிறவளே,வேதனை வரும்போது நீ கதறி அழுவாய்!பிரசவ வலியில் துடிக்கிற பெண்ணைப் போலத் துடிதுடிப்பாய்!+ 24  யெகோவா சொல்வது இதுதான்: ‘யோயாக்கீமின்+ மகனும் யூதாவின் ராஜாவுமான கோனியாவே,*+ நீ என் வலது கையில் ஒரு முத்திரை மோதிரமாக இருந்தாலும் நான் உன்னைக் கழற்றி எறிவேன்! இதை என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.* 25  உன்னைக் கொல்லத் துடிக்கிறவர்களின் கையில் உன்னைக் கொடுத்துவிடுவேன். நீ பயந்து நடுங்குகிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயர்களின் கையிலும் உன்னைக் கொடுத்துவிடுவேன்.+ 26  உன்னையும் உன்னைப் பெற்றெடுத்தவளையும் வேறொரு தேசத்துக்குத் துரத்தியடிப்பேன். நீங்கள் அங்கேயே செத்துவிடுவீர்கள். 27  நீங்கள் திரும்பிவரத் துடிக்கிற தேசத்துக்குத் திரும்பிவரவே மாட்டீர்கள்.+ 28  இந்த மனுஷனாகிய கோனியா உடைத்தெறியப்பட்ட ஒரு பானையா?யாருக்குமே தேவைப்படாத ஒரு பாத்திரமா? அவனும் அவன் சந்ததியும் ஏன் துரத்தப்படுகிறார்கள்?முன்பின் தெரியாத தேசத்துக்குள் ஏன் தள்ளப்படுகிறார்கள்?’+ 29  பூமியே,* பூமியே, பூமியே, யெகோவாவின் செய்தியைக் கேள். 30  யெகோவா சொல்வது இதுதான்: ‘இவனுக்கு வாரிசே இல்லை என்றும்,வாழ்க்கையில் இவன் வெற்றி பெறவே மாட்டான் என்றும் எழுதுங்கள்.ஏனென்றால், இவனுடைய பிள்ளைகள் யாருமே தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார மாட்டார்கள்.அவர்கள் யாருமே இனி யூதாவை ஆட்சி செய்ய மாட்டார்கள்.’”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “அநாதைகளுக்கும்.”
யோவாகாஸ் என்றும் அழைக்கப்படுகிறார்.
வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
யோயாக்கீன் என்றும் எகொனியா என்றும்கூட அழைக்கப்படுகிறார்.
வே.வா., “தேசமே.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா