ஏசாயா 50:1-11

50  யெகோவா சொல்வது இதுதான்: “உங்கள் தாயை அனுப்பியபோது நான் விவாகரத்து பத்திரம்+ கொடுத்தா அனுப்பினேன்? ஏதோ கடனை அடைப்பதற்காகவா உங்களை விற்றுப்போட்டேன்? நீங்கள் பாவம் செய்ததால்தானே உங்கள் தாயை அனுப்பிவிட்டேன்?+நீங்கள் குற்றம் செய்ததால்தானே+ உங்களை விற்றுப்போட்டேன்?   அப்படியிருக்கும்போது, நான் வந்த சமயத்தில் ஏன் இங்கு யாருமே இல்லை? நான் கூப்பிட்டபோது ஏன் யாருமே பதில் சொல்லவில்லை?+ உங்களை விடுவிக்க முடியாதளவுக்கு என் கை என்ன சின்னதா?உங்களைக் காப்பாற்றுவதற்கு எனக்குச் சக்தி இல்லையா?+ நான் ஒரு வார்த்தை சொன்னால், கடலே வற்றிவிடும்.+ஆறுகள் வறண்ட நிலமாகும்.+ அப்போது, மீன்கள் தண்ணீர் இல்லாமல் செத்துப்போகும்.அவற்றின் உடல் அழுகிவிடும்.   நான் வானத்தை இருளால் மூடுகிறேன்.+அதைக் கறுப்புக் கம்பளியால் போர்த்துகிறேன்.”   பக்குவமாகப் பேசும் திறமையை* உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குத் தந்திருக்கிறார்.+சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக* பேசுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.+ தினமும் காலையில் என்னை எழுப்புகிறார்.ஒரு மாணவனைப் போல நான் கேட்டுக் கற்றுக்கொள்வதற்காக என் காதுகளைத் தீட்டுகிறார்.+   உன்னதப் பேரரசராகிய யெகோவா என் காதுகளைத் திறந்திருக்கிறார்.நான் அவரை எதிர்க்கவில்லை.+ வேறு பக்கமாகத் திரும்பிக்கொள்ளவும் இல்லை.+   என்னை அடித்தவர்களுக்கு என் முதுகைக் காட்டினேன்.என் தாடியைப் பிடித்து இழுத்தவர்களுக்கு* என் கன்னங்களைக் காட்டினேன். என்னைக் கேவலப்படுத்தி என்மேல் காறித் துப்பியவர்களுக்கு என் முகத்தை மறைக்கவில்லை.+   ஆனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்கு உதவுவார்.+ அதனால் நான் கூனிக்குறுக மாட்டேன். எனக்கு எந்த அவமானமும் வராது என்று தெரியும்.அதனால்தான், என் முகத்தைக் கருங்கல்* போலாக்கினேன்.+   என்னை நீதிமான் என்று அறிவிக்கிறவர் எனக்குத் துணையாக இருக்கிறார். யாரால் என்னைக் குற்றப்படுத்த* முடியும்?+ வாருங்கள், நாம் நேருக்கு நேர் வாதாடலாம். யாருக்கு என்மேல் வழக்கு இருக்கிறது? அவன் என் முன்னால் வந்து வழக்காடட்டும்.   உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்கு உதவுவார். நான் குற்றவாளி என்று யாரால் தீர்ப்பு கொடுக்க முடியும்? இதோ! அவர்கள் எல்லாரும் ஒரு துணியைப் போல அரிக்கப்படுவார்கள். அந்துப்பூச்சி அவர்களைத் தின்றுதீர்க்கும். 10  யெகோவாவுக்குப் பயந்து நடந்து,அவருடைய ஊழியனின் பேச்சைக் கேட்பவன் யார்?+ வெளிச்சமே இல்லாத கும்மிருட்டில் நடப்பவன் யார்? அவன் தன்னுடைய கடவுளான யெகோவாவின் பெயரில் நம்பிக்கை வைக்கட்டும்; அவரையே சார்ந்திருக்கட்டும். 11  “தீ மூட்டுகிறவர்களே,நெருப்பைக் கிளறிவிடுகிறவர்களே,நீங்கள் மூட்டிய நெருப்பின் வெளிச்சத்திலேயே நடங்கள்.அந்தத் தீப்பொறிகளின் நடுவிலேயே நடங்கள். நான் உங்களுக்குக் கொடுக்கப்போகிற தண்டனை இதுதான்: நீங்கள் வலியில் துடிதுடித்தபடி கிடப்பீர்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கல்விமானின் நாவை.”
அல்லது, “தெம்பளிக்கும் விதமாக.”
வே.வா., “தாடியிலுள்ள முடியைப் பிடுங்கி எடுக்கிறவர்களுக்கு.”
நே.மொ., “சிக்கிமுக்கிக் கல்.”
வே.வா., “என்னோடு வாதாட.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா