எஸ்றா 10:1-44

10  இப்படி, எஸ்றா உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து, கண்ணீரோடு ஜெபம் செய்துகொண்டும்,+ பாவங்களை ஒத்துக்கொண்டும் இருந்தார். அப்போது ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என இஸ்ரவேலர்கள் பெருங்கூட்டமாக வந்து அவரைச் சூழ்ந்துகொண்டு, கதறி அழுதார்கள்.  பின்பு, ஏலாம் வம்சத்தைச்+ சேர்ந்த யெகியேலின்+ மகன் செக்கனியா எஸ்றாவிடம், “நாங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து,* கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டோம்.+ ஆனாலும், இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.  இப்போது, நம் கடவுளாகிய யெகோவாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து,+ அந்தப் பெண்களையும் அவர்களுடைய பிள்ளைகளையும் அனுப்பிவிடலாம். கடவுளுடைய அறிவுரை அதுதான்; அவருடைய கட்டளைகளுக்குப் பயந்து வாழ்கிறவர்களுடைய+ ஆலோசனையும் அதுதான். நாம் திருச்சட்டம் சொல்கிறபடியே நடக்கலாம்.  எழுந்திருங்கள், இது உங்கள் கடமை. நாங்கள் உங்களோடு இருப்போம். தைரியமாக நடவடிக்கை எடுங்கள்” என்று சொன்னார்.  உடனே எஸ்றா எழுந்து, “இதைச் செய்வதாக உறுதிமொழி கொடுங்கள்” என்று முதன்மை குருமார்களிடமும் லேவியர்களிடமும் இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் கேட்டார்.+ அவர்களும் உறுதிமொழி கொடுத்தார்கள்.  பின்பு, எஸ்றா உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் முன்னாலிருந்து எழுந்து எலியாசிபின் மகனான யெகோனானின் அறைக்குள்* போனார். ஆனாலும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் செய்திருந்த பாவத்தை நினைத்துத் துக்கப்பட்டுக்கொண்டிருந்ததால் எஸ்றா எதையும் சாப்பிடவில்லை, தண்ணீர்கூட குடிக்கவில்லை.+  அதன்பின், சிறையிருப்பிலிருந்து வந்த எல்லாரும் எருசலேமில் கூடிவர வேண்டுமென்று யூதாவிலும் எருசலேமிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.  மூன்று நாட்களுக்குள் வந்து சேராதவர்களின் பொருள்கள் எல்லாமே பறிமுதல் செய்யப்படும் என்றும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்களின் சபையிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகளும் பெரியோர்களும்* முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.+  அதன்படியே யூதா, பென்யமீன் கோத்திரங்களைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரும் மூன்று நாட்களுக்குள் எருசலேமில் ஒன்றுகூடி வந்தார்கள். அதாவது, ஒன்பதாம் மாதம் 20-ஆம் நாளில் கூடி வந்தார்கள். ஜனங்கள் எல்லாரும் என்ன நடக்குமோ என்று பயந்துபோயிருந்தார்கள். மழை வேறு பலமாகப் பெய்துகொண்டிருந்தது. அதனால் அவர்கள் நடுங்கியபடியே, உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தார்கள். 10  குருவான எஸ்றா எழுந்து அவர்களிடம், “நீங்கள் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்து கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டீர்கள்.+ இப்படி, இஸ்ரவேல் சுமக்கிற குற்றத்தைக் கூட்டிவிட்டீர்கள். 11  அதனால், உங்கள் முன்னோர்களின் கடவுளான யெகோவாவிடம் உங்களுடைய பாவத்தை ஒத்துக்கொண்டு, அவருக்குப் பிரியமானதைச் செய்யுங்கள். வேறு தேசத்து ஜனங்களையும் மனைவிகளையும் விட்டுவிலகுங்கள்”+ என்றார். 12  அப்போது சபையார் எல்லாரும் மிகுந்த சத்தமாக, “நீங்கள் சொன்னபடியே செய்கிறோம், இது எங்கள் கடமை. 13  ஆனால் நாங்கள் நிறைய பேர் இருக்கிறோம், மழை வேறு பெய்வதால் வெளியிலேயே நின்றுகொண்டிருக்க முடியாது. அதோடு, நாங்கள் மகா பெரிய பாவம் செய்திருப்பதால் ஒன்று, இரண்டு நாட்களில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. 14  அதனால், தயவுசெய்து சபையார் எல்லாருடைய சார்பாகவும் எங்களுடைய அதிகாரிகள் மட்டும் இங்கு இருக்கட்டும்.+ வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருக்கிற எல்லாரும் அவரவர் நகரத்தின் பெரியோர்களுடனும் நீதிபதிகளுடனும் குறிக்கப்பட்ட ஒரு நாளில் வரட்டும். கடவுளுடைய கடும் கோபத்தைத் தணிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யட்டும்” என்றார்கள். 15  ஆனால் ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்வாவின் மகன் யக்சியாவும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். லேவியர்களான மெசுல்லாமும் சபெதாயும்+ அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். 16  ஆனாலும், சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள், மற்ற எல்லாரும் ஒத்துக்கொண்டபடியே செய்தார்கள். குருவாகிய எஸ்றாவும், பெயர்ப் பட்டியலில் இருந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்களும் பத்தாம் மாதம் முதலாம் நாளில் விசாரணைக்காகக் கூடி வந்தார்கள். 17  வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருந்த எல்லாரையும் முதலாம் மாதம் முதலாம் நாளுக்குள் விசாரித்து முடித்தார்கள். 18  குருமார்களின் மகன்கள் சிலரும் வேறு தேசத்துப் பெண்களைக் கல்யாணம் செய்திருந்தது+ விசாரணையில் தெரியவந்தது. அவர்களில், யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின்+ மகன்களும் சகோதரர்களுமான மாசெயா, எலியேசர், யாரிப், கெதலியா ஆகியவர்கள் இருந்தார்கள். 19  இவர்கள் தங்களுடைய மனைவிகளை அனுப்பிவிடுவதாகவும், தாங்கள் செய்த குற்றத்துக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவைப்+ பலி செலுத்துவதாகவும் வாக்குறுதி கொடுத்தார்கள். 20  இம்மேரின் வம்சத்தார்:+ அனானி, செபதியா; 21  ஆரீமின் வம்சத்தார்:+ மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா; 22  பஸ்கூரின் வம்சத்தார்:+ எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபத், எலியாசா. 23  லேவியர்கள்: யோசபத், சீமேயி, கெலாயா (அதாவது, கேலிதா), பெத்தகியா, யூதா, எலியேசர்; 24  பாடகர்: எலியாசிப்; வாயிற்காவலர்கள்: சல்லூம், தேலெம், ஊரி. 25  இஸ்ரவேலர்களில் பாரோஷின் வம்சத்தார்:+ ரமீயா, யெசியா, மல்கீயா, மியாமின், எலெயாசார், மல்கீயா, பெனாயா; 26  ஏலாமின் வம்சத்தார்:+ மத்தனியா, சகரியா, யெகியேல்,+ அப்தி, எரேமோத், எலியா; 27  சத்தூவின் வம்சத்தார்:+ எலியோனாய், எலியாசிப், மத்தனியா, எரேமோத், சாபாத், அசிசா; 28  பெபாயின் வம்சத்தார்:+ யெகோனான், அனனியா, சாபாய், அத்லாயி; 29  பானியின் வம்சத்தார்: மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசூப், செயால், எரேமோத்; 30  பாகாத்-மோவாபின் வம்சத்தார்:+ அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூய், மனாசே; 31  ஆரீமின் வம்சத்தார்:+ எலியேசர், இஸியா, மல்கீயா,+ செமாயா, ஷிமியோன், 32  பென்யமீன், மல்லூக், செமரியா; 33  ஆசூமின் வம்சத்தார்:+ மத்னாய், மத்தத்தா, சாபாத், எலிப்பேலேத், எரெமாய், மனாசே, சீமேயி; 34  பானியின் வம்சத்தார்: மாதாய், அம்ராம், ஊவேல், 35  பெனாயா, பெதியா, கெல்லூ, 36  வனியா, மெரெமோத், எலியாசிப், 37  மத்தனியா, மத்னாய், யாசாய்; 38  பின்னூயின் வம்சத்தார்: சீமேயி, 39  செலேமியா, நாத்தான், அதாயா, 40  மக்நாத்பாய், சாசாய், ஷாராய், 41  அசரெயேல், செலேமியா, செமரியா, 42  சல்லூம், அமரியா, யோசேப்பு; 43  நேபோ ஊர் ஆண்கள்: எயியேல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா. 44  இவர்கள் எல்லாரும் வேறு தேசத்தைச் சேர்ந்த தங்கள் மனைவிகளையும்+ அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளையும் அனுப்பிவிட்டார்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “வீட்டிற்கு அழைத்துவந்து.”
வே.வா., “சாப்பாட்டு அறைக்குள்.”
வே.வா., “மூப்பர்களும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா