சங்கீதம் 16:1-11
தாவீதின் மிக்தாம்.*
16 கடவுளே, எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்; நீங்கள்தான் என் அடைக்கலம்.+
2 நான் யெகோவாவிடம், “யெகோவாவே, நல்லதையெல்லாம் நீங்கள் எனக்குத் தருகிறீர்கள்.*
3 பூமியில் இருக்கிற பரிசுத்தவான்களால்,அந்த மதிப்புக்குரியவர்களால் என் மனதில் சந்தோஷம் பொங்குகிறது”+ என்று சொன்னேன்.
4 மற்ற தெய்வங்களைத் தேடிப்போகிறவர்களுக்குக் கஷ்டத்துக்குமேல் கஷ்டம் வரும்.+
அவர்களைப் போல நான் அந்தத் தெய்வங்களுக்கு இரத்தத்தைக் காணிக்கையாகக் கொடுக்க மாட்டேன்,அவற்றின் பெயர்களை உச்சரிக்கவும் மாட்டேன்.+
5 யெகோவாதான் என் பங்கு,+ அவர்தான் என் கிண்ணம்.+
நீங்கள்தான் என்னுடைய சொத்தைப் பாதுகாக்கிறீர்கள்.
6 எனக்கு அருமையான இடங்களைச் சொத்தாக அளந்து கொடுத்திருக்கிறீர்கள்.+
அதனால், நான் திருப்தியாக இருக்கிறேன்.
7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை+ நான் புகழ்வேன்.
ராத்திரியில்கூட என்னுடைய அடிமனதின் யோசனைகள்* என்னைத் திருத்துகின்றன.+
8 யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.+
அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது.*+
9 அதனால் என் இதயம் பூரிக்கிறது, எனக்குள் சந்தோஷம் பொங்கி வழிகிறது.
நான் பாதுகாப்பாக வாழ்கிறேன்.
10 நீங்கள் என்னைக் கல்லறையில்* விட்டுவிட மாட்டீர்கள்.+
உங்களுக்கு உண்மையாக* இருப்பவர் சவக்குழியைக் காண* விட மாட்டீர்கள்.+
11 வாழ்வின் பாதையை நீங்கள் எனக்குக் காட்டுகிறீர்கள்.+
உங்களுடைய சன்னிதியில் அளவில்லாத சந்தோஷம் உண்டு.+உங்களுடைய வலது பக்கத்தில் முடிவில்லாத மகிழ்ச்சி உண்டு.
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “என்னிடம் இருக்கிற நல்லதெல்லாம் உங்களிடமிருந்து வந்ததுதான்.”
^ வே.வா., “ஆழமான உணர்ச்சிகள்.” நே.மொ., “என் சிறுநீரகங்கள்.”
^ வே.வா., “நான் தடுமாறவே மாட்டேன்.”
^ வே.வா., “பற்றுமாறாமல்.”
^ அல்லது, “உண்மையாக இருப்பவரின் உடல் அழிந்துபோக.”