ஏசாயா 15:1-9

15  மோவாபுக்கு எதிரான தீர்ப்பு:+ மோவாபின் ஆர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.அதன் சத்தம் அடங்கிவிடும். மோவாபின் கீர் நகரம்+ ஒரே ராத்திரியில் அழிக்கப்படும்.அதன் சத்தம் அடங்கிவிடும்.   கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள். நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள். எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+   தெருக்களில் துக்கத் துணி* போட்டுக்கொண்டு திரிவார்கள். பொது சதுக்கங்களுக்கும் மொட்டைமாடிகளுக்கும் போய் ஒப்பாரி வைப்பார்கள்.அழுதுகொண்டே இறங்கி வருவார்கள்.+   எஸ்போன், எலெயாலே நகரங்களில்+ கதறல் சத்தம் கேட்கும்.யாகாஸ்+ வரைக்கும் அந்தச் சத்தம் எட்டும். அதைக் கேட்டு மோவாபின் வீரர்கள் அலறுவார்கள். பயந்து நடுங்குவார்கள்.   மோவாபை நினைத்து என் நெஞ்சம் துடிக்கும். அதன் ஜனங்கள் சோவார்+ வரைக்கும் எக்லாத்து-செலிசியா வரைக்கும் தப்பித்து ஓடுவார்கள்.+ கண்ணீரோடு லூகித் நகரத்துக்கு ஏறிப்போவார்கள்.ஒரோனாயீமுக்குப் போகும் வழியிலே, தேசத்தின் அழிவைப் பார்த்து அலறுவார்கள்.+   நிம்ரீமின் தண்ணீர் வற்றிப்போகும்.பசும்புல் கருகிப்போகும்.புல்பூண்டுகள் எல்லாமே காய்ந்து காணாமல் போகும்.   அதனால் அவர்களுடைய சேமிப்புகளிலும் சொத்துகளிலும் மிச்சம் இருப்பதை எடுத்துக்கொண்டு போவார்கள்.காட்டரசு மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கை* தாண்டிப் போவார்கள்.   மோவாப் தேசமெங்கும் கூக்குரல் கேட்கும்.+ எக்லாயிம் வரைக்கும் அலறல் சத்தம் எட்டும்.பெயெர்-எலீம் வரைக்கும் அது எட்டும்.   திமோனின் தண்ணீர் இரத்தமாகும்.திமோனுக்கு இன்னும் அதிக தண்டனை கொடுப்பேன்: ஒரு சிங்கத்தை அனுப்புவேன்.மோவாபில் மீதியாக இருக்கிறவர்களையும் தப்பித்து ஓடுகிறவர்களையும் அது கடித்துக் குதறும்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அவன் போவான்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா