ஏசாயா 16:1-14
16 தேசத்தின் ஆட்சியாளருக்கு ஒரு செம்மறியாட்டுக் கடாவை அனுப்புங்கள்.அதை சாலாவிலிருந்து வனாந்தரம் வழியாக,சீயோன் மகளுடைய மலைக்கு அனுப்புங்கள்.
2 கூட்டிலிருந்து விரட்டப்பட்ட பறவையைப் போல,+மோவாப் மக்கள் துரத்தப்பட்டு அர்னோன்+ ஆற்றுத்துறைகளில்* இருப்பார்கள்.
3 “ஆலோசனை சொல்லுங்கள், தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.
நடுப்பகலிலே இரவு போன்ற இருட்டான நிழலைத் தந்து பாதுகாப்பு கொடுங்கள்.
துரத்தப்பட்டவர்களை ஒளித்துவையுங்கள், அவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
4 மோவாபே, துரத்தப்பட்ட என் ஜனங்கள் உன்னிடம் தங்கட்டும்.
அவர்களை அழிக்க நினைப்பவனிடமிருந்து அவர்களைக் காப்பாற்று.+
ஒடுக்குபவன் ஒழிந்துபோவான்.அழிவு முடிவுக்கு வரும்.மற்றவர்களை ஏறி மிதிப்பவன் பூமியிலிருந்து அழிந்துபோவான்.
5 அப்போது, மாறாத அன்பினால் ஒரு சிம்மாசனம் உறுதியாக நிலைநிறுத்தப்படும்.
அது தாவீதின் கூடாரத்தில் இருக்கும்; அதில் உட்காரும் ராஜா உண்மையுள்ளவராக இருப்பார்.+அவர் நியாயமாகத் தீர்ப்பு சொல்வார், உடனுக்குடன் நீதி வழங்குவார்.”+
6 மோவாப் பெருமைபிடித்து அலைகிறான்.+அவனுடைய ஆணவத்தையும் அகம்பாவத்தையும் ஆவேசத்தையும்+ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால், அவனுடைய பெருமைப் பேச்செல்லாம் வெற்றுப் பேச்சாகிவிடும்.
7 மோவாப் தனக்கு வரும் அழிவைப் பார்த்து அழுது புலம்புவான்.அவனுடைய ஜனங்கள் எல்லாருமே அழுது புலம்புவார்கள்.+
அடிவாங்கியவர்கள் கீர்-ஆரேசேத் தேசத்தின் உலர்ந்த திராட்சை அடைகளுக்காக ஏங்கி அழுவார்கள்.+
8 எஸ்போனின்+ திராட்சைத் தோட்டங்கள் காய்ந்துவிட்டன.சிப்மாவின்+ திராட்சைக் கொடி பட்டுப்போய்விட்டது.அதன் கிளைகளில் தொங்கும் சிவப்பு திராட்சைகளை* மற்ற தேசத்து ஆட்சியாளர்கள் மிதித்துப் போட்டார்கள்.அதன் கிளைகள் யாசேர்+ வரையும்,வனாந்தரம் வரையும் படர்ந்திருந்தன.
அவை கடல்வரை எட்டியிருந்தன.
9 அதனால்தான், யாசேருக்காக அழுவது போல சிப்மாவுக்காக அழுவேன்.
எஸ்போனே, எலெயாலே, என் கண்ணீரால் உங்களை நனைப்பேன்.+ஏனென்றால், கோடைக் காலத்துப் பழங்களையும் அறுவடையையும் பார்த்து நீங்கள் அடைந்த சந்தோஷம் முடிவுக்கு வந்தது.*
10 பழத் தோட்டங்களிலிருந்து சந்தோஷமும் மகிழ்ச்சியும் பறிக்கப்பட்டது.திராட்சைத் தோட்டங்களில் சந்தோஷப் பாடல்களோ ஆரவாரமோ கேட்கவில்லை.+
திராட்சரச ஆலைகளில் திராட்சைகள் மிதிக்கப்படவில்லை.ஏனென்றால், அவர்களுடைய சந்தோஷ ஆரவாரத்துக்கு நான் முடிவுகட்டினேன்.+
11 அதனால்தான், மோவாபையும் கீர்-ஆரேசேத் நகரத்தையும் நினைத்துஎன் உள்ளம் உருகுகிறது.+யாழின் நரம்புகள்போல் துடிக்கிறது.
12 மோவாப் என்னதான் கஷ்டப்பட்டு ஆராதனை மேட்டுக்குப் போய்வந்தாலும், கோயிலுக்குப் போய் வேண்டிக்கொண்டாலும் அவனால் எதையும் சாதிக்க முடியாது.+
13 இதுதான் மோவாப் பற்றி முன்பு யெகோவா சொன்ன செய்தி.
14 இப்போது யெகோவா சொல்வது இதுதான்: சரியாக* மூன்றே வருஷத்தில் மோவாபின் மேன்மை மங்கிவிடும். எங்கு பார்த்தாலும் குழப்பமும் கலவரமுமாக இருக்கும். கொஞ்சம் பேரே மிஞ்சியிருப்பார்கள், அவர்களும் அற்பமானவர்களாக இருப்பார்கள்.”+
அடிக்குறிப்புகள்
^ ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதிகள்.
^ வே.வா., “அதன் செக்கச்செவேல் என்ற கிளைகளை.”
^ அல்லது, “கோடைக் காலத்துப் பழங்களை நீங்கள் அறுத்தபோது போர் முழக்கம் கேட்டது.”
^ நே.மொ., “ஒரு கூலியாளின் வருஷங்களின்படி.”