நீதிமொழிகள் 18:1-24

18  தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் தன்னுடைய* ஆசைகளையே தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான்.எல்லா ஞானத்தையும்* அவன் ஒதுக்கித்தள்ளுகிறான்.   புத்தியில்லாதவன் எதையும் புரிந்துகொள்ள விரும்ப மாட்டான்.தன்னுடைய உள்ளத்தில் இருப்பதைத்தான் சொல்ல விரும்புவான்.+   பொல்லாதவன் வரும்போது அவமதிப்பும் வரும்.அவமரியாதையோடு அவமானமும் வரும்.+   ஒருவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன.+ ஞானத்தின் ஊற்று, பாய்ந்தோடுகிற நீரோடைபோல் இருக்கிறது.   பொல்லாதவனுக்குப் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+நிரபராதிக்கு நியாயம் வழங்காமல் இருப்பது சரியல்ல.+   முட்டாளின் பேச்சினால் சண்டைகள்தான் வரும்.+அவன் வாயைத் திறந்தால் அடிதான் விழும்.+   முட்டாள் தன் வாயாலேயே கெட்டுப்போகிறான்.+அவனுடைய பேச்சு அவனுடைய உயிருக்கே உலை வைக்கிறது.   இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.+அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+   வேலையில் சோம்பலாக இருக்கிறவன்,நாசம் உண்டாக்குகிறவனுக்குச் சகோதரனாக* இருக்கிறான்.+ 10  யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+ நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+ 11  பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது.அதை ஒரு கோட்டைச் சுவர்போல் அவன் கற்பனை செய்துகொள்கிறான்.+ 12  ஆணவமான இதயம் இருந்தால் அழிவு வரும்.+மனத்தாழ்மை இருந்தால் மகிமை வரும்.+ 13  ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம்.அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.+ 14  மனதில் தைரியம் இருக்கும்போது நோயைத் தாங்கிக்கொள்ளலாம்.+ஆனால், மனம் உடைந்துபோகும்போது யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?+ 15  புத்தி* உள்ளவனின் இதயம் அறிவைச் சம்பாதிக்கும்.+ஞானமுள்ளவனின் காது அறிவைத் தேடும். 16  அன்பளிப்பு கொடுக்கிறவனுக்குப் பல வாய்ப்புகள் திறக்கின்றன.+பெரிய மனிதர்களைப் பார்த்துப் பேச வாய்ப்புகள் கிடைக்கின்றன. 17  முதலில் வாதாடுகிறவனின் பக்கம்தான் நியாயம் இருப்பதுபோல் தெரியும்.+ஆனால், எதிர்க்கட்சிக்காரன் வந்து குறுக்கு விசாரணை செய்யும்போது உண்மை புரியும்.+ 18  குலுக்கல் போட்டால் சச்சரவுகள் தீரும்,+எதிரும் புதிருமாக இருப்பவர்களின் சண்டைகள் முடிவுக்கு வரும். 19  மதில் சூழ்ந்த நகரத்தைப் பிடிப்பதைவிட புண்பட்ட சகோதரனை* சமாதானப்படுத்துவது ரொம்பவே கஷ்டம்.+வாக்குவாதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல் பலமாக இருக்கும்.+ 20  ஒருவன் பேசும் வார்த்தைகள் அவனுடைய வயிற்றை நிரப்பும் உணவுபோல் இருக்கின்றன.+அவற்றின் விளைவுகளை அவன் அனுபவிப்பான். 21  சாவும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் இருக்கின்றன.+நாவை அதிகமாகப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அதன் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள்.+ 22  நல்ல மனைவியைத் தேடிக்கொள்கிறவன் நல்ல ஆசீர்வாதத்தைத் தேடிக்கொள்கிறான்.+யெகோவாவின் பிரியத்தையும்* பெறுகிறான்.+ 23  ஏழை உதவி கேட்டுக் கெஞ்சுகிறான்.ஆனால், பணக்காரன் எரிந்துவிழுகிறான். 24  கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “சுயநல.”
அதாவது, “நடைமுறை ஞானத்தையும்.”
வே.வா., “பேராசையோடு விழுங்குகிற உணவு.”
வே.வா., “நண்பனாக.”
வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”
வே.வா., “நண்பனை.”
வே.வா., “அனுக்கிரகத்தையும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா