சங்கீதம் 75:1-10

இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற சங்கீத இசையில்; ஆசாப்பின்+ பாடல். 75  கடவுளே, உங்களுக்கு நன்றி சொல்கிறோம், நாங்கள் நன்றி சொல்கிறோம்.நீங்கள் பக்கத்திலேயே இருக்கிறீர்கள்.*+உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றி ஜனங்கள் அறிவிக்கிறார்கள்.   நீங்கள் எங்களிடம், “குறித்த நேரத்திலே,நான் நீதியோடு நியாயந்தீர்க்கிறேன்.   பூமியும் அதில் குடியிருப்பவர்களும் பயத்தில் ஆடிப்போனபோது,*நான்தான் பூமியின் தூண்களை உறுதியாக நிற்க வைத்தேன்” என்று சொல்கிறீர்கள். (சேலா)   நான் பெருமையடிப்பவனைப் பார்த்து, “பெருமையடிக்காதே” என்று சொல்கிறேன். பொல்லாதவனைப் பார்த்து, “நீ பலசாலி என்று பெருமையடிக்காதே.   நீ பெரிய பலசாலி என்று பெருமையடிக்காதே.ஆணவமாகப் பேசாதே.   ஏனென்றால், பெருமையும் புகழும்கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ தெற்கிலிருந்தோ வருவதில்லை.   கடவுள்தான் நீதிபதி.+ அவர்தான் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.+   யெகோவாவின் கையில் ஒரு கிண்ணம் இருக்கிறது.+அதிக போதையேற்றும் திராட்சமது* அதில் பொங்கி வழிகிறது. அவர் அதை முழுவதுமாக ஊற்றுவார்.அப்போது, பூமியில் இருக்கிற பொல்லாதவர்கள் அதன் கசடைக்கூட விட்டுவைக்காமல் குடிப்பார்கள்”+ என்று சொல்கிறேன்.   நான் இதை என்றென்றும் அறிவிப்பேன்.யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.* 10  ஏனென்றால், “பொல்லாதவர்களுடைய பலத்தையெல்லாம் நான் ஒழித்துவிடுவேன்.ஆனால், நீதிமான்களுடைய பலத்தை அதிகரிப்பேன்” என்று அவர் சொல்கிறார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “உங்கள் பெயர் பக்கத்திலேயே இருக்கிறது.”
நே.மொ., “கரைந்துபோனபோது.”
வே.வா., “கலப்புத் திராட்சமது.”
வே.வா., “இசை இசைப்பேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா