ஓசியா 10:1-15

10  “இஸ்ரவேலர்கள், தரங்கெட்ட* பழங்களைக் கொடுக்கும் திராட்சைக் கொடி போன்றவர்கள்.+ அவர்களுடைய பழங்கள் பெருகப்பெருக அவர்களுடைய பலிபீடங்களும் பெருகுகின்றன.+அவர்களுடைய விளைச்சல் கூடக்கூட அவர்களுடைய பூஜைத் தூண்களின் ஆடம்பரமும் கூடுகிறது.+   அவர்கள் வெளிவேஷம் போடுகிறார்கள்.*இப்போது கையும் களவுமாகப் பிடிபடுவார்கள். ஒருவர் வந்து அவர்களுடைய பலிபீடங்களை உடைப்பார், பூஜைத் தூண்களை நொறுக்குவார்.   ஆனால் அவர்கள், ‘நாம் யெகோவாவுக்குப் பயந்து நடக்கவில்லை, அதனால் நமக்கு ராஜா இல்லை.+ அப்படியே ராஜா இருந்தாலும் நமக்கு என்ன பிரயோஜனம்?’ என்பார்கள்.   அவர்கள் வெற்றுப் பேச்சு பேசி, பொய் சத்தியம் செய்து,+ ஒப்பந்தம் பண்ணுகிறார்கள்.வயலின் சால்களில்* முளைக்கும் விஷச்செடிகள்போல் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு வரும்.+   பெத்-ஆவேனிலுள்ள கன்றுக்குட்டி சிலை கைப்பற்றப்பட்டுக் கொண்டுபோகப்படும்.+ சமாரியர்கள் அதை நினைத்துப் பயப்படுவார்கள்.அந்தச் சிலையின் மகிமையைப் பார்த்து சந்தோஷப்பட்ட ஜனங்கள் துக்கப்படுவார்கள்.பொய் தெய்வ பூசாரிகளும் புலம்புவார்கள்.   அசீரியாவின் மகா ராஜாவுக்கு அது பரிசாகக் கொண்டுபோகப்படும்.+ எப்பிராயீம் அவமானப்படுத்தப்படுவான்.ஆலோசனை கேட்டதற்காக இஸ்ரவேல் வெட்கமடைவான்.+   தண்ணீரில் ஒடித்துப் போடப்பட்ட கிளைபோல் சமாரியா காணாமல் போகும்.அதன் ராஜாவும் இல்லாமல்போவான்.+   இஸ்ரவேலர்கள் பெத்-ஆவேனில் கோயில்களைக் கட்டி+ பாவம் செய்தார்கள்;+ அவை அழிக்கப்படும்.+ அவர்களுடைய பலிபீடங்களில் முட்செடிகள் வளரும்.+ ஜனங்கள் மலைகளைப் பார்த்து, ‘எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்!’ என்பார்கள். குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்!’ என்பார்கள்.+   இஸ்ரவேலே, நீ கிபியாவின் காலத்திலிருந்தே பாவம் செய்கிறாய்.+ விடாப்பிடியாகப் பாவம் செய்துவருகிறாய். கிபியாவில் இருந்த கெட்டவர்கள் போரில் முழுமையாக அழிக்கப்படவில்லை. 10  எனக்கு இஷ்டமான சமயத்தில் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களுக்கு எதிராக மற்ற தேசத்து ஜனங்கள் திரண்டு வருவார்கள்.இஸ்ரவேல்மீது இரண்டு குற்றங்கள் சுமத்தப்படும்.* 11  நன்றாகப் பழக்கப்பட்டு ஆசையோடு போரடிக்கிற இளம் பசுவைப் போல எப்பிராயீம் இருந்தான்.அதனால், அவனுடைய அழகான கழுத்தில் நான் நுகத்தடியைச் சுமத்தவில்லை. ஆனால், இப்போது வேறொருவன் அவனை ஓட்டிக்கொண்டு போக* வைப்பேன்.+ யூதா நிலத்தை உழுவான்; யாக்கோபு வேறொருவனுக்காக நிலத்தைச் சமன்படுத்துவான். 12  யெகோவா உங்களுக்கு நீதியைக் கற்றுக்கொடுக்க வருவார்.+ இதுவே அவரைத் தேடுவதற்கான காலம்.+காலம் இருக்கும்போதே நீதியை விதையுங்கள், மாறாத அன்பை அறுவடை செய்யுங்கள்.பண்படுத்தப்படாத நிலத்தை உழுது பண்படுத்துங்கள்.+ 13  நீங்கள் அக்கிரமத்தை விதைத்தீர்கள்,அநீதியை அறுவடை செய்தீர்கள்,+பொய்யின் விளைச்சலை அனுபவித்தீர்கள்.ஏனென்றால், உங்களுடைய சொந்த வழியில் போனீர்கள். ஏராளமான போர் வீரர்களை நம்பினீர்கள். 14  உங்களுக்கு எதிராகப் போர்க்குரல் கேட்கும்.உங்களுடைய மதில் சூழ்ந்த நகரங்களெல்லாம் அழிக்கப்படும்.+பெத்-ஆர்பேலை சல்மான் அழித்தது போல அவை அழிக்கப்படும்.அப்போது, பிள்ளைகளோடு அம்மாக்களும் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்களே. 15  பெத்தேலே, நீ பயங்கரமான அக்கிரமங்களைச் செய்ததால் உனக்கும் அப்படியே நடக்கும்.+ பொழுது விடியும்போது இஸ்ரவேலின் ராஜா ஒழியப்போவது உறுதி.”+

அடிக்குறிப்புகள்

அல்லது, “படர்ந்து வளர்ந்து.”
வே.வா., “அவர்களுடைய உள்ளம் போலித்தனமானது.”
சால்கள் என்பது உழும்போது நிலத்தில் ஏற்படும் பள்ளங்கள்.
அதாவது, “நுகத்தைச் சுமப்பதுபோல் இஸ்ரவேலர்கள் தங்களுடைய தண்டனையைச் சுமப்பார்கள்.”
வே.வா., “அவன்மேல் நுகத்தைச் சுமத்த.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா