சங்கீதம் 82:1-8

ஆசாப்பின்+ சங்கீதம். 82  கடவுள் தன்னுடைய பரிசுத்த சபையில் நிற்கிறார்.+கடவுள்களின்* நடுவே இப்படித் தீர்ப்பு கொடுக்கிறார்:+   “இன்னும் எவ்வளவு காலம்தான் அநியாயமாகத் தீர்ப்பு சொல்வீர்கள்?+எவ்வளவு காலம்தான் பொல்லாதவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?+ (சேலா)   எளியவர்களுக்கும் அநாதைகளுக்கும்* நீதி செய்யுங்கள்.+ ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் நியாயம் வழங்குங்கள்.+   ஏழை எளியவர்களைக் காப்பாற்றுங்கள்.பொல்லாதவர்களின் பிடியிலிருந்து அவர்களை விடுவியுங்கள்.”   இந்த நீதிபதிகளுக்கு ஒன்றும் தெரியாது, எதுவும் புரியாது.+இவர்கள் எல்லாரும் இருட்டில் நடக்கிறார்கள்.பூமியின் அஸ்திவாரங்களெல்லாம் அசைக்கப்படுகின்றன.+   “‘நீங்கள் எல்லாரும் கடவுள்கள்,*+நீங்கள் எல்லாரும் உன்னதமான கடவுளின் பிள்ளைகள்.   ஆனால், மற்ற மனிதர்களைப் போலவே நீங்களும் இறந்துபோவீர்கள்.+மற்ற தலைவர்களைப் போலவே நீங்களும் செத்துப்போவீர்கள்’+ என்று நான் சொன்னேன்.”   கடவுளே, எல்லா தேசங்களும் உங்களுக்குத்தான் சொந்தம்.அதனால், எழுந்து வந்து பூமிக்குத் தீர்ப்பு கொடுங்கள்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “கடவுளைப் போன்றவர்களின்.”
வே.வா., “அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும்.”
வே.வா., “கடவுளைப் போன்றவர்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா