சங்கீதம் 74:1-23

மஸ்கீல்.* ஆசாப்பின்+ பாடல். 74  கடவுளே, ஏன் எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டீர்கள்?+ நீங்கள் மேய்க்கிற ஆடுகள்மேல் உங்கள் கோபம் ஏன் பற்றியெரிகிறது?+   ரொம்பக் காலத்துக்கு முன்னால் நீங்கள் சொந்தமாக்கிக்கொண்ட மக்களை நினைத்துப் பாருங்கள்.+நீங்கள் விடுவித்துக் கொண்டுவந்த உங்கள் சொத்தாகிய ஜனங்களையும்,+ நீங்கள் குடிகொண்டிருந்த சீயோன் மலையையும் நினைத்துப் பாருங்கள்.+   நிரந்தரமாக அழிக்கப்பட்ட இடத்தைப் போய்ப் பாருங்கள்.+ பரிசுத்த இடத்திலுள்ள எல்லாவற்றையும் எதிரி நாசமாக்கிவிட்டான்.+   உங்கள் விரோதிகள் உங்களுடைய வழிபாட்டு இடத்துக்குள் வந்து வெற்றி முழக்கம் செய்தார்கள்.+ அங்கே தங்களுடைய கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள்.   அடர்ந்த காட்டிலுள்ள மரங்களைக் கோடாலியால் வெட்டிக்கொண்டே போகிற ஆட்களைப் போல அவர்கள் இருந்தார்கள்.   அங்கிருந்த செதுக்கு வேலைப்பாடுகள்+ எல்லாவற்றையும் கோடாலிகளாலும் கடப்பாரைகளாலும் உடைத்து நொறுக்கினார்கள்.   உங்களுடைய ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+ உங்களுடைய பெயர் தாங்கிய கூடாரத்தைத் தரைமட்டமாக்கி, அதன் பரிசுத்தத்தைக் கெடுத்தார்கள்.   “கடவுளுடைய வழிபாட்டு இடங்கள் இந்தத் தேசத்தில் எங்கே இருந்தாலும் அவற்றைக் கொளுத்திவிட வேண்டும்” என்று அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.   நாங்கள் பார்ப்பதற்கு எந்த அடையாளங்களும் இல்லை.ஒரு தீர்க்கதரிசிகூட மீதியில்லை.எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்று தெரிந்தவர்கள் ஒருவர்கூட இல்லை. 10  கடவுளே, எவ்வளவு காலத்துக்குத்தான் எதிரி உங்களைப் பழித்துக்கொண்டே இருப்பான்?+ உங்களுடைய பெயரை அவன் என்றென்றும் அவமதித்துக்கொண்டுதான் இருப்பானா?+ 11  உங்கள் வலது கையை மடியிலிருந்து* எடுத்த பிறகு ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறீர்கள்?+ உங்கள் கையை நீட்டி அவர்களுக்கு ஒரு முடிவுகட்டுங்கள். 12  காலம்காலமாகவே கடவுள்தான் என் ராஜாவாக இருக்கிறார்.அவர்தான் இந்தப் பூமியில் மீட்பைத் தருகிறார்.+ 13  கடவுளே, உங்களுடைய பலத்தால் கடலைக் கொந்தளிக்க வைத்தீர்கள்.+கடலில் இருக்கிற ராட்சதப் பிராணிகளின் மண்டையைப் பிளந்தீர்கள். 14  லிவியாதானின்* தலையை நொறுக்கினீர்கள்.பாலைவனங்களில் குடியிருக்கிற மக்களுக்கு அதைச் சாப்பிடக் கொடுத்தீர்கள். 15  நிலத்தைப் பிளந்து நீரூற்றுகளையும் நீரோடைகளையும் பாய வைத்தீர்கள்.+வற்றாத நதிகளை வறண்டுபோக வைத்தீர்கள்.+ 16  பகலும் உங்களுடையது, இரவும் உங்களுடையது. நீங்கள்தான் வெளிச்சத்தையும்* சூரியனையும் உண்டாக்கினீர்கள்.+ 17  பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தீர்கள்.+கோடைக் காலத்தையும் குளிர் காலத்தையும் ஏற்படுத்தினீர்கள்.+ 18  யெகோவாவே, எதிரி எப்படியெல்லாம் உங்களைப் பழித்துப் பேசினான் என்று நினைத்துப் பாருங்கள்.முட்டாள் ஜனங்கள் உங்களுடைய பெயரை எப்படி அவமதிக்கிறார்கள் என்று பாருங்கள்!+ 19  உங்களுடைய காட்டுப் புறாவின் உயிரைக் கொடிய மிருகங்களிடம் கொடுத்துவிடாதீர்கள். கஷ்டத்தில் தவிக்கிற உங்களுடைய மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்துவிடாதீர்கள். 20  நீங்கள் செய்த ஒப்பந்தத்தை நினைத்துப் பாருங்கள்.பூமியின் இருட்டான இடங்களில் கொடுமைக்காரர்கள்* நிறைந்திருக்கிறார்கள். 21  அடக்கி ஒடுக்கப்படுகிறவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பிப் போகாதிருக்கட்டும்.+ஏழை எளியவர்கள் உங்களுடைய பெயரைப் புகழட்டும்.+ 22  கடவுளே, எழுந்து வந்து உங்களுக்காக வழக்காடுங்கள். முட்டாள்கள் உங்களை நாள் முழுவதும் எப்படிப் பழித்துப் பேசுகிறார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.+ 23  உங்களுடைய எதிரிகள் பேசுகிற பேச்சை மறந்துவிடாதீர்கள். உங்களை எதிர்க்கிறவர்கள் போடுகிற கூச்சல் சத்தம் மேலே எழும்பிக்கொண்டே இருக்கிறது.

அடிக்குறிப்புகள்

வே.வா., “உங்கள் அங்கி மடிப்புகளிலிருந்து.”
வே.வா., “ஒளிச்சுடரையும்.”
வே.வா., “வன்முறை செய்கிறவர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா