ஏசாயா 38:1-22

38  ஒருசமயம், எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்.+ ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி+ அவரிடம் வந்து, “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘நீ குணமாக மாட்டாய், இறந்துபோவாய். அதனால், உன் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டியதையெல்லாம் இப்போதே சொல்லிவிடு’” என்றார்.+  அதைக் கேட்டதும் எசேக்கியா சுவர் பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு யெகோவாவிடம் ஜெபம் செய்ய ஆரம்பித்தார்.  “யெகோவாவே, நான் எப்போதும் உங்களுக்கு உண்மையாக நடந்திருக்கிறேன், முழு இதயத்தோடு கீழ்ப்படிந்திருக்கிறேன்,+ உங்களுக்குப் பிரியமானதைச் செய்திருக்கிறேன்; தயவுசெய்து இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.+ உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்று சொல்லிக் கதறி அழுதார்.  அப்போது யெகோவா ஏசாயாவிடம்,  “நீ எசேக்கியாவிடம் திரும்பிப் போய் இப்படிச் சொல்:+ ‘உன் மூதாதையாகிய தாவீதின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நீ செய்த ஜெபத்தை நான் கேட்டேன்.+ நீ கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்தேன்.+ அதனால், உன் வாழ்நாளை இன்னும் 15 வருஷங்களுக்குக் கூட்டுகிறேன்.+  உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய ராஜாவிடமிருந்து காப்பாற்றுவேன், இந்த நகரத்தை எப்போதும் பாதுகாப்பேன்.+  யெகோவாவாகிய நான் சொன்னதைச் செய்வேன். அதற்கு யெகோவாவாகிய நான் தரும் அடையாளம் இதுதான்:+  ஆகாசின் படிக்கட்டில்* விழும் சூரியனின் நிழல் பத்துப் படிகள் பின்னால் போகும்படி செய்வேன்”’”+ என்று சொன்னார். அப்போது, ஆகாசின் படிக்கட்டில் விழுந்திருந்த நிழல் பத்துப் படிகள் பின்னால் போனது.  யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, குணமான பின்பு எழுதிய வார்த்தைகள் இவைதான்: 10  “நான் வாழ வேண்டிய காலத்திலேயேகல்லறையின் வாசலுக்குப் போக வேண்டிய நிலைமை வந்ததே. என் வாழ்நாள் இப்படிக் குறுகிப் போனதே” என்று சொன்னேன். 11  அதோடு, “‘யா’வை* இனி என்னால் பார்க்க முடியாதே, இந்த உலகத்தில் என்னால் ‘யா’வைப் பார்க்க முடியாதே.+ மனுஷர்களை இனி பார்க்க முடியாதே.செத்துப்போனவர்களோடு நான் கிடப்பேனே. 12  மேய்ப்பனின் கூடாரம் இன்று இருக்கும், நாளை இருக்காது.அதுபோல் என் வாழ்க்கையும் ஆகிவிட்டதே.+ நெய்த துணியை ஒரு நெசவாளர் தறியிலிருந்து துண்டிப்பது போலஎன் வாழ்நாளை அவர் துண்டிக்கிறார். காலையிலிருந்து ராத்திரிவரை என்னை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.+ 13  விடியும்வரை என் மனதைத் தேற்றிக்கொள்கிறேன். சிங்கத்தைப் போல அவர் என் எலும்புகளையெல்லாம் நொறுக்குகிறார்.காலையிலிருந்து ராத்திரிவரை என்னை முடிவுக்குக் கொண்டுவருகிறார்.+ 14  ஒரு குருவி* போல நான் கத்துகிறேன்.+புறாவைப் போல முனகிக்கொண்டே இருக்கிறேன்.+ உதவிக்காக மேலே பார்த்துப் பார்த்து என் கண்கள் பூத்துப்போனது.+ ‘யெகோவாவே, நான் தாங்க முடியாத வேதனையில் இருக்கிறேன்.என்னோடு இருந்து எனக்கு உதவுங்கள்’ என்று கெஞ்சுகிறேன்.+ 15  அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்? அவர் சொன்னபடியே என்னைக் குணமாக்கினார். நான் எப்படி வேதனையில் துடித்தேன் என்பதை நினைத்து,இனி என் வாழ்நாள் முழுவதும் மனத்தாழ்மையோடு* நடப்பேன். 16  ‘யெகோவாவே, இவற்றால்* மனுஷன் வாழ்கிறான்.இவற்றில்தான் என் உயிர்மூச்சு இருக்கிறது. நீங்கள் என்னைக் குணமாக்கி என் உயிரைக் காப்பாற்றுவீர்கள்.+ 17  நான் நிம்மதியே இல்லாமல் வேதனையில் தவித்தபோது,நீங்கள் என்மேல் பாசம் காட்டினீர்கள்.நான் சாகாதபடி பார்த்துக்கொண்டீர்கள்.+ என்னுடைய பாவங்களையெல்லாம் உங்கள் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்தீர்கள்.+ 18  கல்லறையில் இருப்பவர்களால் உங்களை மகிமைப்படுத்த முடியாது.+செத்துப்போனவர்களால் உங்களைப் புகழ முடியாது.+ குழிக்குள் போகிறவர்களால் உங்கள்மேல் நம்பிக்கை வைக்க முடியாது.*+ 19  உயிரோடு இருக்கிறவர்களால் மட்டும்தான் உங்களைப் புகழ முடியும்.நான் இன்று உங்களைப் புகழ்வது போல அவர்களால் புகழ முடியும். ஒரு அப்பாவால் தன்னுடைய மகன்களுக்கு உங்களைப் பற்றி* கற்றுத்தர முடியும்.+ 20  யெகோவாவே, என்னைக் காப்பாற்றுங்கள்.அப்போது, யெகோவாவாகிய உங்கள் ஆலயத்தில் நாங்கள் எல்லாரும் வாழ்நாளெல்லாம்நரம்பிசைக் கருவிகளை இசைத்து என் பாடல்களைப் பாடுவோம்’”+ என்று சொன்னேன். 21  பின்பு ஏசாயா, “ஒரு அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து, எசேக்கியாவின் கொப்புளத்தின் மேல் வைத்து, பத்து போடுங்கள். அப்போது அவர் குணமடைவார்”+ என்று சொன்னார். 22  ஏனென்றால் எசேக்கியா, “நான் யெகோவாவின் ஆலயத்துக்குப் போவேன் என்பதற்கு என்ன அடையாளம்?” என்று கேட்டிருந்தார்.+

அடிக்குறிப்புகள்

சூரிய கடிகாரத்தைப் போல, நேரத்தைக் கணக்கிடுவதற்காக இந்தப் படிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அல்லது, “கொக்கு.”
வே.வா., “பயபக்தியோடு.”
அதாவது, “கடவுள் சொன்னவற்றாலும் செய்தவற்றாலும்.”
வே.வா., “நீங்கள் நம்பகமானவர் என்பதை உணர முடியாது.”
வே.வா., “உங்கள் நம்பகத்தன்மையைப் பற்றி.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா