எரேமியா 30:1-24

30  எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து கிடைத்த செய்தி இதுதான்:  “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் உன்னிடம் சொல்கிற எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது.  “காலம் வரப்போகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அப்போது, இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்துக்கே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் மறுபடியும் அங்கே குடியிருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”  இஸ்ரவேல் ஜனங்களிடமும் யூதா ஜனங்களிடமும் யெகோவா சொன்ன வார்த்தைகள் இவை.   யெகோவா சொல்வது இதுதான்: “அலறல் சத்தம் கேட்கிறது.எங்கு பார்த்தாலும் திகில்! சமாதானமே இல்லை.   ஒரு ஆண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியுமா என்று தயவுசெய்து கேட்டுப் பாருங்கள். அப்படியிருக்கும்போது, பலசாலியான ஆண்கள் ஏன் இடுப்பைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்?பிரசவ வேதனைப்படுகிற பெண்ணைப் போல ஏன் துடிக்கிறார்கள்?+ ஏன் எல்லாருடைய முகமும் வெளுத்துப்போயிருக்கிறது?   ஐயோ! அந்த நாள் பயங்கரமான நாள்!+ அதுபோல் ஒரு நாள் வந்ததே கிடையாது!அது யாக்கோபுக்கு வேதனையான நாள். ஆனாலும், அந்த வேதனையிலிருந்து அவன் விடுவிக்கப்படுவான்.”  பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “அந்த நாளில் நான் அவர்கள் கழுத்திலுள்ள நுகத்தடியை உடைத்துப்போடுவேன். அவர்களுடைய வார்களை இரண்டாக அறுத்துவிடுவேன். முன்பின் தெரியாதவர்கள்* இனி அவர்களை அடிமையாக்க மாட்டார்கள்.  அவர்களுடைய கடவுளான யெகோவாவுக்கும், அவர் கொடுக்கப்போகும் ராஜாவான தாவீதுக்கும் அவர்கள் சேவை செய்வார்கள்.”+ 10  யெகோவா சொல்வது இதுதான்: “என் ஊழியனாகிய யாக்கோபே, பயப்படாதே.இஸ்ரவேலே, திகிலடையாதே.+ தூர தேசத்திலிருந்து உன்னை விடுதலை செய்வேன்.நீ சிறைபிடிக்கப்பட்டுப் போன தேசத்திலிருந்து உன் சந்ததியைக் காப்பாற்றுவேன்.+ யாக்கோபு திரும்பி வருவான்; தொல்லை இல்லாமல் சமாதானமாக வாழ்வான்.அவனைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”+ 11  யெகோவா சொல்வது இதுதான்: “உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன். உன்னை எந்தத் தேசங்களுக்கெல்லாம் சிதறிப்போக வைத்தேனோஅந்தத் தேசங்களையெல்லாம் அழித்துவிடுவேன்.+ ஆனால், உன்னை அழிக்க மாட்டேன்.+அதேசமயம், உன்னைத் தண்டிக்காமலும் விட மாட்டேன்.+ உன்னைச் சரியான* அளவுக்குக் கண்டித்துத் திருத்துவேன்.” 12  யெகோவா சொல்வது இதுதான்: “உன் காயத்துக்கு மருந்தே இல்லை.+ உன்னுடைய புண் ஆறவே ஆறாது. 13  உனக்காகப் பரிந்து பேச யாரும் இல்லை.உன்னுடைய புண்ணுக்கு மருந்தே இல்லை. உன்னைக் குணப்படுத்த வழியே இல்லை. 14  உன் ஆசைக் காதலர்கள் உன்னை மறந்துவிட்டார்கள்.+ இப்போதெல்லாம் அவர்கள் உன்னைத் தேடி வருவதில்லை. ஏனென்றால், எதிரியைத் தாக்குவது போல நான் உன்னைத் தாக்கிவிட்டேன்.+கொடூரக்காரன் தண்டிப்பது போல உன்னைத் தண்டித்துவிட்டேன். ஏனென்றால், நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+ 15  நீ காயப்பட்டதற்காக ஏன் கூச்சல்போடுகிறாய்? உன் வலி தீரவே தீராது! நீ பெரிய பாவங்களையும் நிறைய குற்றங்களையும் செய்திருக்கிறாய்.+அதனால்தான், உன்னை இப்படித் தண்டித்திருக்கிறேன். 16  ஆனாலும், உன்னை அழிக்க நினைக்கிறவர்கள் அழிந்துபோவார்கள்.+உன்னுடைய எதிரிகள் எல்லாரும் சிறைபிடிக்கப்பட்டுப் போவார்கள்.+ உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்.உன்னைக் கொள்ளையடிக்கிற எல்லாரையும் கொள்ளைக்காரர்களின் கையில் கொடுப்பேன்.”+ 17  “அவர்கள் உன்னை ஒதுக்கப்பட்ட நகரம் என்று சொன்னாலும்,‘கேட்பாரற்ற சீயோன்’+ என்று அழைத்தாலும், நான் உன்னைச் சுகப்படுத்துவேன்; உன் காயங்களைக் குணப்படுத்துவேன்”+ என்று யெகோவா சொல்கிறார். 18  யெகோவா சொல்வது இதுதான்: “சிறைபிடிக்கப்பட்டுப் போன யாக்கோபின் சந்ததியை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன். அவர்களுடைய நகரம் மறுபடியும் மலைமேல் கட்டப்படும்.+அவர்களுடைய கோட்டை அதற்குரிய இடத்தில் அமைக்கப்படும். 19  அவர்கள் நன்றி சொல்வார்கள், சந்தோஷமாக வாய்விட்டுச் சிரிப்பார்கள்.+ அவர்களை ஏராளமாகப் பெருகப் பண்ணுவேன்,அவர்கள் குறையவே மாட்டார்கள்.+அவர்களை மாபெரும் ஜனமாக்குவேன்.* அவர்களை யாரும் அற்பமாகப் பார்க்க மாட்டார்கள்.+ 20  அவர்கள் பழைய நிலைமைக்குத் திரும்புவார்கள்.என் முன்னால் பலம்படைத்த ஜனமாக இருப்பார்கள்.+ அவர்களை அடக்கி ஒடுக்குகிற எல்லாரையும் நான் தண்டிப்பேன்.+ 21  அவர்களுடைய தலைவர் அவர்களில் ஒருவராக இருப்பார்.அவர்களுடைய ராஜா அவர்கள் மத்தியிலிருந்தே தோன்றுவார். அவரை என் பக்கத்தில் வர வைப்பேன்; அவரும் வருவார்.” “மற்றபடி என் பக்கத்தில் வர யாருக்குத் துணிச்சல் வரும்?” என்று யெகோவா கேட்கிறார். 22  “நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்,+ நான் உங்கள் கடவுளாக இருப்பேன்.”+ 23  இதோ! யெகோவாவின் கோபம் புயல்காற்றாய் வீசும்.+கெட்டவர்களின் தலைமேல் அது படுபயங்கரமான சூறாவளியாகச் சுழற்றியடிக்கும். 24  நினைத்ததைச் செய்து முடிக்கும்வரையெகோவாவின் கடும் கோபம் தணியாது.+ கடைசி நாட்களில் இதைப் புரிந்துகொள்வீர்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “வேறு தேசத்தார்.”
வே.வா., “நியாயமான.”
அல்லது, “அவர்களைப் பெருமைப்படுத்துவேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா