சங்கீதம் 80:1-19

இசைக் குழுவின் தலைவனுக்கு; “லில்லி மலர்கள்” என்ற இசையில்; ஒரு நினைப்பூட்டுதல். ஆசாப்பின்+ சங்கீதம். 80  இஸ்ரவேலின் மேய்ப்பரே,யோசேப்பை மந்தைபோல் நடத்துகிறவரே,+ கேளுங்கள். கேருபீன்களுக்கு மேலாக* வீற்றிருக்கிறவரே,+ ஒளிவீசுங்கள்.   எப்பிராயீமுக்கும், பென்யமீனுக்கும், மனாசேக்கும் முன்னால்உங்கள் வல்லமையைக் காட்டுங்கள்.+எங்களை மீட்க வாருங்கள்.+   கடவுளே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.+உங்கள் முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க வையுங்கள், அப்போது நாங்கள் பிழைப்போம்.+   பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் உங்கள் மக்களின் ஜெபத்தை வெறுத்து ஒதுக்குவீர்கள்?+   கண்ணீரை அவர்களுக்கு உணவாகக் கொடுக்கிறீர்கள்.கண்ணீரையே குடம் குடமாகக் குடிக்கவும் வைக்கிறீர்கள்.   சுற்றுவட்டார மக்கள் எங்களைப் பிடிக்க போட்டாபோட்டி போடுவதற்கு விடுகிறீர்கள்.விரோதிகள் எங்களை இஷ்டம்போல் கேலி செய்கிறார்கள்.+   பரலோகப் படைகளின் கடவுளே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.உங்கள் முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க வையுங்கள், அப்போது நாங்கள் பிழைப்போம்.+   நீங்கள் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக்+ கொண்டுவந்தீர்கள். மற்ற தேசத்து மக்களைத் துரத்திவிட்டு அதை நட்டு வைத்தீர்கள்.+   அதற்காக ஒரு இடத்தைத் தயார் செய்தீர்கள்.அது வேரூன்றி வளர்ந்து, தேசம் முழுக்கப் படர்ந்தது.+ 10  அதன் நிழல் மலைகளை மூடியது.அதன் கிளைகள் கடவுளுடைய தேவதாரு மரங்களை மூடின. 11  அதன் கொடிகள் கடல்வரை எட்டின.அதன் கிளைகள் ஆறுவரை* படர்ந்தன.+ 12  அந்தத் திராட்சைத் தோட்டத்தின் கற்சுவர்களை ஏன் இடித்துப்போட்டீர்கள்?+போவோர் வருவோர் எல்லாரும் அதன் பழங்களைப் பறிக்கும்படி ஏன் செய்தீர்கள்?+ 13  காட்டுப் பன்றிகள் அதை நாசமாக்குகின்றன.காட்டு விலங்குகள் அவற்றைத் தின்றுதீர்க்கின்றன.+ 14  பரலோகப் படைகளின் கடவுளே, தயவுசெய்து எங்களிடம் திரும்புங்கள். பரலோகத்திலிருந்து கீழே பாருங்கள். இந்தத் திராட்சைக் கொடியைக் கவனித்துக்கொள்ளுங்கள்.+ 15  உங்கள் வலது கையால் நட்டு வைத்த கொடியை*+ பாருங்கள்.உங்களுக்காக நீங்கள் பலப்படுத்திய உங்கள் மகனை*+ பாருங்கள். 16  இந்தக் கொடி வெட்டப்பட்டு நெருப்பில் போடப்படுகிறது.+ நீங்கள் மிரட்டும்போது அவர்கள் அழிந்துபோகிறார்கள். 17  உங்களுடைய வலது பக்கத்தில் நிற்கிற மனிதனுக்குக் கைகொடுத்து உதவுங்கள்.உங்களுக்காக நீங்கள் பலப்படுத்திய மனிதகுமாரனுக்கு ஆதரவு கொடுங்கள்.+ 18  அப்போது, நாங்கள் உங்களைவிட்டுப் போகவே மாட்டோம். எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள், அப்போது உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வோம். 19  பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.உங்கள் முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க வையுங்கள், அப்போது நாங்கள் பிழைப்போம்.+

அடிக்குறிப்புகள்

அல்லது, “நடுவில்.”
அதாவது, “யூப்ரடிஸ் ஆறுவரை.”
வே.வா., “தண்டை.”
வே.வா., “கிளையை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா