சங்கீதம் 68:1-35

இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். ஒரு பாடல். 68  கடவுள் எழுந்து, தன்னுடைய எதிரிகளைச் சிதறிப்போகச் செய்யட்டும்.அவரை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போகட்டும்.+   காற்றில் மறைந்துபோகும் புகைபோல் அவர்களை நீங்கள் மறைந்துபோகச் செய்யுங்கள்.நெருப்புக்கு முன்னால் மெழுகு உருகுவதுபோல்,கடவுளுக்கு முன்னால் பொல்லாதவர்கள் அழிந்துபோகட்டும்.+   ஆனால், நீதிமான்கள் சந்தோஷப்படட்டும்.+கடவுளுக்கு முன்னால் பூரிப்படையட்டும்.ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடையட்டும்.   கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்.*+ பாலைநிலத்தின் வழியாக* பயணம் செய்கிறவரைப் புகழ்ந்து பாடுங்கள். “யா”* என்பது அவருடைய பெயர்!+ அவருக்கு முன்னால் சந்தோஷப்படுங்கள்.   பரிசுத்த இடத்தில் குடிகொண்டிருக்கிற கடவுள்,+அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு அப்பாவாக இருக்கிறார்.விதவைகளுக்குப் பாதுகாவலராக* இருக்கிறார்.+   தன்னந்தனியாக இருக்கிறவர்களுக்குக் குடியிருக்க வீடு தருகிறார்.+கைதிகளை விடுதலையாக்கி சீரும் சிறப்புமாக வாழ வைக்கிறார்.+ ஆனால், வறட்டுப் பிடிவாதமுள்ளவர்கள்* வறண்ட இடத்தில்தான் குடியிருப்பார்கள்.+   கடவுளே, உங்களுடைய மக்களை நீங்கள் வழிநடத்தியபோது,*+பாலைவனத்தின் வழியாக நீங்கள் நடந்து வந்தபோது, (சேலா)   பூமி அதிர்ந்தது;+ உங்கள்முன் வானம் மழையைப் பொழிந்தது.கடவுளுக்குமுன், இஸ்ரவேலின் கடவுளுக்குமுன், இந்த சீனாய் மலை குலுங்கியது.+   கடவுளே, நீங்கள் நிறைய மழையைத் தந்தீர்கள்.களைத்துப்போன மக்களுக்குப் புதுத்தெம்பு கொடுத்தீர்கள். 10  அவர்கள் உங்களுடைய கூடாரங்களில் தங்கியிருந்தார்கள்.+கடவுளே, உங்களுக்கு நல்ல மனம் இருப்பதால் ஏழைகளுக்குத் தேவையானதைத் தந்தீர்கள். 11  யெகோவா கட்டளை கொடுக்கிறார்.நல்ல செய்தியை அறிவிக்கிற பெண்கள் படைபோல் ஏராளமாக இருக்கிறார்கள்.+ 12  ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் ஓடுகிறார்கள்,+ தப்பி ஓடுகிறார்கள்! வீட்டிலிருக்கிற பெண்ணுக்கும் சூறையாடப்பட்ட பொருள்களில் பங்கு கிடைக்கிறது.+ 13  மனிதர்களே, நீங்கள் தீ மூட்டி அதன் பக்கத்தில்* படுத்துக் கிடந்திருந்தாலும்,வெள்ளிச் சிறகுகளும் சொக்கத்தங்க இறகுகளும் உள்ள புறாஉங்களுக்குக் கிடைக்கும். 14  சர்வவல்லமையுள்ளவர் ராஜாக்களைச் சிதறிப்போக வைத்தார்.+அப்போது, சால்மோனில் பனிமழை பெய்தது.* 15  பாசான் மலை+ கடவுளுடைய* மலை.பாசான் மலை சிகரங்களைக் கொண்ட மலை. 16  சிகரங்களைக் கொண்ட மலைகளே,குடிகொள்வதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்த* மலையை+ ஏன் பொறாமையோடு பார்க்கிறீர்கள்? யெகோவா அங்குதான் என்றென்றும் குடியிருப்பார்.+ 17  கடவுளுடைய போர் ரதங்கள் பல்லாயிரம், பல்லாயிரம்!+ யெகோவா சீனாய் மலையிலிருந்து தன்னுடைய பரிசுத்த இடத்துக்கு வந்திருக்கிறார்.+ 18  “யா”வே,* நீங்கள் மேலே ஏறிப் போனீர்கள்.+சிறைபிடிக்கப்பட்ட கைதிகளைப் பிடித்துக்கொண்டு போனீர்கள்.மனிதர்களைப் பரிசுகளாக ஆக்கினீர்கள்.+அவர்கள் நடுவில் தங்கியிருப்பதற்காக, பிடிவாதக்காரர்களைக்கூட பரிசுகளாக ஆக்கினீர்கள்.+ 19  ஒவ்வொரு நாளும் நம்முடைய பாரத்தைச் சுமக்கிற யெகோவா புகழப்படட்டும்.+நமக்கு மீட்பு தரும் உண்மைக் கடவுள் புகழப்படட்டும். (சேலா) 20  உண்மைக் கடவுள் நமக்கு மீட்பு தரும் கடவுளாக இருக்கிறார்.+உன்னதப் பேரரசரான யெகோவாதான் சாவிலிருந்து நம்மைத் தப்பிக்க வைக்கிறார்.+ 21  கடவுள் தன்னுடைய எதிரிகளின் தலையை நொறுக்குவார்.தொடர்ந்து கெட்ட வழியில் போகிறவர்களின் மண்டையோட்டைப் பிளப்பார்.+ 22  யெகோவா இதைச் சொன்னார்:“நான் அவர்களை பாசானிலிருந்து+ திரும்பக் கூட்டிக்கொண்டு வருவேன்.கடலின் ஆழத்திலிருந்து கொண்டுவருவேன். 23  அப்போது, எதிரிகளின் இரத்தம் உன் பாதங்களில் வழிந்தோடும்.+அந்த இரத்தத்தை உன்னுடைய நாய்கள் நக்கும்.” 24  கடவுளே, நீங்கள் ஊர்வலம் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.என் கடவுளே, என் ராஜாவே, பரிசுத்த இடத்துக்கு நீங்கள் ஊர்வலமாக வருவதைப் பார்ப்பார்கள்.+ 25  பாடகர்கள் எல்லாரும் முன்னால் போகிறார்கள்,நரம்பிசைக் கருவிகளை வாசிக்கிறவர்கள் எல்லாரும் பின்னால் போகிறார்கள்.+ இளம் பெண்கள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டு நடுவில் போகிறார்கள்.+ 26  சபைகளிலே கடவுளைப் புகழுங்கள்.இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றியவர்களே, யெகோவாவைப் புகழுங்கள்.+ 27  சின்னஞ்சிறு கோத்திரமாகிய பென்யமீன்+ அவர்களை அடக்கி ஆளுகிறது.அங்கே யூதாவின் தலைவர்களும், ஆரவாரம் செய்கிற அவர்களுடைய கூட்டத்தாரும்,செபுலோனின் தலைவர்களும், நப்தலியின் தலைவர்களும் இருக்கிறார்கள். 28  நீ பலம் பெறுவாய் என்று கடவுள் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். எங்களுக்காகச் செயல்பட்ட கடவுளே, உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள்.+ 29  எருசலேமில் இருக்கிற உங்களுடைய ஆலயத்துக்காக+ராஜாக்கள் உங்களுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.+ 30  நாணல்களுக்கு நடுவே இருக்கிற காட்டு விலங்குகளையும்,கூட்டமாக இருக்கிற காளைகளையும்,+ அவற்றின் கன்றுகளையும் அதட்டுங்கள்.அப்போது, மக்கள் வெள்ளிக் காசுகளைக் கொண்டுவந்து தலைவணங்குவார்கள். ஆனால், போர் செய்ய விரும்புகிறவர்களை நீங்கள் சிதறிப்போக வைப்பீர்கள். 31  எகிப்திலிருந்து வெண்கலப் பொருள்கள் கொண்டுவரப்படும்.*+கடவுளுக்குக் காணிக்கைகளைக் கொடுப்பதற்காக கூஷ்* தேசத்தார் வேகமாக வருவார்கள். 32  பூமியிலுள்ள ராஜ்யங்களே, கடவுளைப் போற்றிப் பாடுங்கள்.+யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.* (சேலா) 33  காலம்காலமாக இருக்கிற வானாதி வானங்களிலே பவனி வருகிறவரைப் புகழ்ந்து பாடுங்கள்.+ இதோ! அவர் தன்னுடைய கம்பீரமான குரலில் இடிபோல் முழங்குகிறார். 34  கடவுள் பலம்படைத்தவர் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.+ அவருடைய மகிமை இஸ்ரவேலின் மேல் இருக்கிறது.அவருடைய பலம் வானத்தில்* இருக்கிறது. 35  பிரமாண்டமான ஆலயத்தில் இருக்கிற கடவுள் பயபக்திக்குரியவர்.*+ அவர்தான் இஸ்ரவேலின் கடவுள்.அவர்தான் மக்களுக்குப் பலத்தையும் சக்தியையும் தருகிறவர்.+ கடவுளுக்குப் புகழ் சேரட்டும்!

அடிக்குறிப்புகள்

வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
அல்லது, “மேகங்களின் மேல்.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
நே.மொ., “நீதிபதியாக.”
வே.வா., “கலகக்காரர்கள்.”
நே.மொ., “மக்கள்முன் நீங்கள் போனபோது.”
அல்லது, “ஆட்டுத்தொழுவங்களுக்குப் பக்கத்தில்.”
வே.வா., “பெய்ததுபோல் இருந்தது.”
வே.வா., “கம்பீரமான.”
வே.வா., “விரும்புகிற.”
“யா” என்பது யெகோவா என்ற பெயரின் சுருக்கம்.
அல்லது, “எகிப்திலிருந்து தூதுவர்கள் வருவார்கள்.”
வே.வா., “எத்தியோப்பியா.”
வே.வா., “இசை இசைத்திடுங்கள்.”
நே.மொ., “மேகங்களில்.”
வே.வா., “பிரமிக்க வைக்கிறவர்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா