ஏசாயா 64:1-12

64  நீங்கள் வானத்தைக் கிழித்துக்கொண்டு கீழே இறங்கி வந்து,மலைகளை அதிர வைத்து,   விறகைக் கொழுந்துவிட்டு எரிய வைக்கிற நெருப்பைப் போலவும்,தண்ணீரைத் தளதளவென்று கொதிக்க வைக்கிற தீயைப் போலவும் எதிரிகளைத் தாக்கினால்,நீங்கள் யார் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.தேசங்கள் உங்களுக்கு முன்னால் நடுநடுங்கும்.   உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கத் தகுதி இல்லாதபோதுகூட எங்களுக்காக அற்புதங்களைச் செய்தீர்கள்.+கீழே இறங்கி வந்தீர்கள்; அப்போது மலைகள் உங்களுக்கு முன்னால் நடுநடுங்கின.+   நம்பிக்கையோடு* காத்திருக்கிறவர்களின் உதவிக்கு வருகிற கடவுள் நீங்கள் மட்டும்தான்.உங்களைத் தவிர வேறொரு கடவுள் அப்படிச் செய்ததாகபழங்காலத்திலிருந்தே யாரும் காதால் கேட்டதும் இல்லை, கண்களால் கண்டதும் இல்லை.+   நல்ல காரியங்களைச் சந்தோஷமாகச் செய்கிறவர்களுக்கும்,+உங்களை நினைவில் வைத்து உங்கள் வழிகளில் நடக்கிறவர்களுக்கும் நீங்கள் துணையாக இருக்கிறீர்கள்.நாங்கள் பாவம் செய்துகொண்டே இருந்தபோது எங்கள்மேல் ரொம்பக் கோபப்பட்டீர்கள்.+ காலம்காலமாக நாங்கள் திருந்தவே இல்லை. அப்படியிருக்கும்போது, எங்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியுமா?   நாங்கள் எல்லாரும் தீட்டுப்பட்டவர்கள் போல ஆகிவிட்டோம்.நாங்கள் செய்கிற நீதியான காரியங்களெல்லாம் தீட்டுப்பட்ட* துணியைப்+ போல இருக்கிறது. நாங்கள் எல்லாரும் காய்ந்த இலைகளைப் போல உதிர்ந்துவிடுவோம்.நாங்கள் செய்கிற அக்கிரமங்கள் காற்றைப் போல எங்களை அடித்துக்கொண்டு போய்விடும்.   யாருமே உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது இல்லை.உங்களையே உறுதியாகப் பிடித்துக்கொண்டிருக்க யாரும் விரும்புவதும் இல்லை.நீங்கள் உங்களுடைய முகத்தை எங்களிடமிருந்து மறைத்துக்கொண்டீர்கள்.+எங்கள் அக்கிரமங்களே எங்களை வாட்டி வதைக்கும்படி விட்டுவிட்டீர்கள்.   ஆனால் யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய தகப்பன்.+ நாங்கள் களிமண்; நீங்கள்தான் எங்களுடைய குயவர்.+நாங்கள் எல்லாரும் உங்கள் கைகளால் உருவானவர்கள்.   அதனால் யெகோவாவே, எங்கள்மேல் ரொம்பவும் கோபப்படாதீர்கள்.+எங்கள் அக்கிரமங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதீர்கள். தயவுசெய்து எங்களைப் பாருங்கள்; நாங்கள் எல்லாரும் உங்களுடைய ஜனங்கள்தானே. 10  உங்களுடைய பரிசுத்தமான நகரங்கள் வனாந்தரம்போல் ஆகிவிட்டன. சீயோன் வெறும் வனாந்தரத்தைப் போலவும்,எருசலேம் பொட்டல் காடு போலவும் ஆகிவிட்டது.+ 11  எங்கள் முன்னோர்கள் உங்களை வழிபட்ட இடமாகியபரிசுத்தமும் மகிமையுமான* ஆலயம்இப்போது தீயில் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறது.+நாங்கள் நெஞ்சார நேசித்ததெல்லாம் நாசமாகிவிட்டது. 12  யெகோவாவே, இதையெல்லாம் பார்த்த பிறகும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருப்பீர்களா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உதவி செய்ய மாட்டீர்களா?+

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆவலோடு; பொறுமையோடு.”
அதாவது, “மாதவிலக்கினால் தீட்டுப்பட்ட.”
வே.வா., “அழகுமுள்ள.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா