சங்கீதம் 7:1-17

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கூஷ் பேசியதைப் பற்றி யெகோவாவிடம் தாவீது பாடிய புலம்பல் பாடல். 7  யெகோவாவே, என் கடவுளே, உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+ என்னைப் பாடாய்ப் படுத்துகிற எல்லாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுங்கள்.+   இல்லாவிட்டால், சிங்கத்தைப் போல அவர்கள் என்னைக் கடித்துக் குதறி,+தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள்; என்னைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.   யெகோவாவே, என் கடவுளே, நான் ஏதாவது தவறு செய்திருந்தால்,ஏதாவது அநியாயம் பண்ணியிருந்தால்,   நல்லது செய்தவனுக்கு நான் கெட்டது செய்திருந்தால்,+காரணம் இல்லாமல் என் எதிரியின் சொத்துகளைக் கொள்ளையடித்திருந்தால்,*   என் எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்.என்னை* தரையில் போட்டு மிதிக்கட்டும்.என் பேரையும் புகழையும் மண்ணோடு மண்ணாக்கட்டும். (சேலா)   யெகோவாவே, கோபத்தில் கொதித்தெழுங்கள்.என் எதிரிகளுடைய ஆத்திரத்தை அடக்க வாருங்கள்.+எனக்காக விழித்தெழுங்கள், எனக்கு நியாயம் கிடைக்கக் கட்டளையிடுங்கள்.+   உலக மக்கள் உங்களைச் சூழ்ந்து நிற்கட்டும்.அவர்களுக்கு எதிராக நீங்கள் பரலோகத்திலிருந்து நடவடிக்கை எடுப்பீர்கள்.   யெகோவா மக்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+ யெகோவாவே, என்னுடைய நீதிக்கும் உத்தமத்துக்கும் தகுந்தபடிஎனக்குத் தீர்ப்பு கொடுங்கள்.+   அக்கிரமக்காரர்கள் செய்கிற அக்கிரமங்களுக்குத் தயவுசெய்து முடிவுகட்டுங்கள். ஆனால், நீதிமான்களை நல்லபடியாக வாழ வையுங்கள்.+ஏனென்றால், நீங்கள் நீதியுள்ள கடவுள்,+ இதயங்களையும்+ ஆழமான உணர்ச்சிகளையும்* ஆராய்கிறவர்.*+ 10  கடவுள் என் கேடயமாக இருக்கிறார்.+நேர்மையான நெஞ்சமுள்ளவர்களின் மீட்பராக இருக்கிறார்.+ 11  கடவுள் நீதி தவறாத நீதிபதி.+ஒவ்வொரு நாளும் தன்னுடைய நீதித்தீர்ப்புகளை* கொடுக்கிறார். 12  மனம் திருந்தாதவர்களைத்+ தண்டிக்கத் தன்னுடைய வாளைக் கூர்மையாக்குகிறார்.+வில்லை வளைத்து, குறி பார்க்கிறார்.+ 13  பயங்கரமான ஆயுதங்களைத் தயார்படுத்துகிறார்.தன்னுடைய அம்புகளைத் தீ பறக்கும் அம்புகளாக்குகிறார்.+ 14  இதோ! அக்கிரமத்தைச் சுமக்கிறவனைப் பாருங்கள்.அவன் கெட்ட எண்ணத்தைக் கருத்தரித்து, பொய்களைப் பிறப்பிக்கிறான்.+ 15  அவன் ஒரு குழியை வெட்டி அதை ஆழமாகத் தோண்டுகிறான்.ஆனால், அவன் வெட்டிய குழியிலேயே விழுகிறான்.+ 16  அவன் செய்கிற அக்கிரமம் அவன் தலையிலேயே வந்து விழும்.+அவன் செய்கிற கொடுமை அவன் தலையிலேயே விடியும். 17  யெகோவா நியாயம் செய்வதற்காக நான் அவரைப் புகழ்வேன்.+உன்னதமான கடவுளாகிய+ யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.*+

அடிக்குறிப்புகள்

அல்லது, “என்னை எதிர்க்கிறவனைத் தப்பிக்க விட்டிருந்தால்.”
நே.மொ., “என் உயிரை.”
வே.வா., “சிறுநீரகங்களையும்.”
வே.வா., “சோதித்தறிகிறவர்.”
வே.வா., “கண்டனத் தீர்ப்புகளை.”
வே.வா., “இசை இசைப்பேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா