சங்கீதம் 83:1-18
ஒரு பாடல். ஆசாப்பின்+ சங்கீதம்.
83 கடவுளே, மவுனமாக இருக்காதீர்கள்.+அமைதியாக இருக்காதீர்கள்; தேவனே, சும்மாயிருக்காதீர்கள்.
2 பாருங்கள்! உங்களுடைய எதிரிகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.+உங்களை வெறுக்கிறவர்கள் ஆணவமாக நடக்கிறார்கள்.
3 உங்களுடைய மக்களுக்கு எதிராக ரகசியமாய்த் திட்டம் தீட்டுகிறார்கள்.நீங்கள் பொக்கிஷமாக நினைக்கிற ஜனங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்.
4 அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து,“இஸ்ரவேலின் பெயர்கூட யாருடைய ஞாபகத்துக்கும் வராதபடி,அந்தத் தேசத்தை அடியோடு அழிப்போம், வாருங்கள்”+ என்று சொல்கிறார்கள்.
5 அவர்கள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள்.உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.*+
6 ஏதோமியர்களும் இஸ்மவேலர்களும்* மோவாபியர்களும்+ ஆகாரியர்களும்+
7 கேபாலைச் சேர்ந்தவர்களும் அம்மோனியர்களும்+ அமலேக்கியர்களும்பெலிஸ்தியர்களும்+ தீரு மக்களும்+ கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
8 அசீரியர்களும்+ அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.லோத்துவின் வம்சத்தாருக்கு*+ அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள். (சேலா)
9 அதனால், மீதியானியர்களுக்குச் செய்தது போலவும்,+ கீசோன் நீரோடைக்கு* பக்கத்திலேசிசெராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போலவும்+ அவர்களுக்குச் செய்யுங்கள்!
10 அவர்கள் எந்தோரில்+ அழிக்கப்பட்டார்கள்.நிலத்துக்கு எருவானார்கள்.
11 ஒரேபுக்கும் சேபுக்கும் செய்ததுபோல்+ அவர்களுடைய அதிபதிகளுக்குச் செய்யுங்கள்.செபாவுக்கும் சல்முனாவுக்கும் செய்ததுபோல்+ அவர்களுடைய தலைவர்களுக்குச் செய்யுங்கள்.
12 ஏனென்றால், “கடவுள் குடிகொண்டிருக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வோம்” என்று அவர்கள் சொன்னார்கள்.
13 என் கடவுளே, காற்றில் சுழற்றியடிக்கப்படும் முட்செடி போல அவர்களை ஆக்குங்கள்.+காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற பதரைப் போல ஆக்குங்கள்.
14 காட்டைக் கொளுத்துகிற தீ போலவும்,மலைகளைச் சுட்டெரிக்கிற தீ ஜுவாலை போலவும்,+
15 அவர்களை உங்களுடைய சூறாவளியால் துரத்திப்பிடியுங்கள்.+உங்களுடைய புயல்காற்றினால் அவர்களை மிரள வையுங்கள்.+
16 அவர்களுடைய முகங்களில் அவமானம் படியும்படி செய்யுங்கள்.யெகோவாவே, அப்போதுதான் அவர்கள் உங்களுடைய பெயரைத் தேடி வருவார்கள்.
17 அவர்கள் என்றென்றும் அவமானப்பட்டு, கதிகலங்கிப்போகட்டும்.கேவலப்பட்டு, அழிந்துபோகட்டும்.
18 யெகோவா என்ற பெயருள்ள+ நீங்கள் ஒருவர்தான்,இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான* கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.”
^ வே.வா., “ஏதோம் கூடாரத்தாரும் இஸ்மவேல் கூடாரத்தாரும்.”
^ அதாவது, 6, 7 வசனங்களில் சொல்லப்பட்டுள்ள மோவாபியர்களும் அம்மோனியர்களும்.
^ வே.வா., “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.”
^ வே.வா., “மிக உயர்ந்த.”