சங்கீதம் 103:1-22
தாவீதின் பாடல்.
103 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.எனக்குள் இருக்கும் எல்லாமே அவருடைய பரிசுத்த பெயரைப் புகழட்டும்.
2 என் ஜீவன் யெகோவாவைப் புகழட்டும்.அவர் செய்த எதையும் மறக்காமல் இருக்கட்டும்.+
3 உன் குற்றங்கள் எல்லாவற்றையும் அவர் மன்னிக்கிறார்.+உன்னுடைய நோய்கள் எல்லாவற்றையும் குணமாக்குகிறார்.+
4 உன் உயிரைப் படுகுழியிலிருந்து* காப்பாற்றுகிறார்.+தன்னுடைய மாறாத அன்பினாலும் இரக்கத்தினாலும் உனக்குக் கிரீடம் சூட்டுகிறார்.+
5 நீ இளமையோடும் கழுகு போலத் துடிப்போடும் இருக்கும்படி,+வாழ்நாளெல்லாம் உன்னை நன்மைகளால் திருப்திப்படுத்துகிறார்.+
6 அடக்கி ஒடுக்கப்படுகிற எல்லாருக்கும்+யெகோவா நீதி வழங்குகிறார்,+ நியாயம் செய்கிறார்.
7 அவர் மோசேக்குத் தன்னுடைய வழிகளைத் தெரியப்படுத்தினார்.+இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தன்னுடைய செயல்களைக் காட்டினார்.+
8 யெகோவா இரக்கமும் கரிசனையும்* உள்ளவர்.+அவர் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
9 அவர் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க மாட்டார்.+என்றென்றும் கோபத்தோடு இருக்க மாட்டார்.+
10 நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை.+நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.+
11 ஏனென்றால், பூமியைவிட வானம் எந்தளவு உயர்ந்திருக்கிறதோ,அவருக்குப் பயந்து நடக்கிறவர்களிடம் அவர் காட்டுகிற மாறாத அன்பும் அந்தளவு உயர்ந்திருக்கிறது.+
12 கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ,அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.+
13 ஒரு அப்பா தன் மகன்களுக்கு இரக்கம் காட்டுவதுபோல்,யெகோவாவும் தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+
14 நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார்.+நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.+
15 அற்ப மனுஷனுடைய நாட்கள் புல்லைப் போல இருக்கின்றன.+வயல்வெளிப் பூவைப் போல அவன் பூக்கிறான்.+
16 காற்று அடித்தவுடன் அது காணாமல் போகிறது.இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.
17 ஆனால், யெகோவா காட்டுகிற மாறாத அன்புஅவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேல் என்றென்றுமே இருக்கும்.+அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகள்மேல் அவருடைய நீதி தங்கும்.+
18 அவருடைய ஒப்பந்தத்தின்படி நடக்கிறவர்களின் மேலும்,+அவருடைய ஆணைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்கிறவர்களின் மேலும் அது தங்கும்.
19 யெகோவா தன்னுடைய சிம்மாசனத்தைப் பரலோகத்தில் உறுதியாக நிலைநிறுத்தியிருக்கிறார்.+ராஜாவாக அவர் எல்லாவற்றையும் ஆளுகிறார்.+
20 யெகோவாவின் பலம்படைத்த தூதர்களே,+அவர் சொல்வதைக் கேட்டு, அவருடைய வார்த்தையை நிறைவேற்றுகிற தூதர்களே,+நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.
21 யெகோவாவின் படைவீரர்களே,+அவருடைய விருப்பத்தை* நிறைவேற்றுகிற ஊழியர்களே,+அவரைப் புகழுங்கள்.
22 யெகோவாவின் படைப்புகளே, நீங்கள் எல்லாரும் அவரைப் புகழுங்கள்.அவர் ஆளுகிற எல்லா இடங்களிலும் அவரைப் புகழுங்கள்.
என் முழு ஜீவனும் யெகோவாவைப் புகழட்டும்.