ஓசியா 5:1-15

5  “குருமார்களே! கேளுங்கள்.+இஸ்ரவேல் ஜனங்களே! கவனியுங்கள்.ராஜாவின் குடும்பத்தாரே! கவனித்துக் கேளுங்கள்.உங்களுக்குத் தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.ஏனென்றால், நீங்கள் மிஸ்பாவில் வைக்கப்பட்ட கண்ணியாக இருக்கிறீர்கள்.தாபோர்மீது+ விரிக்கப்பட்ட வலையாக இருக்கிறீர்கள்.   அக்கிரமக்காரர்கள் கொலை செய்வதில் தீவிரமாய் இறங்கிவிட்டார்கள்.அவர்கள் எல்லாரையும் நான் எச்சரிக்கிறேன்.*   எப்பிராயீமைப் பற்றி எனக்குத் தெரியும்.இஸ்ரவேல் என்னிடமிருந்து மறைந்துகொள்ள முடியாது. எப்பிராயீமே! நீ விபச்சாரம் செய்தாய்.இஸ்ரவேல் தன்னையே கெடுத்துக்கொண்டான்.+   கடவுளிடம் திரும்பிவர முடியாதளவுக்கு அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள்.அவர்களுக்கு விபச்சாரப் புத்தி இருக்கிறது.+யெகோவாவை அவர்கள் மதிப்பதே இல்லை.   இஸ்ரவேலின் கர்வம் அவன் முகத்திரையைக் கிழித்தது.+இஸ்ரவேலும் எப்பிராயீமும் பாவத்தில் விழுந்தார்கள்.யூதாவும் அவர்களோடு சேர்ந்து விழுந்தான்.+   அவர்கள் ஆடுமாடுகளோடு யெகோவாவைத் தேடிப்போனார்கள்.ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைவிட்டு அவர் போய்விட்டார்.+   அவர்கள் யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள்.+முறைகேடாகப் பிள்ளைகளைப் பெற்றார்கள். அவர்களும் அவர்களுடைய நிலங்களும் ஒரு மாதத்துக்குள் அழிக்கப்படும்.   கிபியாவில் ஊதுகொம்பையும், ராமாவில்+ எக்காளத்தையும் ஊதுங்கள்!+ பெத்-ஆவேனில்+ போர் முழக்கம் செய்யுங்கள். பென்யமீனே, உன்னைப் பின்தொடருகிறோம்.   எப்பிராயீமே! தண்டனை நாளில் உனக்குக் கோரமான முடிவு வரும்.+ இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குக் கண்டிப்பாக நடக்கப்போவதைச் சொல்லிவிட்டேன். 10  யூதாவின் அதிகாரிகள் எல்லைக் குறியைத் தள்ளிவைக்கிற ஆட்களைப் போல இருக்கிறார்கள்.+ தண்ணீரைக் கொட்டுவதுபோல் என் கடும் கோபத்தை அவர்கள்மேல் கொட்டுவேன். 11  எப்பிராயீம் அடக்கி ஒடுக்கப்படுகிறான், நியாயத்தீர்ப்பினால் நொறுக்கப்படுகிறான்.அவன் எதிரியின் பின்னால் போவதிலேயே குறியாக இருந்தானே!+ 12  அதனால், கரையான் அரிப்பதுபோல் எப்பிராயீமை நான் அரித்துவிட்டேன்.யூதாவை அழுகிப்போகும்படி செய்தேன். 13  எப்பிராயீம் தனக்கு வந்த நோயைப் பார்த்தான்.யூதா தன் புண்ணைப் பார்த்தான். எப்பிராயீம் அசீரியாவிடம் போனான்;+ ஒரு பெரிய ராஜாவிடம்* ஆள் அனுப்பினான்.அந்த ராஜாவால் அவனைக் குணப்படுத்த முடியவில்லை. புண்ணைச் சரிசெய்யவும் முடியவில்லை. 14  இளம் சிங்கத்தைப் போல எப்பிராயீமின் மேல் நான் பாய்வேன்.பலமான சிங்கத்தைப் போல யூதா ஜனங்களின் மேல் பாய்வேன். அவர்களைக் கடித்துக் குதறுவேன்.+அவர்களை இழுத்துக்கொண்டு போவேன், யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது.+ 15  பின்பு, அவர்களை விட்டுவிட்டு என்னுடைய இடத்துக்குத் திரும்பிவிடுவேன்.குற்றத்துக்கான தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள். அப்போது, என் கருணைக்காக ஏங்குவார்கள்.+ வேதனையில் தவிக்கும் சமயத்தில் என்னைத் தேடுவார்கள்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கண்டிப்பேன்.”
அதாவது, “யாரேப் ராஜாவிடம்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா