சங்கீதம் 81:1-16

இசைக் குழுவின் தலைவனுக்கு; கித்தீத்* இசையில்; ஆசாப்பின்+ பாடல். 81  நம் பலமாக இருக்கிற கடவுளுக்குமுன் சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.+ யாக்கோபின் கடவுளுக்குமுன் வெற்றி முழக்கம் செய்யுங்கள்.   இன்னிசையை ஆரம்பியுங்கள், கஞ்சிராவை எடுத்துத் தட்டுங்கள்.இனிய ஓசை எழுப்பும் யாழையும் நரம்பிசைக் கருவியையும் வாசியுங்கள்.   மாதப் பிறப்பு* நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+பண்டிகை கொண்டாடப்படுகிற பௌர்ணமி நாளில் ஊதுகொம்பை ஊதுங்கள்.+   ஏனென்றால், இது இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு.யாக்கோபின் கடவுளால் கொடுக்கப்பட்ட ஆணை.+   அவர் எகிப்து தேசத்துக்கு விரோதமாகப் போனபோது,+யோசேப்புக்கு அதை ஒரு நினைப்பூட்டுதலாகக் கொடுத்தார்.+ அடையாளம் தெரியாத ஒரு குரலை* நான் கேட்டேன்.   அது இப்படிச் சொன்னது: “அவனுடைய தோளில் இருந்த சுமையை நான் எடுத்துவிட்டேன்.+கூடையைப் பிடித்திருந்த அவனுடைய கைகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டேன்.   இக்கட்டான சமயத்தில் நீ என்னைக் கூப்பிட்டாய், நான் உன்னைக் காப்பாற்றினேன்.+இடிமுழக்கம் உண்டாகிற மேகத்திலிருந்து* பதில் சொன்னேன்.+ மேரிபாவின்* தண்ணீருக்குப் பக்கத்தில் உன்னைச் சோதித்தேன்.+ (சேலா)   என் ஜனங்களே, கேளுங்கள். நான் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்வேன். இஸ்ரவேலே, நான் சொல்வதை நீ கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+   அப்போது, உன் நடுவே வேறு தெய்வங்களே இருக்காது.பொய் தெய்வத்துக்கு முன்னால் நீ தலைவணங்க மாட்டாய்.+ 10  யெகோவாவாகிய நான்தான் உன் கடவுள்.எகிப்து தேசத்திலிருந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தவர் நான்தான்.+ உன் வாயை நன்றாகத் திற, நான் அதை நிரப்புவேன்.+ 11  ஆனால், என் ஜனங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை.இஸ்ரவேல் எனக்கு அடங்கி நடக்கவில்லை.+ 12  அதனால், அவர்களுடைய பிடிவாதமான இதயத்தின்படி நடக்க அவர்களை விட்டுவிட்டேன்.அவர்களுக்கு எது சரியென்று பட்டதோ அதைத்தான் செய்தார்கள்.+ 13  என் ஜனங்கள் என் பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!+ 14  அப்போது, அவர்களுடைய எதிரிகளை நான் உடனடியாக அடக்கிவிடுவேன்.என் கையை நீட்டி அவர்களுடைய விரோதிகளைத் தாக்குவேன்.+ 15  யெகோவாவை வெறுப்பவர்கள் அவருக்குமுன் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.அவர்களுக்கு வரப்போகும் நிலைமை என்றென்றுமே மாறாது. 16  ஆனால், உனக்கு* அவர் உயர்தரமான கோதுமையைச் சாப்பிடக் கொடுப்பார்.+மலைத் தேனைக் கொடுத்து உன்னைத் திருப்திப்படுத்துவார்.”+

அடிக்குறிப்புகள்

வே.வா., “முதலாம் பிறை.”
வே.வா., “புரியாத ஒரு பாஷையை.”
அர்த்தம், “தகராறு செய்தல்.”
நே.மொ., “மறைவிடத்திலிருந்து.”
அதாவது, “கடவுளுடைய மக்களுக்கு.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா