சங்கீதம் 101:1-8

தாவீதின் சங்கீதம். 101  யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பையும் நியாயத்தையும் பற்றி நான் பாடுவேன். உங்களைப் புகழ்ந்து பாடுவேன்.*   விவேகமாகவும் குற்றமற்றவனாகவும்* நான் நடந்துகொள்வேன். நீங்கள் எப்போது என்னிடம் வருவீர்கள்? என் வீட்டுக்குள்ளே நான் உத்தம இதயத்தோடு நடந்துகொள்வேன்.+   வீணான* எதையும் என் கண் முன்னால் வைக்க மாட்டேன். நேர்வழியைவிட்டு விலகுகிறவர்களின் செயல்களை நான் வெறுக்கிறேன்.+கொஞ்சம்கூட ஒட்டாமல் ஒதுங்கியிருப்பேன்.*   கோணலான புத்திக்கும்* எனக்கும் ரொம்பவே தூரம்.கெட்டதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.   மற்றவர்களுடைய முதுகுக்குப் பின்னால் பேசுகிறவனுடைய+வாயை அடைப்பேன்.* கண்களில் ஆணவமும் இதயத்தில் அகம்பாவமும் உள்ள யாரையுமேநான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.   இந்த உலகத்தில் உண்மையாக நடக்கிறவர்கள் என்னோடு தங்கும்படி,அவர்களைக் கருணையோடு பார்ப்பேன். குற்றமற்றவனாக* நடப்பவன் எனக்கு ஊழியம் செய்வான்.   ஏமாற்றுக்காரர்கள் யாரும் என் வீட்டில் குடியிருக்க முடியாது.பொய் பேசுகிற யாரும் என் கண் முன்னால் நிற்க முடியாது.   யெகோவாவின் நகரத்திலிருந்து அக்கிரமக்காரர்கள் எல்லாரையும் ஒழிப்பதற்காக,+உலகத்திலுள்ள பொல்லாதவர்களைக் காலைதோறும் அழிப்பேன்.*

அடிக்குறிப்புகள்

வே.வா., “இசை இசைப்பேன்.”
வே.வா., “உத்தமமாகவும்.”
வே.வா., “ஒன்றுக்கும் உதவாத.”
வே.வா., “அவை என்னை ஒட்டிக்கொள்ளாது.”
நே.மொ., “இதயத்துக்கும்.”
வே.வா., “பேசுகிறவனை ஒழித்துக்கட்டுவேன்.”
வே.வா., “உத்தமமாக.”
வே.வா., “மவுனமாக்குவேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா