எரேமியா 42:1-22

42  பின்பு எல்லா படைத் தலைவர்களும், கரேயாவின் மகன் யோகனானும்,+ ஒசாயாவின் மகன் யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லா ஜனங்களும் எரேமியா தீர்க்கதரிசியிடம் வந்து,  “தயவுசெய்து எங்களுக்கு ஒரு உதவி செய்யுங்கள். நாங்கள் கொஞ்சம் பேர்தான் மிச்சமிருக்கிறோம்,+ அதை நீங்களே பார்க்கிறீர்கள். அதனால், உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.  நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் உங்கள் கடவுளாகிய யெகோவா எங்களுக்குச் சொல்லட்டும்” என்றார்கள்.  அதற்கு எரேமியா தீர்க்கதரிசி, “சரி, நீங்கள் கேட்டுக்கொண்டபடியே உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன். யெகோவா உங்களிடம் சொல்லச் சொல்கிற எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் சொல்கிறேன்” என்றார்.  அப்போது அவர்கள் எரேமியாவிடம், “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் மூலமாகச் சொல்வதை நாங்கள் அப்படியே செய்யாவிட்டால் அவர் எங்களைத் தண்டிக்கட்டும். இதற்கு யெகோவாவே உண்மையான சாட்சி, அவரே நம்பகமான சாட்சி.  எங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்படி நாங்கள் உங்களைக் கேட்டுக்கொண்டோம். அதனால், எங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, எங்கள் கடவுளாகிய யெகோவா சொல்கிறபடியே செய்வோம். அவருடைய பேச்சுக்குக் கீழ்ப்படிந்தால்தான் எங்களால் சந்தோஷமாக வாழ முடியும்” என்று சொன்னார்கள்.  பத்து நாட்கள் கழித்து எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது.  அதனால் அவர் கரேயாவின் மகன் யோகனானையும், அவரோடு இருந்த படைத் தலைவர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லா ஜனங்களையும் வரச் சொன்னார்.+  அவர்களிடம், “உங்களுக்காக இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளும்படி என்னிடம் கேட்டுக்கொண்டீர்களே. அவர் சொல்வது இதுதான்: 10  ‘நீங்கள் இந்தத் தேசத்திலேயே இருந்தால் நான் உங்களைக் கட்டி எழுப்புவேன், கவிழ்க்க மாட்டேன். உங்களை நட்டு வளர்ப்பேன், பிடுங்கியெறிய மாட்டேன். உங்களுக்குக் கொடுத்த தண்டனையை நினைத்து வருத்தப்படுவேன்.+ 11  நீங்கள் பாபிலோன் ராஜாவை நினைத்து இனி பயப்படாதீர்கள்.’+ யெகோவா சொல்வது இதுதான்: ‘அவனைப் பார்த்து நடுங்காதீர்கள். ஏனென்றால், அவனுடைய கையிலிருந்து உங்களை விடுவிப்பதற்கும் உங்களைக் காப்பாற்றுவதற்கும் நான் உங்களோடு இருக்கிறேன். 12  நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்,+ அவனும் உங்களுக்கு இரக்கம் காட்டி உங்கள் தேசத்துக்கே உங்களை அனுப்பி வைப்பான். 13  ஆனால், நம் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காமல், “நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்க மாட்டோம்!” என்றும், 14  “எகிப்து தேசத்துக்குப் போய்விடுவோம்.+ அங்குதான் போர் இருக்காது, ஊதுகொம்பின் சத்தம் கேட்காது, பசி பட்டினி இருக்காது. அதனால் அங்குதான் வாழ்வோம்” என்றும் சொன்னால், 15  யூதாவில் மிஞ்சியிருக்கிறவர்களே, யெகோவா சொல்வதைக் கேளுங்கள். இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “எகிப்துக்குப் போயே தீர வேண்டும் என்று நீங்கள் சொல்லிக்கொண்டு, அங்கே போய்* வாழ்ந்தால், 16  இப்போது எதற்குப் பயப்படுகிறீர்களோ அதே வாளும் பஞ்சமும் எகிப்து தேசத்துக்கே வந்து உங்களைத் தாக்கும். நீங்கள் அங்கேயே செத்துப்போவீர்கள்.+ 17  எகிப்துக்குப் போயே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிற எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள். நான் கொடுக்கப்போகிற தண்டனையிலிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது.”’ 18  இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எகிப்துக்குப் போனால், எருசலேம் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபத்தைக் காட்டியது போலவே உங்கள் மேலும் காட்டுவேன்.+ உங்களுக்கு வரும் கோர முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்கிப்போவார்கள். அவர்கள் உங்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ நீங்கள் மறுபடியும் இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டீர்கள்.’ 19  யூதாவில் மிஞ்சியிருக்கிறவர்களே, நீங்கள் எகிப்துக்குப் போகக் கூடாதென்று யெகோவா சொல்லியிருக்கிறார். இன்று நான் கொடுக்கும் எச்சரிப்பை நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்: 20  நீங்கள் கடவுளுடைய பேச்சை மீறினால் உயிரையே இழந்துவிடுவீர்கள். நீங்கள் என்னிடம், ‘எங்கள் கடவுளான யெகோவாவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எங்கள் கடவுளான யெகோவா சொல்வதையெல்லாம் சொல்லுங்கள். நாங்கள் அப்படியே செய்கிறோம்’+ என்றெல்லாம் சொல்லி, உங்கள் கடவுளான யெகோவாவிடம் என்னை விசாரிக்கச் சொன்னீர்களே. 21  அவர் சொன்னதைத்தான் நான் இன்று உங்களிடம் சொன்னேன். ஆனால் நம் கடவுளான யெகோவாவுக்கு நீங்கள் கீழ்ப்படிய மாட்டீர்கள். அவர் என் மூலமாகச் சொன்ன எதையுமே செய்ய மாட்டீர்கள்.+ 22  அதனால், எங்கே போய் வாழ நினைக்கிறீர்களோ அங்கேயே வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் நீங்கள் பலியாகப்போவது உறுதி”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கொஞ்சக் காலத்துக்கு அங்கே போய்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா