சங்கீதம் 50:1-23

ஆசாப்பின்+ சங்கீதம். 50  தேவாதி தேவனாகிய யெகோவா+ பேசினார்.சூரியன் உதிக்கிற திசைமுதல் மறைகிற திசைவரை* பரந்து விரிந்திருக்கிறபூமியை அவர் அழைக்கிறார்.   அழகே உருவான சீயோனிலிருந்து+ கடவுள் ஒளிவீசுகிறார்.   நம் கடவுள் வருவார், அவர் அமைதியாக இருக்க மாட்டார்.+ அவருக்கு முன்னால் நெருப்பு பற்றியெரிகிறது.+அவரைச் சுற்றி பயங்கரமான புயல்காற்று வீசுகிறது.+   தன்னுடைய மக்களுக்குத் தீர்ப்பு கொடுப்பதற்காக,+அவர் வானத்தையும்* பூமியையும் அழைத்து,+   “எனக்கு உண்மையாக* நடக்கிறவர்களை ஒன்றுகூட்டுங்கள்.பலியின் அடிப்படையில் என்னோடு ஒப்பந்தம் செய்கிறவர்களை+ ஒன்றுதிரட்டுங்கள்” என்று சொல்கிறார்.   வானம் அவருடைய நீதியை அறிவிக்கிறது.ஏனென்றால், கடவுள்தான் நீதிபதி.+ (சேலா)   “என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுவேன்.இஸ்ரவேலே, நான் உனக்கு எதிராகச் சாட்சி சொல்வேன்.+ நானே கடவுள், நானே உன் கடவுள்.+   நீ கொடுக்கிற பலிகளைப் பார்த்து நான் உன்னைக் கண்டிக்கவில்லை.எப்போதும் என் முன்னால் இருக்கிற உன் தகன பலிகளைப் பார்த்தும் கண்டிக்கவில்லை.+   உன் வீட்டில் இருக்கிற காளையோ,உன் தொழுவங்களில் இருக்கிற வெள்ளாடுகளோ எனக்குத் தேவை இல்லை.+ 10  காட்டில் இருக்கிற அத்தனை மிருகங்களும் என்னுடையதுதான்.+ஓராயிரம் மலைகளில் திரிகிற விலங்குகளும் என்னுடையதுதான். 11  மலைகளில் இருக்கிற எல்லா பறவைகளையும் எனக்குத் தெரியும்.+வெட்டவெளியில் கணக்குவழக்கில்லாமல் திரிகிற விலங்குகளும் என்னுடையதுதான். 12  எனக்குப் பசித்தால் நான் உன்னிடம் சொல்ல மாட்டேன்.ஏனென்றால், பூமியும் அதிலுள்ள அனைத்தும் என்னுடையதுதான்.+ 13  காளைகளின் இறைச்சியை நான் சாப்பிடுவேனா?வெள்ளாடுகளின் இரத்தத்தை நான் குடிப்பேனா?+ 14  உன்னுடைய நன்றிகளைக் கடவுளுக்குப் பலியாகச் செலுத்து.+உன் நேர்த்திக்கடன்களை உன்னதமான கடவுளுக்குச் செலுத்து.+ 15  இக்கட்டான காலத்தில் என்னைக் கூப்பிடு.+ நான் உன்னைக் காப்பாற்றுவேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.”+ 16  ஆனால், பொல்லாதவனைப் பார்த்து கடவுள் இப்படிச் சொல்வார்:“என்னுடைய விதிமுறைகளை விளக்கிச் சொல்லவோ,+ என்னுடைய ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசவோ உனக்கு என்ன உரிமை இருக்கிறது?+ 17  என் புத்திமதியை* நீ வெறுக்கிறாயே.என் வார்த்தைகளை அலட்சியம் செய்கிறாயே.+ 18  ஒரு திருடனைப் பார்த்தால், நீ அவனுக்கு உடந்தையாகிவிடுகிறாய்.*+மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களோடு கூடிப் பழகுகிறாய். 19  உன் வாயால் கெட்ட விஷயங்களைப் பரப்புகிறாய்.உன் நாவில் பொய்தான் ஒட்டிக்கொண்டிருக்கிறது.+ 20  நீ உட்கார்ந்துகொண்டு, உன் சொந்த சகோதரனுக்கு எதிராகப் பேசுகிறாய்.+உன் தாயின் வயிற்றில் பிறந்தவனைப் பற்றியே குறைசொல்கிறாய். 21  நீ இதையெல்லாம் செய்தபோது, நான் அமைதியாக இருந்தேன்.அதனால், நானும் உன்னைப் போலத்தான் என்று நினைத்துக்கொண்டாய். ஆனால், இப்போது நான் உன்னைக் கண்டிப்பேன்.உனக்கு எதிரான என் வழக்கைச் சொல்வேன்.+ 22  கடவுளை மறக்கிறவர்களே,+ தயவுசெய்து இதை யோசித்துப் பாருங்கள்.இல்லாவிட்டால், நான் உங்களை நார் நாராகக் கிழித்துவிடுவேன், உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். 23  எனக்கு நன்றிப் பலியைச் செலுத்துகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.+நேர்வழியைவிட்டு விலகாமல் இருக்கிறவனைநான் மீட்பேன்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கிழக்கிலிருந்து மேற்குவரை.”
வே.வா., “பரலோகத்தையும்.”
வே.வா., “பற்றுமாறாமல்.”
வே.வா., “நான் கண்டித்துத் திருத்துவதை.”
அல்லது, “அவனோடு சேர்ந்துகொள்கிறாய்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா