சங்கீதம் 142:1-7

மஸ்கீல்.* தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது+ செய்த ஜெபம். 142  உதவிக்காக நான் யெகோவாவைக் கூப்பிடுகிறேன்.+கருணைக்காக யெகோவாவிடம் கெஞ்சுகிறேன்.   என் கவலைகளை அவர்முன் கொட்டுகிறேன்.என் வேதனைகளை அவர்முன் சொல்கிறேன்.+   நான் நொந்துபோயிருக்கும்போது,* அவரிடம் வேண்டுகிறேன்.என் பாதையை அவர் கவனிக்கிறார்.+ நான் போகும் வழியில்எதிரிகள் கண்ணிகளை வைக்கிறார்கள்.   என்னுடைய வலது பக்கத்தைப் பாருங்கள்,என்மேல் யாருக்குமே அக்கறை இல்லை.+ நான் அடைக்கலம் தேடி ஓடுவதற்கு இடமே இல்லை.+என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை.   யெகோவாவே, உதவிக்காக உங்களைக் கூப்பிடுகிறேன். “நீங்கள்தான் எனக்கு அடைக்கலம்,+இந்த உலகத்தில் உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை” என்று சொல்கிறேன்.   உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்.நான் ரொம்பவே துவண்டுபோயிருக்கிறேன். என்னைத் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+அவர்கள் என்னைவிட பலசாலிகளாக இருக்கிறார்கள்.   நான் உங்களுடைய பெயரைப் புகழ விரும்புகிறேன்.அதனால், இந்தச் சிறையிலிருந்து என்னை வெளியே கொண்டுவாருங்கள். நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளட்டும்.நீங்கள் எனக்கு அன்போடு உதவுகிறீர்களே!

அடிக்குறிப்புகள்

வே.வா., “பலமிழந்திருக்கும்போது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா