சங்கீதம் 119:1-176
א [ஆலெஃப்]
119 குற்றமற்றவர்களாக வாழ்கிறவர்கள்* சந்தோஷமானவர்கள்.யெகோவாவுடைய சட்டத்தின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
2 அவருடைய நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+அவரை முழு இதயத்தோடு தேடுகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
3 அவர்கள் அநீதி செய்வதே இல்லை.அவர்கள் அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.+
4 கடவுளே, உங்கள் ஆணைகளைக் கவனமாகக் கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.+
5 நான் எப்போதும் சரியான வழியில் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+உங்களுடைய விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!
6 உங்கள் கட்டளைகளுக்கெல்லாம் நான் கவனம் செலுத்தும்போது,எனக்கு எந்த அவமானமும் வராது.+
7 உங்களுடைய நீதியான தீர்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது,நேர்மையான உள்ளத்தோடு உங்களைப் புகழ்வேன்.
8 உங்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பேன்.
என்னை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள்.
ב [பேத்]
9 இளைஞர்கள் எப்படிச் சுத்தமான வாழ்க்கை வாழ முடியும்?
எப்போதும் உங்கள் வார்த்தையின்படி நடக்க ஜாக்கிரதையாக இருப்பதன் மூலமே.+
10 நான் உங்களை முழு இதயத்தோடு தேடுகிறேன்.
நான் உங்களுடைய கட்டளைகளைவிட்டு விலகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+
11 நான் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்யாதபடி,+உங்கள் வார்த்தையை என் இதயத்தில் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறேன்.+
12 யெகோவாவே, உங்களுக்குப் புகழ் சேரட்டும்.உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.
13 நீங்கள் கொடுத்த எல்லா நீதித்தீர்ப்புகளையும்என் வாயால் அறிவிக்கிறேன்.
14 விலைமதிப்புள்ள எந்தப் பொருளையும்விட+உங்களுடைய நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு அதிக சந்தோஷத்தைத் தருகின்றன.+
15 உங்கள் ஆணைகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பேன்.*+உங்கள் வழிகளின் மேல் என் கண்களை வைத்திருப்பேன்.+
16 உங்களுடைய சட்டதிட்டங்களை நான் மிகவும் விரும்புகிறேன்.
உங்களுடைய வார்த்தையை மறக்கவே மாட்டேன்.+
ג [கீமெல்]
17 நான் உயிரோடிருந்து, உங்களுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்கும்படி,உங்கள் ஊழியனுக்கு அன்பாக உதவுங்கள்.+
18 உங்கள் சட்டத்திலுள்ள அருமையான விஷயங்களைத் தெளிவாகப் பார்க்கும்படிஎன் கண்களைத் திறந்திடுங்கள்.
19 நான் ஒரு அன்னியனாக வாழ்கிறேன்.+
உங்களுடைய கட்டளைகளை எனக்கு மறைக்காதீர்கள்.
20 உங்கள் நீதித்தீர்ப்புகளுக்காகஎப்போதும் ஏங்கித் தவிக்கிறேன்.
21 அகங்காரம்பிடித்த* ஆட்களை நீங்கள் கண்டிக்கிறீர்கள்.உங்கள் கட்டளைகளைவிட்டு விலகி, சபிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களைக் கண்டிக்கிறீர்கள்.+
22 உங்கள் நினைப்பூட்டுதல்களின்படி நான் நடந்திருக்கிறேன்.அதனால், என்னை ஏளனமாகவும் கேவலமாகவும் நடத்த யாரையும் விடாதீர்கள்.
23 தலைவர்கள் ஒன்றுகூடி எனக்கு எதிராகப் பேசினால்கூட,அடியேன் உங்கள் விதிமுறைகளைப் பற்றித்தான் ஆழமாக யோசிக்கிறேன்.*
24 உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் மிகவும் விரும்புகிறேன்.+அவை எனக்கு ஆலோசகர்கள்போல் இருக்கின்றன.+
ד [டாலத்]
25 நான் மண்ணில் அப்படியே விழுந்து கிடக்கிறேன்.+
நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என் உயிரைக் காப்பாற்றுங்கள்.+
26 என்னுடைய வழிகளைப் பற்றியெல்லாம் உங்களிடம் சொன்னேன், நீங்கள் எனக்கு வழிகாட்டினீர்கள்.உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
27 உங்கள் ஆணைகளின் அர்த்தத்தை எனக்குப் புரிய வையுங்கள்.அப்போது, உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+
28 துக்கத்தில் தூக்கம் வராமல் தவிக்கிறேன்.
நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என்னைப் பலப்படுத்துங்கள்.
29 போலியான வாழ்க்கை வாழாதபடி எனக்கு உதவுங்கள்.+கருணையோடு உங்கள் சட்டத்தைக் கற்றுக்கொடுங்கள்.
30 உண்மையோடு நடக்க நான் முடிவு செய்திருக்கிறேன்.+
உங்களுடைய நீதித்தீர்ப்புகள் சரியானவை என்பதை உணர்ந்திருக்கிறேன்.
31 உங்கள் நினைப்பூட்டுதல்களை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்.+
யெகோவாவே, எனக்கு ஏமாற்றத்தை தந்துவிடாதீர்கள்.*+
32 நான் உங்களுடைய கட்டளைகளுக்கு ஆர்வத்தோடு கீழ்ப்படிவேன்.*ஏனென்றால், அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு என் இதயத்தைத் திறக்கிறீர்கள்.*
ה [ஹே]
33 யெகோவாவே, உங்கள் விதிமுறைகளின்படி நடக்க எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+நான் கடைசிவரை அவற்றைக் கடைப்பிடிப்பேன்.+
34 எனக்குப் புரிந்துகொள்ளும் திறனைக் கொடுங்கள்.அப்போது, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்,
அதற்கு முழு இதயத்தோடு கீழ்ப்படிவேன்.
35 உங்கள் கட்டளைகளின்படி நடக்க எனக்கு வழிகாட்டுங்கள்.+நான் அவற்றில் பிரியமாக இருக்கிறேன்.
36 என் இதயம் என்னுடைய ஆதாயத்தைப் பற்றி யோசிக்காமல்,+உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றியே யோசிக்கும்படி செய்யுங்கள்.
37 வீணான காரியங்களைப் பார்க்காதபடி என் கண்களைத் திருப்புங்கள்.+நான் உயிர் பிழைக்கும்படி உங்கள் வழியில் நடத்துங்கள்.
38 உங்கள்மேல் பயபக்தி உண்டாகும்படி,அடியேனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.*
39 எந்த அவமானத்தை நினைத்துப் பயப்படுகிறேனோ அதை நீக்கிவிடுங்கள்.ஏனென்றால், உங்கள் நீதித்தீர்ப்புகள் நல்லவை.+
40 உங்களுடைய ஆணைகளுக்காக நான் எவ்வளவு ஏங்குகிறேன் என்று பாருங்கள்.
உங்களுடைய நீதியால் என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
ו [வா]
41 யெகோவாவே, நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே,மாறாத அன்பைக் காட்டி,+ என்னை மீட்டுக்கொள்ளுங்கள்.+
42 அப்போது, என்னை நோகடிக்கிறவனுக்குப் பதிலடி கொடுப்பேன்.ஏனென்றால், உங்கள் வார்த்தையில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
43 சத்திய வார்த்தையை என் வாயிலிருந்து ஒரேயடியாக எடுத்துவிடாதீர்கள்.ஏனென்றால், உங்கள் நீதித்தீர்ப்புகளையே நான் நம்பியிருக்கிறேன்.*
44 எப்போதும் உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பேன்.என்றென்றும் அதன்படி நடப்பேன்.+
45 நான் பாதுகாப்பான* இடத்தில் நடந்து திரிவேன்.+ஏனென்றால், உங்களுடைய ஆணைகளை ஆர்வமாகத் தேடுகிறேன்.
46 உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ராஜாக்களுக்கு முன்னால் பேசுவேன்.அதற்காக வெட்கப்பட மாட்டேன்.+
47 உங்களுடைய கட்டளைகளை நான் மிகவும் விரும்புகிறேன்.அவற்றை நேசிக்கிறேன்.+
48 உங்கள் கட்டளைகளை நேசிப்பதால்+ என் கைகளை உயர்த்தி உங்களிடம் வேண்டுவேன்.உங்களுடைய விதிமுறைகளைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+
ז [ஸாயின்]
49 அடியேனுக்குச் சொன்ன வார்த்தையை* நினைத்துப் பாருங்கள்.அதன் மூலம் நீங்கள் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறீர்கள்.*
50 நான் கஷ்டப்படும்போது அதுதான் எனக்கு ஆறுதல் தருகிறது.+உங்கள் வார்த்தை என்னை உயிரோடு காப்பாற்றியிருக்கிறது.
51 அகங்காரம் பிடித்தவர்கள் என்னைப் பயங்கரமாக ஏளனம் செய்கிறார்கள்.ஆனாலும், நான் உங்கள் சட்டத்தைவிட்டு விலகுவதில்லை.+
52 யெகோவாவே, பழங்காலத்திலிருந்து நீங்கள் கொடுத்திருக்கிற நீதித்தீர்ப்புகளை நினைத்துப் பார்க்கிறேன்.+அவை எனக்கு ஆறுதல் தருகின்றன.+
53 உங்கள் சட்டத்தைவிட்டு விலகிப்போகிற பொல்லாத ஜனங்களைப் பார்க்கும்போது,கோபத்தில் கொதிக்கிறேன்.+
54 நான் எங்கே குடியிருந்தாலும்,*உங்களுடைய விதிமுறைகளைப் பற்றியே பாடுவேன்.
55 யெகோவாவே, உங்களுடைய சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்காக,ராத்திரியில் உங்கள் பெயரை நினைத்துப் பார்க்கிறேன்.+
56 இதை நான் வழக்கமாகச் செய்துவருகிறேன்.எப்போதும் உங்கள் ஆணைகளின்படி நடந்திருக்கிறேன்.
ח [ஹேத்]
57 யெகோவாதான் என் பங்கு.+உங்கள் வார்த்தையின்படி நடப்பதாக நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.+
58 முழு இதயத்தோடு உங்களிடம் வேண்டுகிறேன்.+நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே எனக்குக் கருணை காட்டுங்கள்.+
59 மறுபடியும் உங்கள் நினைப்பூட்டுதல்களின்படி நடப்பதற்காகஎன் வழிகளை நான் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.+
60 உங்கள் கட்டளைகளுக்கு உடனடியாகக் கீழ்ப்படிகிறேன்,+கொஞ்சம்கூட தாமதிப்பதில்லை.
61 பொல்லாதவர்களின் கயிறுகள் என்னை இறுக்குகின்றன.ஆனாலும், உங்கள் சட்டத்தை நான் மறப்பதில்லை.+
62 உங்களுடைய நீதியான தீர்ப்புகளுக்கு நன்றி சொல்லநடுராத்திரியில் எழுந்துகொள்கிறேன்.+
63 உங்களுக்குப் பயந்து நடக்கிற எல்லாருக்கும் நான் நண்பன்.உங்கள் ஆணைகளின்படி நடக்கிற எல்லாருக்கும் நான் தோழன்.+
64 யெகோவாவே, இந்தப் பூமி உங்களுடைய மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+உங்களுடைய விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.
ט [டேத்]
65 யெகோவாவே, உங்கள் வார்த்தையின்படி,அடியேனுக்கு நல்லது செய்திருக்கிறீர்கள்.
66 எனக்கு நல்ல புத்தியையும் அறிவையும் கொடுங்கள்.+ஏனென்றால், உங்கள் கட்டளைகள்மேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
67 முன்பு நான் தவறான வழியில் போய்க்கொண்டிருந்தேன்,* கஷ்டத்தை அனுபவித்தேன்.ஆனால், இப்போது உங்களுடைய வார்த்தையின்படி நடக்கிறேன்.+
68 நீங்கள் நல்லவர்,+ உங்கள் செயல்களெல்லாம் நல்லவை.
உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
69 அகங்காரம் பிடித்தவர்கள் என்னைப் பற்றிப் பொய்களைப் பரப்புகிறார்கள்.ஆனால், நான் முழு இதயத்தோடு உங்கள் ஆணைகளின்படி நடக்கிறேன்.
70 அவர்களுடைய இதயத்தில் உணர்ச்சியே இல்லை.+ஆனால், நான் உங்களுடைய சட்டத்தை மிகவும் விரும்புகிறேன்.+
71 நான் கஷ்டப்பட்டது நல்லதுதான்.+அதனால்தான் உங்கள் விதிமுறைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
72 ஆயிரக்கணக்கான தங்கக் காசுகளையும் வெள்ளிக் காசுகளையும்விட+நீங்கள் கொடுத்த சட்டம்தான் எனக்கு நல்லது.+
י [யோத்]
73 உங்கள் கைகள் என்னை உண்டாக்கி, என்னை வடிவமைத்தன.உங்கள் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ளும்படி,
புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்.+
74 உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்கள் என்னைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள்.ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.*+
75 யெகோவாவே, உங்கள் நீதித்தீர்ப்புகள் நியாயமானவை என்பது எனக்குத் தெரியும்.+நீங்கள் உண்மையுள்ளவராக இருப்பதால்தான் என்னைத் தண்டித்தீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.+
76 அடியேனுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி,உங்கள் மாறாத அன்பினால்+ தயவுசெய்து என்னை ஆறுதல்படுத்துங்கள்.
77 என்மேல் இரக்கம் காட்டி, என்னைத் தொடர்ந்து வாழ வையுங்கள்.+ஏனென்றால், உங்களுடைய சட்டத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.+
78 அகங்காரம் பிடித்தவர்கள் அவமானம் அடையட்டும்.ஏனென்றால், அவர்கள் காரணமே இல்லாமல்* எனக்குக் கெடுதல் செய்கிறார்கள்.
ஆனால், நான் உங்கள் ஆணைகளைப் பற்றி ஆழமாக யோசிப்பேன்.*+
79 உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களும்,உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றித் தெரிந்தவர்களும் என்னிடம் திரும்பி வரட்டும்.
80 குறை சொல்ல முடியாதளவுக்கு என் இதயம் உங்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கட்டும்.+அப்போது, எனக்கு எந்த அவமானமும் வராது.+
כ [காஃப்]
81 நீங்கள் தருகிற மீட்புக்காக ஏங்கித் தவிக்கிறேன்.+ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.*
82 “நீங்கள் எப்போது எனக்கு ஆறுதல் தருவீர்கள்?”+ என்று கேட்கிறேன்.உங்கள் வாக்குறுதி நிறைவேறுவதைப் பார்க்க என் கண்கள் ஏங்குகின்றன.+
83 புகையில் காய்ந்துபோன தோல் பையைப் போல நான் இருக்கிறேன்.ஆனாலும், உங்கள் விதிமுறைகளை நான் மறப்பதில்லை.+
84 அடியேன் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் காத்திருக்க வேண்டும்?
என்னைக் கொடுமைப்படுத்துகிற ஆட்களுக்கு எப்போது தண்டனை கொடுப்பீர்கள்?+
85 அகங்காரம் பிடித்தவர்கள் எனக்குக் குழிபறிக்கிறார்கள்.அவர்கள் உங்கள் சட்டத்தை மதிப்பதே இல்லை.
86 உங்களுடைய கட்டளைகள் எல்லாமே நம்பகமானவை.
காரணமே இல்லாமல் சிலர் என்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள், எனக்கு உதவுங்கள்!+
87 அவர்கள் என்னைக் கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டிவிட்டார்கள்.ஆனாலும், உங்கள் ஆணைகளைவிட்டு நான் விலகவில்லை.
88 நீங்கள் கொடுத்த நினைப்பூட்டுதல்களை நான் கடைப்பிடிக்கும்படி,மாறாத அன்பினால் என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
ל [லாமெத்]
89 யெகோவாவே, உங்கள் வார்த்தை வானத்திலேஎன்றென்றும் நிலைத்திருக்கும்.+
90 நீங்கள் தலைமுறை தலைமுறைக்கும் உண்மையோடு நடந்துகொள்கிறீர்கள்.+
இந்தப் பூமியை உறுதியாக நிலைநிறுத்தினீர்கள், அது நிலைத்திருக்கிறது.+
91 உங்களுடைய நீதித்தீர்ப்புகளின்படி அவை* இன்றுவரை நிலைத்திருக்கின்றன.அவையெல்லாம் உங்கள் அடிமைகள்.
92 உங்களுடைய சட்டத்தை நான் விரும்பாமல் இருந்திருந்தால்,கஷ்டத்தில் அழிந்தே போயிருப்பேன்.+
93 உங்கள் ஆணைகளை மறக்கவே மாட்டேன்.ஏனென்றால், அவற்றின் மூலம் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.+
94 நான் உங்களுக்குச் சொந்தமானவன்; என்னைக் காப்பாற்றுங்கள்.+ஏனென்றால், உங்கள் ஆணைகளை ஆர்வமாகத் தேடியிருக்கிறேன்.+
95 பொல்லாதவர்கள் என்னை அழிப்பதற்குக் காத்திருக்கிறார்கள்.ஆனாலும், உங்கள் நினைப்பூட்டுதல்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துகிறேன்.
96 நிறைவான எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால், உங்களுடைய கட்டளைகளுக்கு எல்லையே இல்லை.
מ [மேம்]
97 உங்களுடைய சட்டத்தை எவ்வளவாய் நேசிக்கிறேன்!+
நாளெல்லாம் அதைப் பற்றியே ஆழமாக யோசிக்கிறேன்.*+
98 உங்கள் கட்டளைகளை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.அதனால், என்னுடைய எதிரிகளைவிட ஞானமாக நடந்துகொள்கிறேன்.+
99 உங்கள் நினைப்பூட்டுதல்களைப் பற்றி ஆழமாக யோசிக்கிறேன்.*அதனால், என்னுடைய எல்லா போதகர்களையும்விட விவேகமாக* நடந்துகொள்கிறேன்.+
100 உங்களுடைய ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.அதனால், பெரியவர்களைவிட புத்தியோடு* நடந்துகொள்கிறேன்.
101 உங்கள் வார்த்தையின்படி நடக்க விரும்புகிறேன்.அதனால், எந்தக் கெட்ட வழிக்கும் போகாமல் இருக்கிறேன்.+
102 நீங்கள் எனக்குப் போதித்திருப்பதால்,உங்களுடைய நீதித்தீர்ப்புகளைவிட்டு விலகாமல் இருக்கிறேன்.
103 உங்கள் வார்த்தைகள் என் வாய்க்கு எவ்வளவு ருசியாக இருக்கின்றன!தேனைவிட எவ்வளவு தித்திப்பாக இருக்கின்றன!+
104 புத்தியோடு* நடப்பதற்கு உங்கள் ஆணைகள் எனக்கு உதவுகின்றன.+
அதனால்தான் தவறான பாதை எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.+
נ [நூன்]
105 உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும்,என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது.+
106 உங்களுடைய நீதியான தீர்ப்புகளின்படி நடப்பதாக நான் உறுதிமொழி எடுத்திருக்கிறேன்.அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.
107 நான் கஷ்டத்தில் தவியாய்த் தவிக்கிறேன்.+
யெகோவாவே, உங்கள் வார்த்தையின்படியே என் உயிரைக் காப்பாற்றுங்கள்.+
108 யெகோவாவே, நான் விருப்பப்பட்டு செலுத்தும் புகழ்ச்சிப் பலியைப் பிரியத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
109 தினமும் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறேன்.ஆனாலும், உங்கள் சட்டத்தை நான் மறக்கவில்லை.+
110 பொல்லாதவர்கள் எனக்கு வலை விரித்திருக்கிறார்கள்.ஆனாலும், உங்களுடைய ஆணைகளை நான் மீறவில்லை.+
111 உங்கள் நினைப்பூட்டுதல்கள்தான் எனக்கு நிலையான சொத்து.அவைதான் என் இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன.+
112 எல்லா சமயத்திலும், கடைசிவரையிலும்,உங்களுடைய விதிமுறைகளின்படி நடக்க உறுதியாக இருக்கிறேன்.
ס [சாமெக்]
113 அரை மனதோடு* இருப்பவர்களை வெறுக்கிறேன்.+ஆனால், உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறேன்.+
114 நீங்கள்தான் என் தஞ்சம், என் கேடயம்.+ஏனென்றால், உங்களுடைய வார்த்தைமேல் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.*+
115 அக்கிரமக்காரர்களே, என் பக்கத்தில் வராதீர்கள்.+அப்போதுதான், என் கடவுளுடைய கட்டளைகளின்படி என்னால் நடக்க முடியும்.
116 கடவுளே, நீங்கள் வாக்குத் தந்தபடியே எனக்கு ஆதரவு கொடுங்கள்.+அப்போதுதான், நான் தொடர்ந்து உயிர்வாழ்வேன்.என்னுடைய நம்பிக்கை வீண்போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.+
117 எனக்கு ஆதரவாக இருங்கள்; அப்போது, நான் காப்பாற்றப்படுவேன்.+உங்கள் விதிமுறைகள்மேல் எப்போதும் கவனமாக இருப்பேன்.+
118 உங்களுடைய விதிமுறைகளை மீறுகிற எல்லாரையும் நீங்கள் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்.+ஏனென்றால், அவர்கள் பொய்புரட்டிலும் பித்தலாட்டத்திலும் ஊறிப்போயிருக்கிறார்கள்.
119 உலகத்திலுள்ள பொல்லாதவர்கள் எல்லாரையும் நீங்கள் வெறும் கசடுபோல் தூக்கிவீசுகிறீர்கள்.+அதனால்தான், உங்கள் நினைப்பூட்டுதல்களை நான் நேசிக்கிறேன்.
120 உங்களை நினைக்கும்போது பயத்தில் என் உடல் நடுங்குகிறது.உங்களுடைய நீதித்தீர்ப்புகளை நினைத்தால் பயமாக இருக்கிறது.
ע [ஆயின்]
121 நான் நியாயமாகவும் நீதியாகவும் நடந்திருக்கிறேன்.என்னைக் கொடுமைப்படுத்துகிற ஆட்களின் கையில் என்னைக் கொடுத்துவிடாதீர்கள்!
122 அடியேனுக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுங்கள்.அகங்காரம் பிடித்தவர்கள் என்னைக் கொடுமைப்படுத்தாமல் இருக்கட்டும்.
123 உங்களுடைய மீட்புக்காகவும் நீதியான வாக்குறுதிக்காகவும்காத்திருந்து காத்திருந்து என் கண்கள் பூத்துப்போய்விட்டன.+
124 உங்களுடைய மாறாத அன்பை அடியேனுக்குக் காட்டுங்கள்.+உங்களுடைய விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+
125 நான் உங்கள் ஊழியன்; புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்.+அப்போது, உங்கள் நினைப்பூட்டுதல்களைத் தெரிந்துகொள்வேன்.
126 யெகோவாவே, அவர்கள் உங்களுடைய சட்டத்தை மீறிவிட்டார்கள்.நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.+
127 அதனால்தான், உங்களுடைய கட்டளைகளை நான் நேசிக்கிறேன்.தங்கத்தைவிட, சொக்கத்தங்கத்தைவிட,* அவற்றை அதிகமாக நேசிக்கிறேன்.+
128 நீங்கள் தருகிற அறிவுரைகள்* ஒவ்வொன்றும் சரியானது என்று நம்புகிறேன்.+தவறான பாதைகள் எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.+
פ [பே]
129 உங்கள் நினைப்பூட்டுதல்கள் அருமையானவை.
அதனால்தான் அவற்றைக் கடைப்பிடிக்கிறேன்.
130 உங்கள் வார்த்தைகளின் அர்த்தத்தை நீங்கள் வெளிப்படுத்துவது எங்களுக்கு வெளிச்சத்தைத் தருகிறது.+அனுபவம் இல்லாதவர்களுக்குப் புரிந்துகொள்ளுதலைத் தருகிறது.+
131 உங்களுடைய கட்டளைகளுக்காக மிகவும் ஏங்குகிறேன்!+அந்த ஏக்கத்தில் வாயைத் திறந்து பெருமூச்சு விடுகிறேன்.
132 என் பக்கமாகத் திரும்பி, எனக்குக் கருணை காட்டுங்கள்.+உங்கள் பெயரை நேசிக்கிறவர்களை நியாயமாக நடத்துவது போல என்னையும் நடத்துங்கள்.+
133 உங்கள் வார்த்தையால் என்னைப் பத்திரமாக நடக்க வையுங்கள்.*கெட்டது எதுவும் என்னை ஆட்டிப்படைக்காமல் இருக்கட்டும்.+
134 கொடுமைக்காரர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.நான் உங்கள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 அடியேன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்க வையுங்கள்.+உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.
136 மக்கள் உங்களுடைய சட்டத்தின்படி நடக்காததைப் பார்க்கும்போது,என் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.+
צ [சாதே]
137 யெகோவாவே, நீங்கள் நீதியுள்ளவர்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் நியாயமானவை.+
138 நீங்கள் கொடுக்கிற நினைப்பூட்டுதல்கள் நீதியானவை.அவை முழுக்க முழுக்க நம்பகமானவை.
139 உங்கள்மேல் இருக்கிற பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிகிறது.+ஏனென்றால், என் எதிரிகள் உங்கள் வார்த்தைகளை மறந்துவிட்டார்கள்.
140 உங்களுடைய வார்த்தை முழுமையாகப் புடமிடப்பட்டிருக்கிறது.+அடியேன் அதை நேசிக்கிறேன்.+
141 நான் அற்பமானவன், யாரும் என்னை மதிப்பதில்லை.+ஆனாலும், உங்கள் ஆணைகளை நான் மறந்துவிடவில்லை.
142 உங்களுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது.+உங்களுடைய சட்டம் உண்மையானது.+
143 வேதனையும் கஷ்டமும் எனக்கு வந்தாலும்,உங்களுடைய கட்டளைகளை மிகவும் விரும்புகிறேன்.
144 உங்கள் நினைப்பூட்டுதல்கள் என்றென்றும் நீதியானவை.
அவற்றைப் புரிந்துகொள்ளும் திறனை எனக்குக் கொடுங்கள்,+ அப்போது நான் உயிர்வாழ்வேன்.
ק [கோஃப்]
145 முழு இதயத்தோடு உங்களிடம் வேண்டுகிறேன். யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்.
உங்கள் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.
146 உங்களைக் கூப்பிடுகிறேன்; என்னைக் காப்பாற்றுங்கள்.
உங்கள் நினைப்பூட்டுதல்களுக்கு நான் கீழ்ப்படிவேன்.
147 உங்களிடம் உதவி கேட்டுக் கெஞ்சுவதற்காகப் பொழுது விடிவதற்கு முன்பே எழுந்துகொண்டேன்.+ஏனென்றால், உங்கள் வார்த்தைகள்தான் என் நம்பிக்கை.*
148 உங்களுடைய வார்த்தையைப் பற்றி ஆழமாய் யோசிப்பதற்காக,*நடுராத்திரியில்கூட விழித்துக்கொள்கிறேன்.+
149 உங்களுடைய மாறாத அன்பினால் என் வேண்டுதலைக் கேளுங்கள்.+
யெகோவாவே, உங்கள் நியாயத்தின்படி என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
150 வெட்கக்கேடாக நடக்கிறவர்கள் என்னை நெருங்குகிறார்கள்.அவர்கள் உங்களுடைய சட்டத்தைவிட்டு ரொம்பத் தூரத்தில் இருக்கிறார்கள்.
151 யெகோவாவே, நீங்கள் என் பக்கத்தில் இருக்கிறீர்கள்.+உங்களுடைய கட்டளைகள் எல்லாமே உண்மையானவை.+
152 உங்களுடைய நினைப்பூட்டுதல்களைப் பற்றி ரொம்பக் காலத்துக்கு முன்பே தெரிந்துகொண்டேன்.அவற்றை என்றென்றும் நிலைத்திருக்கும்படி ஏற்படுத்தினீர்கள் என்று தெரிந்துகொண்டேன்.+
ר [ரேஷ்]
153 நான் படுகிற கஷ்டத்தைப் பாருங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.+ஏனென்றால், உங்கள் சட்டத்தை நான் மறக்கவில்லை.
154 எனக்காக வழக்காடுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்.+நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
155 பொல்லாதவர்களுக்கு மீட்பு தூரமாக இருக்கிறது.ஏனென்றால், உங்கள் விதிமுறைகளை அவர்கள் தேடவில்லை.+
156 யெகோவாவே, உங்களுடைய இரக்கம் மிகப் பெரியது.+
உங்களுடைய நியாயத்தின்படி என் உயிரைக் காப்பாற்றுங்கள்.
157 நிறைய பேர் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள், எதிர்க்கிறார்கள்.+ஆனாலும், உங்கள் நினைப்பூட்டுதல்களைவிட்டு நான் விலகவில்லை.
158 துரோகிகளை நான் அருவருப்பாகப் பார்க்கிறேன்.ஏனென்றால், அவர்கள் உங்கள் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில்லை.+
159 உங்களுடைய ஆணைகளை நான் எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்று பாருங்கள்.
யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பினால் என் உயிரைக் காப்பாற்றுங்கள்.+
160 சத்தியம்தான் உங்களுடைய வார்த்தையின் சாராம்சம்.+உங்களுடைய நீதியான தீர்ப்புகளெல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கின்றன.
ש [ஸீன்] அல்லது [ஷீன்]
161 காரணமே இல்லாமல் தலைவர்கள் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்.+ஆனாலும், உங்கள் வார்த்தைகளை நான் உயர்வாய் மதிக்கிறேன்.+
162 உங்களுடைய வார்த்தைகளை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.+ஏராளமான பொக்கிஷங்களைக் கண்டுபிடித்தவன் போலச் சந்தோஷப்படுகிறேன்.
163 பொய்யை வெறுக்கிறேன், அதை அருவருக்கிறேன்.+ஆனால், உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறேன்.+
164 உங்களுடைய நீதியான தீர்ப்புகளுக்காக,தினமும் ஏழு தடவை உங்களைப் புகழ்கிறேன்.
165 உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு.+எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.*
166 யெகோவாவே, நீங்கள் தரும் மீட்புக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.உங்கள் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேன்.
167 உங்கள் நினைப்பூட்டுதல்களின்படி நடக்கிறேன்.அவற்றை நெஞ்சார நேசிக்கிறேன்.+
168 உங்களுடைய ஆணைகளையும் நினைப்பூட்டுதல்களையும் கடைப்பிடிக்கிறேன்.நான் செய்கிற எல்லாமே உங்களுக்குத் தெரியும்.+
ת [ட்டா]
169 யெகோவாவே, என்னுடைய கூக்குரல் உங்கள் காதுகளை எட்டட்டும்.+
உங்கள் வார்த்தையின்படி, எனக்கு எல்லாவற்றையும் புரிய வையுங்கள்.+
170 கருணை கேட்டு நான் செய்யும் ஜெபம் உங்கள் சன்னிதியை எட்டட்டும்.
நீங்கள் வாக்குக் கொடுத்தபடியே என்னைக் காப்பாற்றுங்கள்.
171 என் உதடுகள் உங்களை அளவில்லாமல் புகழட்டும்.+ஏனென்றால், உங்களுடைய விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுக்கிறீர்கள்.
172 என் நாவு உங்கள் வார்த்தையைப் புகழ்ந்து பாடட்டும்.+ஏனென்றால், உங்களுடைய கட்டளைகள் எல்லாமே நீதியானவை.
173 உங்கள் கை எனக்குத் துணையாக இருக்கட்டும்.+ஏனென்றால், உங்கள் ஆணைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.+
174 யெகோவாவே, நீங்கள் தருகிற மீட்புக்காக ஏங்குகிறேன்.உங்களுடைய சட்டத்தை மிகவும் விரும்புகிறேன்.+
175 என்னை வாழ வையுங்கள்; அப்போதுதான், நான் உங்களைப் புகழ முடியும்.+உங்களுடைய நீதித்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
176 காணாமல்போன ஆடுபோல் வழிதவறிப் போய்விட்டேன்.+ அடியேனைத் தேடுங்கள்.ஏனென்றால், உங்கள் கட்டளைகளை நான் மறக்கவில்லை.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “தங்கள் வழியில் உத்தமமாக நடக்கிறவர்கள்.”
^ வே.வா., “படிப்பேன்.”
^ இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.
^ வே.வா., “படிக்கிறேன்.”
^ வே.வா., “படிப்பேன்.”
^ வே.வா., “நான் வெட்கப்பட்டுப்போக விட்டுவிடாதீர்கள்.”
^ நே.மொ., “கட்டளைகளின் வழியில் ஓடுவேன்.”
^ அல்லது, “ஏனென்றால், என் இதயத்துக்கு நம்பிக்கை தருகிறீர்கள்.”
^ அல்லது, “உங்களுக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.”
^ வே.வா., “நீதித்தீர்ப்புகளுக்காகவே நான் காத்திருக்கிறேன்.”
^ வே.வா., “விசாலமான.”
^ வே.வா., “படிப்பேன்.”
^ வே.வா., “கொடுத்த வாக்குறுதியை.”
^ வே.வா., “அதற்காக என்னைக் காத்திருக்க வைத்தீர்கள்.”
^ வே.வா., “நான் அன்னியனாகக் குடியிருக்கிற வீட்டில்.”
^ வே.வா., “தெரியாமல் பாவம் செய்துகொண்டிருந்தேன்.”
^ வே.வா., “உங்களுடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.”
^ அல்லது, “பொய்களைப் பேசி.”
^ வே.வா., “படிப்பேன்.”
^ வே.வா., “உங்களுடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.”
^ அதாவது, “அவருடைய படைப்புகள் அனைத்தும்.”
^ வே.வா., “படிக்கிறேன்.”
^ வே.வா., “படிக்கிறேன்.”
^ வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதலோடு.”
^ வே.வா., “புரிந்துகொள்ளுதலோடு.”
^ வே.வா., “இரண்டுபட்ட இதயத்தோடு.”
^ வே.வா., “உங்களுடைய வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன்.”
^ வே.வா., “புடமிடப்பட்ட தங்கத்தைவிட.”
^ வே.வா., “ஆணைகள்.”
^ வே.வா., “என் காலடிகளை உறுதிப்படுத்துங்கள்.”
^ வே.வா., “உங்கள் வார்த்தைகளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.”
^ வே.வா., “படிப்பதற்காக.”
^ வே.வா., “எதுவுமே அவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்காது.”