ஏசாயா 29:1-24

29  “அரியேல்* நகரமே, தாவீது வாழ்ந்த அரியேல் நகரமே,+ உனக்கு ஐயோ கேடு! நீ வருஷா வருஷம் பண்டிகைகளைக் கொண்டாடுகிறாய்.ஒன்று விடாமல் எல்லா பண்டிகைகளையும்+ கொண்டாடுகிறாய்.   ஆனாலும், நான் உனக்குக் கஷ்டத்தை வர வைப்பேன்.+உன் மக்கள் புலம்பிக்கொண்டும் அழுதுகொண்டும் இருப்பார்கள்+நீ எனக்கு அரியேல்* போலவே ஆவாய்.+   உனக்கு எதிராக எல்லா பக்கங்களிலும் முகாம்போடுவேன்.உன்னைச் சுற்றிவளைத்து கூர்முனைக் கம்பங்களை நாட்டுவேன்.மண்மேடுகளை எழுப்பி உன்னைத் தாக்குவேன்.+   அப்போது நீ தாழ்த்தப்படுவாய்.தரையிலிருந்து பேசுவாய்.மண் உன்னை மூடியிருப்பதால் உன் குரல் மெதுவாய்க் கேட்கும். நீ மண்ணிலிருந்து பேசும்போது,+ஆவிகளோடு பேசுகிறவர்களின் குரல் போலஉன் குரல் முணுமுணு என்று கேட்கும்.   உன்னுடைய எதிரிகள் தூசிபோல் ஆகிவிடுவார்கள்.+கொடுங்கோலர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல் ஆகிவிடுவார்கள்.+ இதெல்லாம் திடீரென்று நொடிப்பொழுதில் நடக்கும்.+   பரலோகப் படைகளின் யெகோவா உன்னை விடுவிப்பார்.அப்போது இடிமுழக்கமும், நிலநடுக்கமும், பயங்கரமான சத்தமும்,புயல்காற்றும், சூறாவளியும், தீப்பிழம்புகளும் உண்டாகும்.”+   அரியேலுக்கு எதிராகப் போர் செய்வதும்,முற்றுகைக் கோபுர வண்டிகளிலிருந்து தாக்குவதும்,அவளுக்குக் கஷ்டம் கொடுப்பதும்,அவளோடு மோதுகிற தேசங்களுக்கு+ வெறும் கனவுபோல் ஆகிவிடும்.தூக்கத்தில் பார்க்கும் காட்சிபோல் ஆகிவிடும்.   எப்படியென்றால், பசியில் வாடுகிறவன் தான் சாப்பிடுவதுபோல் கனவு கண்டாலும்,கண் விழிக்கும்போது பசியோடுதான் இருப்பான்.தாகமாய் இருக்கிறவன் குடிப்பதுபோல் கனவு கண்டாலும்,கண் விழிக்கும்போது களைப்போடும் தாகத்தோடும்தான் இருப்பான். சீயோன் மலைக்கு எதிராகப் போர் செய்கிற தேசங்களுக்கும்இப்படித்தான் ஆகும்.+   அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையுங்கள்.+கண்களை மூடிக்கொண்டு உங்களைக் குருடாக்கிக்கொள்ளுங்கள்.+ அவர்கள் போதையில் இருக்கிறார்கள், ஆனால் திராட்சமதுவினால் அல்ல.அவர்கள் தள்ளாடுகிறார்கள், ஆனால் மதுபானத்தினால் அல்ல. 10  ஏனென்றால், யெகோவா உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.+உங்கள் கண்களை அவர் மூடிவிட்டார்; தீர்க்கதரிசிகள்தான் உங்கள் கண்கள்.+உங்கள் தலையை அவர் மூடிவிட்டார்; தரிசனங்களைப் பார்க்கிறவர்கள்தான் உங்கள் தலை.+ 11  தரிசனமெல்லாம் முத்திரை போடப்பட்ட புத்தகத்திலுள்ள வார்த்தைகள்போல் உங்களுக்கு இருக்கிறது.+ படிக்கத் தெரிந்த ஒருவனிடம் அதைக் கொடுத்து, “தயவுசெய்து இதைச் சத்தமாகப் படித்துக்காட்டு” என்று கேட்டால், “இது முத்திரை போடப்பட்டிருக்கிறது, என்னால் படிக்க முடியாது” என்று சொல்வான். 12  படிக்கத் தெரியாத ஒருவனிடம் அதைக் கொடுத்து, “தயவுசெய்து இதைப் படித்துக்காட்டு” என்று கேட்டால், “எனக்குப் படிக்கவே தெரியாது” என்று சொல்வான். 13  யெகோவா இப்படிச் சொல்கிறார்: “இந்த ஜனங்கள் வாயளவில் என்னிடம் வேண்டுகிறார்கள்.உதட்டளவில் என்னைப் புகழ்கிறார்கள்.+ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.மனுஷர்கள் கற்றுக்கொடுத்த கோட்பாடுகளின்படிதான் என்னை வணங்குகிறார்கள்.+ 14  அதனால், இந்த ஜனங்கள் அதிர்ச்சியடையும் விதத்தில் மறுபடியும் வினோதமான காரியங்களைச் செய்வேன்;+அது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கும்.ஞானிகளின் ஞானம் அழிந்துபோகும்.விவேகிகளின் விவேகம்* மறைந்துபோகும்.”+ 15  யெகோவாவிடமிருந்து தங்கள் திட்டங்களை மறைக்கத் துணிகிறவர்களுக்கு ஐயோ கேடு!+ அவர்கள், “நம்மை யார் பார்க்கப்போகிறார்கள்? நாம் செய்வது யாருக்குத் தெரியப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டு,இருட்டான இடத்தில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.+ 16  நீங்கள் தாறுமாறாகப் பேசுகிறீர்கள்! குயவனும் களிமண்ணும் ஒன்றா?+ ஒரு களிமண் பாத்திரம் குயவனைப் பற்றி, “அவர் என்னை உண்டாக்கவில்லை” என்று சொல்ல முடியுமா?+ உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவரைப் பற்றி, “அவருக்குப் புத்தி* இல்லை” என்று சொல்ல முடியுமா?+ 17  இன்னும் கொஞ்ச நேரத்தில் லீபனோன் ஒரு பழத் தோட்டமாக மாறும்.+அந்தத் தோட்டம் காடுபோல் அடர்த்தியாகும்.+ 18  அந்த நாளில், காது கேட்காதவர்களுக்கு அந்தப் புத்தகத்தின் வார்த்தைகள் கேட்கும்.பார்வை இல்லாதவர்களின் கண்கள் இருளைவிட்டு நீங்கி பார்வை அடையும்.+ 19  தாழ்மையான* ஜனங்கள் யெகோவாவை நினைத்து மிகவும் சந்தோஷப்படுவார்கள்;ஏழை ஜனங்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளை நினைத்து பூரித்துப்போவார்கள்.+ 20  ஏனென்றால், கொடூரமாக ஆட்சி செய்பவன் இனி இருக்க மாட்டான்.பெருமையடிப்பவன் ஒழிந்துபோவான்.கெட்டது செய்வதில் குறியாக இருக்கிற எல்லாரும் அழிக்கப்படுவார்கள்.+ 21  பொய் சொல்லி மற்றவர்களைக் குற்றவாளிகளாக ஆக்குகிறவர்களும்,நகரவாசலில் தீர்ப்பு சொல்கிறவர்களைத் தங்கள் வலையில் விழ வைக்கிறவர்களும்,+அர்த்தமில்லாமல் வாதாடி நீதிமானுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறவர்களும் அழிக்கப்படுவார்கள்.+ 22  ஆபிரகாமை விடுவித்தவரான யெகோவா,+ யாக்கோபின் வம்சத்தாருக்குச் சொல்வது இதுதான்: “யாக்கோபுக்கு இனி அவமானம் வராது.அவன் முகம் இனி வெளுத்துப்போகாது.*+ 23  என் கையால் படைக்கப்பட்ட அவனுடைய பிள்ளைகள்அவனைச் சூழ்ந்திருப்பார்கள்.+அப்போது, அவர்கள் என் பெயரைப் பரிசுத்தப்படுத்துவார்கள்.யாக்கோபின் பரிசுத்தமான கடவுளைப் பரிசுத்தப்படுத்துவார்கள்.இஸ்ரவேலின் கடவுளுக்கு முன்னால் பயபக்தியுடன் நிற்பார்கள்.+ 24  புத்தி கெட்டுப்போனவர்களுக்குப் புத்தி வரும்.*குறை சொல்கிறவர்கள் போதனையைக் கேட்டு நடப்பார்கள்.”

அடிக்குறிப்புகள்

ஒருவேளை இதன் அர்த்தம், “கடவுளுடைய பலிபீடத்தில் நெருப்பு எரியும் பகுதி.” அநேகமாக எருசலேமைக் குறிக்கலாம்.
அதாவது, “கடவுளுடைய பலிபீடத்தில் நெருப்பு எரியும் பகுதி.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”
வே.வா., “சாந்தமான.”
அதாவது, “அவமானத்தினாலும் ஏமாற்றத்தினாலும் வெளுத்துப்போகாது.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன் கிடைக்கும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா