ஏசாயா 11:1-16
11 ஈசாய்+ என்ற அடிமரத்திலிருந்து ஒரு துளிர்+ துளிர்க்கும்.அதன் வேர்களிலிருந்து ஒரு தளிர்+ முளைத்து கனி தரும்.
2 யெகோவாவின் சக்தி அவர்மேல்* தங்கியிருக்கும்.+அது அவருக்கு ஞானத்தையும்,+ புரிந்துகொள்ளும் திறனையும்,அறிவுரை சொல்லும் ஆற்றலையும், வல்லமையையும்,+அறிவையும், யெகோவாவைப் பற்றிய பயத்தையும் கொடுக்கும்.
3 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதில் அவர் சந்தோஷப்படுவார்.+
கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார்.காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார்.+
4 பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.தாழ்மையானவர்களின்* சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்.
பூமியைத் தன் வாயின் கோலால் தாக்குவார்.+கெட்டவர்களைத் தன் வாயின் சுவாசத்தால் கொன்றுபோடுவார்.+
5 நீதி அவருக்கு இடுப்புவார் போல இருக்கும்.நம்பகத்தன்மை* அவருக்கு இடுப்புக்கச்சை போல இருக்கும்.+
6 அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.
7 பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்.
சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+
8 பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்புப் புற்றின் மேல் விளையாடும்.பால் மறந்த பிள்ளை விஷப் பாம்பின் பொந்தில் தன் கையை விடும்.
9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+எந்தக் கேடும் வராது.+ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+
10 அந்த நாளில், ஈசாயின் வேராக+ இருப்பவர் ஜனங்களுக்கு ஒரு கொடிக் கம்பம் போல நிற்பார்.+
பல தேசத்து ஜனங்கள் அவரைத் தேடி* வருவார்கள்.+அவர் தங்கும் இடம் மகிமையால் நிறைந்திருக்கும்.
11 அந்த நாளில், யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்வதற்காக இரண்டாவது தடவை கைகொடுப்பார். அசீரியாவிலிருந்தும்,+ எகிப்திலிருந்தும்,+ பத்ரோசிலிருந்தும்,+ கூஷிலிருந்தும்,+ ஏலாமிலிருந்தும்,+ சினேயாரிலிருந்தும்,* காமாத்திலிருந்தும், தீவுகளிலிருந்தும்+ அவர்களைத் திரும்பி வரச் செய்வார்.
12 எல்லா தேசங்களும் பார்க்கிற விதமாக ஒரு கொடிக் கம்பத்தை நாட்டி, சிதறிப்போன இஸ்ரவேல் ஜனங்களைக் கூட்டிச் சேர்ப்பார்;+ பூமியின் நாலாபக்கத்துக்கும் துரத்தியடிக்கப்பட்ட யூதா ஜனங்களை ஒன்றுசேர்ப்பார்.+
13 எப்பிராயீமுக்கு இருந்த பொறாமை ஒழிந்துபோகும்.+யூதாவைப் பகைக்கிறவர்கள் அழிந்துபோவார்கள்.
இனி எப்பிராயீமுக்கு யூதாமேல் பொறாமை இருக்காது.யூதாவுக்கு எப்பிராயீம்மேல் பகை இருக்காது.+
14 அவர்கள் மேற்கிலுள்ள பெலிஸ்தியர்களின் சரிவான பகுதிகளுக்குப் பாய்ந்து வருவார்கள்.கிழக்கிலுள்ள ஜனங்களிடம் இருப்பதையெல்லாம் கைப்பற்றுவார்கள்.
ஏதோமையும் மோவாபையும் தோற்கடிப்பார்கள்.+அம்மோன் ஜனங்களை அடிபணிய வைப்பார்கள்.+
15 எகிப்திய கடலின் விரிகுடாவை யெகோவா பிளப்பார்.*+ஆற்றின் மேல்* தன்னுடைய கையை ஓங்குவார்.+
அனல் வீசும் தன்னுடைய மூச்சுக்காற்றை அதன் ஏழு நீரோடைகள்மேலும் வீச வைப்பார்.*ஜனங்கள் அதைக் கடந்து போவதற்கு* வழிசெய்வார்.
16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.
அடிக்குறிப்புகள்
^ அதாவது, ஒன்றாம் வசனத்தில் “துளிர்” என்றும் “தளிர்” என்றும் சொல்லப்படுகிறவர்.
^ வே.வா., “சாந்தமானவர்களின்.”
^ வே.வா., “உண்மைத்தன்மை.”
^ நே.மொ., “மிருகமும்.”
^ அல்லது, “கன்றுக்குட்டியும் சிங்கமும் சேர்ந்து மேயும்.”
^ வே.வா., “வழிநடத்துதலுக்காக அவரிடம்.”
^ அதாவது, “பாபிலோனியாவிலிருந்தும்.”
^ அல்லது, “வற்றச் செய்வார்.”
^ அதாவது, “யூப்ரடிஸ் ஆற்றின் மேல்.”
^ அல்லது, “அதை அடித்து ஏழு நீரோடைகளாக ஆக்குவார்.”
^ நே.மொ., “செருப்புகள் போட்டபடி கடந்து போவதற்கு.”