ஏசாயா 27:1-13

27  அந்த நாளில், யெகோவா லிவியாதானை* தாக்குவார்.அதைக் கூர்மையான, பயங்கரமான வாளால் தாக்குவார்.+வளைந்து நெளிந்து போகும் அந்தப் பாம்பைத் தண்டிப்பார்.கடலில் வாழும் அந்த ராட்சதப் பிராணியைக் கொன்றுபோடுவார்.   அந்த நாளில், அவளை* பார்த்து இப்படிப் பாடுங்கள்: “திராட்சமதுவை* தரும் திராட்சைத் தோட்டமே!+   யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவளைப் பாதுகாக்கிறேன்.+ தண்ணீர் ஊற்றி ஊற்றி அவளை வளர்க்கிறேன்.+ ராப்பகலாக அவளைக் காவல் காக்கிறேன்.யாரும் அவள்மேல் கை வைக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்.+   அவள்மேல் எனக்கு இருந்த கோபம் போய்விட்டது.+ முட்செடிகளையும் களைகளையும் அவள் நடுவிலே நடுபவன் யார்? அவனோடு நான் போர் செய்வேன். அவன் நடுவதையெல்லாம் மிதித்துப்போட்டு, கொளுத்திவிடுவேன்.   அதனால், என்னோடு அவன் சமாதானமாகட்டும். என்னோடு சமாதானம் செய்துகொள்ளட்டும்.என் கோட்டைக்குள் போய்ப் பாதுகாப்பாக இருக்கட்டும்.’”   இனிவரும் நாட்களில் யாக்கோபின் ஜனங்கள் வேர்விட்டு வளருவார்கள்.இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவார்கள்.+அவர்களுடைய கனிகளால் தேசம் நிறைந்திருக்கும்.+   இஸ்ரவேலர்கள் கடுமையாகத் தாக்கப்பட வேண்டுமா? அவர்கள் வெட்டிச் சாய்க்கப்பட வேண்டுமா?   மிரள வைக்கும் சத்தத்தோடு அவர்களிடம் அவர் வழக்காடுவார், அவர்களைத் துரத்தியடிப்பார். கிழக்கிலிருந்து வீசும் பலமான காற்றைப் போல மோதித்தள்ளுவார்.+   இப்படி, யாக்கோபின் ஜனங்கள் செய்த குற்றத்துக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+அவர்களுடைய பாவம் நீக்கப்படும்போது கிடைக்கும் பலன் இதுதான்: பலிபீடத்தின் கற்களையெல்லாம் அவர் நொறுக்கிவிடுவார்.அவை சுண்ணாம்புக் கற்களைப் போலத் தூள் தூளாகும்.பூஜைக் கம்பங்களோ* தூபபீடங்களோ விட்டுவைக்கப்படாது.+ 10  மதில்கள் சூழ்ந்த நகரம் வெறுமையாக்கப்படும்.மேய்ச்சல் நிலங்கள் கைவிடப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரம்போல் ஆகிவிடும்.+ கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கேயே படுத்துக்கொள்ளும்.அங்குள்ள இலைதழைகளைத் தின்னும்.+ 11  கிளைகள் காய்ந்துபோகும்போது,பெண்கள் வந்து அவற்றை ஒடித்துக்கொண்டு போய்,விறகாகப் பயன்படுத்துவார்கள். அந்த ஜனங்களைப் படைத்தவர் அவர்கள்மேல் இரக்கம் காட்ட மாட்டார். அவர்களை உருவாக்கியவர் அவர்களுக்குக் கருணை காட்ட மாட்டார்.+ஏனென்றால், அவர்கள் புத்தி* இல்லாதவர்கள்.+ 12  பெருக்கெடுத்து ஓடும் ஆறு* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை*+ சிதறியிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களே! மரத்திலிருந்து உதிர்த்த பழங்களை ஒருவன் ஒவ்வொன்றாகச் சேகரிப்பதுபோல், அந்நாளில் யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+ 13  அந்த நாளில், ஒரு பெரிய ஊதுகொம்பு ஊதப்படும்.+ எகிப்தில் சிதறியிருக்கிறவர்களும்+ அசீரியாவில் தினம்தினம் செத்துப்பிழைக்கிறவர்களும்+ எருசலேமிலுள்ள பரிசுத்தமான மலைக்கு வந்து யெகோவாவை வணங்குவார்கள்.+

அடிக்குறிப்புகள்

இங்கே ஒரு பெண்ணாகவும் திராட்சைத் தோட்டமாகவும் விவரிக்கப்படுவது அநேகமாக இஸ்ரவேல் தேசமாக இருக்கலாம்.
நே.மொ., “நுரை பொங்கும் திராட்சமதுவை.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
அதாவது, “யூப்ரடிஸ்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குவரை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா