சங்கீதம் 14:1-7

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் பாடல். 14  முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில், “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள். அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+   ஆனால், யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+   அவர்கள் எல்லாரும் வழிவிலகிப் போயிருக்கிறார்கள்.+எல்லாரும் ஒரேபோல் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள். நல்லது செய்கிறவர்கள் யாருமே இல்லை,ஒருவன்கூட இல்லை.   தவறு செய்கிற யாருக்குமே புத்தி* இல்லையா? உணவை விழுங்குவதுபோல் அவர்கள் என் ஜனங்களை விழுங்குகிறார்கள். அவர்கள் யெகோவாவைக் கூப்பிடுவதில்லை.   அதனால், பயங்கரமான திகில் அவர்களைப் பிடித்துக்கொள்ளும்.+ஏனென்றால், நீதிமான்களின் தலைமுறையோடு யெகோவா இருக்கிறார்.   தவறு செய்கிறவர்களே, நீங்கள் எளியவனின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கப் பார்க்கிறீர்கள்.ஆனால், யெகோவா அவனுக்குத் தஞ்சமாக இருக்கிறார்.+   சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு மீட்பு வரட்டும்!+ சிறைபிடிக்கப்பட்ட தன் ஜனங்களை யெகோவா மறுபடியும் கூட்டிச்சேர்க்கும்போது,யாக்கோபு சந்தோஷப்படட்டும், இஸ்ரவேல் பூரித்துப்போகட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடு.”
வே.வா., “புரிந்துகொள்ளும் திறன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா