சங்கீதம் 29:1-11
தாவீதின் சங்கீதம்.
29 பலம்படைத்தவர்களின் மகன்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
2 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.
பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*
3 யெகோவாவின் குரல் தண்ணீர்மேல் கேட்கிறது.மகிமையான கடவுள் இடிபோல் முழங்குகிறார்.+
திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+
4 யெகோவாவின் குரல் மகா கம்பீரமானது.+யெகோவாவின் குரல் மகத்தானது.
5 யெகோவாவின் குரல் தேவதாரு மரங்களை முறிக்கிறது.ஆம், யெகோவாவின் குரல் லீபனோனின் தேவதாரு மரங்களை முறித்துப்போடுகிறது.+
6 அவர் லீபனோனை* கன்றுக்குட்டி போலவும்,சீரியோனை+ இளம் காட்டெருது போலவும் துள்ள வைக்கிறார்.
7 யெகோவாவின் குரல் தீ ஜுவாலைகளைத் தெறிக்க வைக்கிறது.+
8 யெகோவாவின் குரல் வனாந்தரத்தை அதிர வைக்கிறது.+யெகோவா காதேஸ்+ வனாந்தரத்தை அதிர வைக்கிறார்.
9 யெகோவாவின் குரல் மான்களை நடுங்கச் செய்து குட்டி போட வைக்கிறது.அவருடைய குரல் காடுகளை வெட்டவெளியாக்குகிறது.+
அவருடைய ஆலயத்திலுள்ள எல்லாரும் அவருக்கு மகிமை சேர்க்கிறார்கள்.*
10 யெகோவா வெள்ளப்பெருக்கின் மேல்* வீற்றிருக்கிறார்.+யெகோவா என்றென்றும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.+
11 யெகோவா தன்னுடைய மக்களுக்குப் பலம் தருவார்.+
யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சமாதானம் அருளுவார்.+
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “பரிசுத்த அலங்காரத்தோடு.”
^ அல்லது, “யெகோவா பரிசுத்தத்தில் மகத்தானவராக இருப்பதால் அவரை வணங்குங்கள்.”
^ அநேகமாக, “லீபனோன் மலைத்தொடரை.”
^ வே.வா., “எல்லாரும் ‘மகிமை!’ என்று சொல்கிறார்கள்.”
^ வே.வா., “வானத்தின் பெருங்கடல்மேல்.”