புலம்பல் 1:1-22

א [ஆலெஃப்]* 1  ஐயோ! ஜனசந்தடி உள்ள நகரமாக இருந்தவள்+ இப்போது தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாளே! ஏராளமான குடிமக்களோடு இருந்தவள்+ இப்போது விதவை போல ஆகிவிட்டாளே! மாகாணங்களின் ராணியாக இருந்தவள் இப்போது அடிமைப் பெண்ணாக ஆகிவிட்டாளே!+ ב [பேத்]   ராத்திரியில் அவள் கதறிக் கதறி அழுகிறாள்.+ அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஆறுதல் சொல்ல அவளுடைய காதலர்கள் யாருமே இல்லை.+ அவளுடைய நண்பர்களே அவளுக்குத் துரோகம் செய்து,+ அவளுடைய எதிரிகளாக மாறிவிட்டார்கள். ג [கீமெல்]   யூதா சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டாள்;+ அங்கே கொடுமைகளை அனுபவிக்கிறாள்.+ அவள் மற்ற தேசத்து ஜனங்களோடுதான் வாழ வேண்டும்;+ அவளுக்கு நிம்மதியே கிடையாது. அவள் கஷ்டத்தில் தவித்துக்கொண்டிருந்த சமயம் பார்த்து எதிரிகள் அவளைப் பிடித்துவிட்டார்கள். ד [டாலத்]   சீயோனுக்குப் போகிற சாலைகள் புலம்புகின்றன; ஏனென்றால், பண்டிகைக்கு யாரும் வரவில்லை.+ அவளுடைய நுழைவாசல்கள் இடிக்கப்பட்டுக் கிடக்கின்றன;+ அவளுடைய குருமார்கள் பெருமூச்சுவிடுகிறார்கள். அவளுடைய கன்னிப்பெண்கள்* அழுது புலம்புகிறார்கள்; அவள் தீராத வேதனையில் துடிக்கிறாள். ה [ஹே]   அவளுடைய எதிரிகள் இப்போது அவளுடைய எஜமான்களாக இருக்கிறார்கள்; அவளுடைய விரோதிகளுக்கு இப்போது கவலையே இல்லை.+ அவள் பாவத்துக்குமேல் பாவம் செய்ததால் யெகோவா அவளைச் சோகத்தில் தள்ளிவிட்டார்.+ அவளுடைய பிள்ளைகளை எதிரிகள் பிடித்துக்கொண்டு போனார்கள்.+ ו [வா]   சீயோன் மகளுடைய மகிமையெல்லாம் மங்கிவிட்டது.+ அவளுடைய அதிகாரிகள், புல் இல்லாமல் தவிக்கிற மான்களைப் போல இருக்கிறார்கள்.அவர்களைத் துரத்துகிறவர்களுக்கு முன்பாகச் சக்தியே இல்லாமல் நடந்து போகிறார்கள். ז [ஸாயின்]   எருசலேம் வீடுவாசலை இழந்து கஷ்டப்படும்போது,ஒருகாலத்தில் தான் அனுபவித்த அருமையான காரியங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள்.+ அவளுடைய ஜனங்கள் எதிரிகளின் கையில் சிக்கியபோது யாரும் உதவிக்கு வரவில்லை.+அவள் அழிந்துபோனதைப் பார்த்து எதிரிகள் கைகொட்டிச் சிரித்தார்கள்.+ ח [ஹேத்]   எருசலேம் மகா பெரிய பாவம் செய்தாள்.+ அதனால்தான், எல்லாராலும் அருவருக்கப்படுகிறாள். அவளை உயர்வாக மதித்தவர்கள் இப்போது அவளைக் கேவலமாக நடத்துகிறார்கள். ஏனென்றால், அவளுடைய நிர்வாணத்தை அவர்கள் பார்த்தார்கள்.+ அவள் குமுறிக்கொண்டு,+ அவமானத்தில் திரும்பிக்கொள்கிறாள். ט [டேத்]   அவளுடைய பாவாடை தீட்டுப்பட்டிருக்கிறது. அவளுடைய எதிர்காலத்தைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை.+ அவளுக்குப் பயங்கரமான அழிவு வந்தது; அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. யெகோவாவே, நான் படுகிற வேதனையைப் பாருங்கள். என்னுடைய எதிரி ஜெயித்துவிட்டதாகப் பெருமையடிக்கிறான்.+ י [யோத்] 10  அவளுடைய எல்லா பொக்கிஷங்களின் மேலும் எதிரி கை வைத்துவிட்டான்.+ எந்த ஜனங்கள் உங்கள் சபைக்குள் வரக் கூடாது என்று கட்டளை கொடுத்தீர்களோஅந்த ஜனங்களே அவளுடைய ஆலயத்துக்குள் வருவதை அவள் பார்த்தாள்!+ כ [காஃப்] 11  அவளுடைய மக்கள் எல்லாரும் பெருமூச்சு விடுகிறார்கள். உயிர்வாழ வேண்டும் என்பதற்காக உணவைத் தேடி அலைகிறார்கள்.+ கொஞ்சம் உணவுக்காகக் கையில் இருக்கிற மதிப்புள்ள பொருள்களைக் கொடுத்துவிட்டார்கள். யெகோவாவே, நான் எதற்கும் லாயக்கில்லாத பெண்ணாகிவிட்டதைப் பாருங்கள். ל [லாமெத்] 12  சாலையில் போகிறவர்களே, இது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியவில்லையா? என்னைக் கொஞ்சம் பாருங்கள்! எனக்கு வந்த வேதனையைவிட பயங்கரமான வேதனை வேறு ஏதாவது இருக்கிறதா?யெகோவாதான் அவருடைய கடும் கோபத்தின் நாளில் என்னை இப்படித் தண்டித்துவிட்டார்.+ מ [மேம்] 13  மேலிருந்து அவர் என்னுடைய எலும்புகளுக்குள் நெருப்பை அனுப்பி,+ எல்லாவற்றையும் அடக்கி ஒடுக்கிவிட்டார். என் கால்களைச் சிக்க வைக்க வலையை விரித்தார்; என்னைத் திரும்பிப் போக வைத்துவிட்டார். கைவிடப்பட்டவளைப் போல என்னை ஆக்கிவிட்டார். நாளெல்லாம் நான் சுகமில்லாமல் கிடக்கிறேன். נ [நூன்] 14  அவர் தன்னுடைய கையால் என்னுடைய குற்றங்களையெல்லாம் கட்டி ஒரு நுகத்தடியைப் போல என் கழுத்தின் மேல் வைத்தார்; என் தெம்பெல்லாம் போய்விட்டது. என்னால் எதிர்க்க முடியாதவர்களின் கையில் யெகோவா என்னைக் கொடுத்துவிட்டார்.+ ס [சாமெக்] 15  என்னுடைய பலசாலிகள் எல்லாரையும் யெகோவா தூக்கி வீசிவிட்டார்.+ என்னுடைய வாலிபர்களை நொறுக்க ஒரு படையை வர வைத்தார்.+ கன்னிப்பெண்ணாகிய யூதாவைத் திராட்சரச ஆலையில் யெகோவா மிதித்துப்போட்டார்.+ ע [ஆயின்] 16  இதையெல்லாம் நினைத்து நான் கதறுகிறேன்;+ என்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது. எனக்கு ஆறுதல் சொல்லவோ புதுத்தெம்பு தரவோ யாரும் இல்லை, எல்லாரும் தூரமாகப் போய்விட்டார்கள். எதிரி ஜெயித்துவிட்டதால் என் மகன்களுடைய வாழ்க்கையே பாழாய்ப் போய்விட்டது. פ [பே] 17  சீயோன் தன்னுடைய கைகளை விரித்திருக்கிறாள்;+ அவளுக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. யாக்கோபைத் தாக்கச் சொல்லி அவனைச் சுற்றியுள்ள எல்லா எதிரிகளுக்கும் யெகோவா கட்டளை கொடுத்திருக்கிறார்.+ அந்த எதிரிகளுக்கு எருசலேமைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.+ צ [சாதே] 18  யெகோவா நீதியுள்ளவர்.+ நான்தான் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனேன்.+ ஜனங்களே, கேளுங்கள்; என்னுடைய வேதனையைப் பாருங்கள். என்னுடைய கன்னிப்பெண்களும்* வாலிபர்களும் சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள்.+ ק [கோஃப்] 19  நான் என்னுடைய காதலர்களைக் கூப்பிட்டேன்; ஆனால், அவர்கள் எனக்குத் துரோகம் செய்துவிட்டார்கள்.+ நகரத்திலே என்னுடைய குருமார்களும் பெரியோர்களும்* உயிர்வாழ்வதற்காக உணவு தேடி அலைந்தார்கள்.ஆனால் ஒன்றும் கிடைக்காமல் செத்துப்போனார்கள்.+ ר [ரேஷ்] 20  யெகோவாவே, நான் தவிக்கிற தவிப்பைப் பாருங்கள். என் குடல் துடிக்கிறது. துக்கம் என் நெஞ்சத்தைப் பிழிகிறது. நான் உங்களுக்குக் கொஞ்சமும் கீழ்ப்படியாமல் போய்விட்டேனே!+ வெளியே வாள் எல்லாரையும் வெட்டிச் சாய்க்கிறது;+ வீட்டுக்குள்ளும் சாவுதான் விழுகிறது. ש [ஷீன்] 21  ஜனங்கள் என்னுடைய பெருமூச்சைக் கேட்டார்கள்; எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. எனக்கு வந்த அழிவைப் பற்றி எல்லா எதிரிகளும் கேள்விப்பட்டார்கள். நீங்கள் என்னைத் தண்டித்ததைப் பார்த்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.+ ஆனால், நீங்கள் சொன்ன நாள் வரும்போது+ அவர்களும் என்னைப் போல ஆகிவிடுவார்கள்.+ ת [ட்டா] 22  என்னுடைய குற்றங்களுக்காக நீங்கள் என்னைக் கடுமையாகத் தண்டித்தது போலவே,அவர்கள் செய்த அக்கிரமங்களுக்காக அவர்களையும் கடுமையாகத் தண்டியுங்கள்.+ நான் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருக்கிறேன். என் நெஞ்சு வலிக்கிறது.

அடிக்குறிப்புகள்

முதல் நான்கு அதிகாரங்கள் ஒப்பாரி வைத்துப் பாடப்பட்ட பாட்டுகள். எபிரெய எழுத்துக்களின் வரிசைப்படியே இவை 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த பகுதியின் மேலே அந்தந்த எபிரெய எழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
வே.வா., “இளம் பெண்கள்.”
வே.வா., “இளம் பெண்களும்.”
வே.வா., “மூப்பர்களும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா