சங்கீதம் 5:1-12
நெகிலோத்* இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
5 யெகோவாவே, நான் பேசுவதைக் கேளுங்கள்.+நான் பெருமூச்சு விடுவதைக் கவனியுங்கள்.
2 என் கடவுளே, என் ராஜாவே, உதவிக்காக நான் கதறுவதைக் கேளுங்கள்.ஏனென்றால், நான் உங்களிடம்தான் ஜெபம் செய்கிறேன்.
3 யெகோவாவே, காலையில் நீங்கள் என் குரலைக் கேட்பீர்கள்.+என் கவலைகளைக் காலையில் உங்களிடம் கொட்டிவிட்டு,+ பதிலுக்காக ஆவலோடு காத்திருப்பேன்.
4 ஏனென்றால், நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல.+கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.+
5 ஆணவம் பிடித்தவர்கள் யாரும் உங்கள் முன்னால் நிற்க முடியாது.
அக்கிரமம் செய்கிற எல்லாரையும் நீங்கள் வெறுக்கிறீர்கள்.+
6 பொய் பேசுகிறவர்களை நீங்கள் அழிப்பீர்கள்.+
வன்முறையில் இறங்குகிறவர்களையும்* ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.+
7 நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டுவதால்+ உங்கள் ஆலயத்துக்குள் வருவேன்.+உங்கள்மேல் உள்ள பயபக்தியால் உங்கள் பரிசுத்த ஆலயத்தை நோக்கித் தலைவணங்குவேன்.+
8 யெகோவாவே, எதிரிகள் என்னைச் சூழ்ந்திருப்பதால்,உங்களுடைய நீதியான பாதையில் என்னை வழிநடத்துங்கள்.உங்களுடைய வழியில் தடைகள் இல்லாமல் நடப்பதற்கு உதவி செய்யுங்கள்.+
9 அவர்கள் சொல்கிற எதையுமே நம்ப முடியாது.அவர்களுக்கு உடம்பெல்லாம் விஷம்.*அவர்களுடைய தொண்டை ஒரு திறந்த கல்லறை.அவர்கள் தங்களுடைய நாவினால் போலியாகப் புகழ்கிறார்கள்.+
10 கடவுளே, நீங்கள் அவர்களைக் குற்றவாளிகள் என்று அறிவிப்பீர்கள்.அவர்களுடைய சதித்திட்டங்களே அவர்களைப் படுகுழியில் தள்ளிவிடும்.+
அவர்கள் உங்களுக்கு அடங்கி நடக்காமல் நிறைய குற்றங்கள் செய்திருக்கிறார்கள்.அதனால், அவர்களை விரட்டியடியுங்கள்.
11 உங்களிடம் தஞ்சம் அடைகிறவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+அவர்கள் எப்போதும் சந்தோஷத்தோடு உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள்.
அவர்களுக்குக் கெடுதல் செய்ய யாரையும் விட மாட்டீர்கள்.உங்கள் பெயரை நேசிக்கிறவர்கள் உங்களை நினைத்து சந்தோஷப்படுவார்கள்.
12 யெகோவாவே, நீதிமான்களை நீங்கள் ஆசீர்வதிப்பீர்கள்.அவர்களுக்குக் கருணை காட்டி,* பெரிய கேடயம்போல் எல்லா பக்கத்திலிருந்தும் பாதுகாப்பீர்கள்.+
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “கொலைகாரர்களையும்.”
^ வே.வா., “மாறாத அன்பை.”
^ வே.வா., “அவர்களுடைய உள்ளத்தில் இருப்பதெல்லாம் கெட்ட எண்ணம்.”
^ வே.வா., “அவர்களை அங்கீகரித்து.”