எரேமியா 28:1-17

28  அதே வருஷத்தில், அதாவது சிதேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த நான்காம் வருஷம் ஐந்தாம் மாதத்தில், கிபியோனைச்+ சேர்ந்த ஆசூரின் மகனாகிய அனனியா தீர்க்கதரிசி யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தான். அங்கே குருமார்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் முன்னால் என்னிடம் இப்படிச் சொன்னான்:  “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை நான் உடைத்துப்போடுவேன்.+  பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் யெகோவாவின் ஆலயத்திலிருந்து கொண்டுபோன எல்லா பாத்திரங்களையும் இரண்டே வருஷத்தில் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன்.’”+  “யெகோவா சொல்வது இதுதான்: ‘யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின்+ மகன் எகொனியாவையும்+ யூதாவிலிருந்து பாபிலோனுக்குச்+ சிறைபிடிக்கப்பட்டுப் போன மற்ற எல்லா ஜனங்களையும் நான் மறுபடியும் இங்கே கொண்டுவருவேன். பாபிலோன் ராஜாவின் நுகத்தடியை உடைத்துப்போடுவேன்.’”  அப்போது எரேமியா தீர்க்கதரிசி, யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த குருமார்களுக்கும் ஜனங்களுக்கும் முன்னால் அனனியா தீர்க்கதரிசியிடம்,  “ஆமென்!* யெகோவா இதைச் செய்யட்டும்! யெகோவா நீ சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றட்டும்! யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட பாத்திரங்களையும் அங்கே சிறைபிடிக்கப்பட்டுப் போன ஜனங்களையும் அவர் மறுபடியும் இங்கே கொண்டுவரட்டும்!  ஆனால், இப்போது நான் உனக்கும் இந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் சொல்லப்போகிற செய்தியைத் தயவுசெய்து கேள்.  எனக்கும் உனக்கும் முன்னால் வாழ்ந்த தீர்க்கதரிசிகள், பல தேசங்களையும் பெரிய ராஜ்யங்களையும் பற்றித் தீர்க்கதரிசனம் சொன்னபோது, போரும் பேராபத்தும் கொள்ளைநோயும் வருமென்றுதான் சொன்னார்கள்.  அப்படியிருக்கும்போது, சமாதானம் வருமென்று ஒரு தீர்க்கதரிசி சொன்னால், அவர் சொன்னபடி நடக்க வேண்டும். அப்போதுதான், அவர் உண்மையிலேயே யெகோவாவினால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பது தெரியவரும்” என்றார். 10  அதைக் கேட்டதும் அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்டான்.+ 11  பின்பு எல்லா ஜனங்களுக்கும் முன்பாக, “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதேபோல், இரண்டே வருஷத்தில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியை எல்லா தேசத்தாருடைய கழுத்திலிருந்தும் நான் எடுத்து உடைத்துப்போடுவேன்’”+ என்று சொன்னான். அப்போது, எரேமியா தீர்க்கதரிசி அங்கிருந்து கிளம்பிப் போனார். 12  அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்ட சம்பவத்துக்குப் பின்பு யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 13  “நீ அனனியாவிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ மர நுகத்தடிகளை உடைத்தாய்.+ ஆனால், அவற்றுக்குப் பதிலாக இரும்பு நுகத்தடிகளை உண்டாக்குவாய்.” 14  இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு அடிபணியும்படி இந்த எல்லா தேசத்தார்மேலும் நான் இரும்பு நுகத்தடியை வைப்பேன். அவர்கள் அவனுக்கு அடிபணிய வேண்டும்.+ காட்டு மிருகங்களைக்கூட நான் அவனுக்கு அடிபணிய வைப்பேன்”’+ என்று சொல்ல வேண்டும்.” 15  பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம்,+ “அனனியாவே, தயவுசெய்து கேள்! யெகோவா உன்னை அனுப்பவில்லை. நீ பொய் பேசி இந்த ஜனங்களை ஏமாற்றியிருக்கிறாய்.+ 16  அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை இந்த உலகத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவேன். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக நீ ஜனங்களைத் தூண்டியதால் இந்த வருஷமே செத்துப்போவாய்’”+ என்று சொன்னார். 17  அதன்படியே, அனனியா தீர்க்கதரிசி அந்த வருஷம் ஏழாம் மாதம் இறந்துபோனான்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா