புலம்பல் 3:1-66

א [ஆலெஃப்] 3  கடவுளுடைய கடும் கோபத்தின் பிரம்பினால் அடி வாங்கி வேதனைப்படுகிறவன் நான்.   அவர் என்னை விரட்டிவிட்டார்; வெளிச்சத்தில் நடக்க வைக்காமல் இருட்டில் நடக்க வைக்கிறார்.+   நாள் முழுக்க என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார்.+ ב [பேத்]   என்னுடைய சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்.என் எலும்புகளை உடைத்துவிட்டார்.   என்னை வளைத்துப் பிடித்தார்; கசப்பான விஷத்தையும் கஷ்டத்தையும் எல்லா பக்கத்திலிருந்தும் கொடுத்தார்.+   ரொம்பக் காலத்துக்குமுன் இறந்தவர்களைப் போலவே என்னையும் இருட்டான இடத்தில் தள்ளிவிட்டார். ג [கீமெல்]   என்னால் தப்பிக்கவே முடியாதபடி சுற்றிலும் சுவர் எழுப்பினார்.கனமான செம்பு விலங்குகளை என் கால்களில் மாட்டினார்.+   உதவிக்காக நான் கெஞ்சிக் கதறுவதை அவர் கேட்கவே இல்லை.+   என்னுடைய பாதைகளைக் கற்களால் அடைத்தார்.என்னுடைய வழிகளைத் தாறுமாறாக்கினார்.+ ד [டாலத்] 10  பதுங்கியிருந்து தாக்கும் கரடியையும் சிங்கத்தையும் போல என்னைத் தாக்குவதற்குக் காத்திருந்தார்.+ 11  வழியிலிருந்து என்னை இழுத்துக்கொண்டு போய் நார்நாராகக் கிழித்தார்.*என்னைச் சின்னாபின்னமாக்கினார்.+ 12  வில்லை வளைத்து, என்னைக் குறிவைத்தார். ה [ஹே] 13  தன் அம்புக்கூட்டில் உள்ள அம்புகளால் என் சிறுநீரகங்களைக் குத்திக் கிழித்தார். 14  எல்லா ஜனங்களும் என்னைக் கேலி செய்கிறார்கள்; நாளெல்லாம் என்னைக் கிண்டல் செய்து பாட்டுப் பாடுகிறார்கள். 15  கசப்பானவற்றால் அவர் என்னை நிரப்பியிருக்கிறார்; எட்டியைக் கொடுத்து திணறடித்திருக்கிறார்.+ ו [வா] 16  கற்களால் என் பற்களை அவர் உடைக்கிறார்.என்னைச் சாம்பலில் புரள வைக்கிறார்.+ 17  என்னுடைய நிம்மதியைப் பறித்துவிட்டீர்கள்; சந்தோஷத்தையே* நான் மறந்துவிட்டேன். 18  அதனால் நான், “என்னுடைய மகிமை போய்விட்டது; யெகோவாமேல் நான் வைத்திருந்த நம்பிக்கையும் போய்விட்டது” என்று சொல்கிறேன். ז [ஸாயின்] 19  என் கஷ்டங்களை நினைத்துப் பாருங்கள். நான் வீடுவாசல் இல்லாமல் தவிக்கிறேன்,+ எட்டியையும் கசப்பான விஷத்தையும் விழுங்குகிறேன்.+ 20  நீங்கள் கண்டிப்பாக என்னை நினைத்துப் பார்ப்பீர்கள், இறங்கி வந்து* எனக்கு உதவுவீர்கள்.+ 21  இதை ஞாபகத்தில் வைத்து, உங்களுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.+ ח [ஹேத்] 22  யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+ 23  ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் புதுப்புது விதங்களில் இரக்கம் காட்டுகிறார்.+ கடவுளே, நீங்கள் எப்போதுமே நம்பகமானவர்.+ 24  “யெகோவாதான் என்னுடைய பங்கு.+ அதனால், நான் அவருக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்”+ என்று சொன்னேன். ט [டேத்] 25  யெகோவா தன்னை நம்புகிறவர்களுக்கும்+ தன்னைத் தேடுகிறவர்களுக்கும்+ நல்லவராக இருக்கிறார். 26  யெகோவா தருகிற மீட்புக்காக அமைதியாய்* காத்திருப்பது நல்லது.+ 27  சிறு வயதிலேயே பாரமான சுமைகளைச் சுமப்பது* ஒருவனுக்கு நல்லது.+ י [யோத்] 28  கடவுள் அவன்மேல் அந்தச் சுமைகளைச் சுமத்தும்போது அவன் தனியாக உட்கார்ந்து, அமைதியாக இருக்கட்டும்.+ 29  அவன் குப்புற விழுந்து, தன்னுடைய வாயை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளட்டும்;+ அவனுக்கு விடிவுகாலம் வரலாம்.+ 30  அடிக்கிறவனுக்கு அவன் தன்னுடைய கன்னத்தைக் காட்டட்டும்; எவ்வளவு அவமானம் வந்தாலும் தாங்கிக்கொள்ளட்டும். כ [காஃப்] 31  யெகோவா நம்மை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ள மாட்டார்.+ 32  அவர் நமக்கு வேதனை தந்திருந்தாலும் அளவுகடந்த அன்போடு* இரக்கம் காட்டுவார்.+ 33  ஏனென்றால், மனுஷர்களை வேதனையால் வாட்ட வேண்டும் என்று அவர் நினைப்பதே இல்லை.+ ל [லாமெத்] 34  உலகத்திலுள்ள கைதிகளைக் காலடியில் போட்டு மிதிப்பவர்களையும்,+ 35  உன்னதமான கடவுளுக்குமுன் நியாயம் வழங்காமல் இருப்பவர்களையும்,+ 36  வழக்கில் யாரையாவது ஏமாற்றுகிறவர்களையும்யெகோவா பொறுத்துக்கொள்ளவே மாட்டார். מ [மேம்] 37  யெகோவா கட்டளை கொடுக்காமல் ஒருவரால் எதையாவது சொல்லி அதை நிறைவேற்ற முடியுமா? 38  உன்னதமான கடவுளுடைய வாயிலிருந்துநல்லதும் கெட்டதும் சேர்ந்து வராது. 39  செய்த பாவத்துக்குத் தண்டனை* அனுபவிக்கிறவன் அதைப் பற்றி ஏன் புலம்ப வேண்டும்?+ נ [நூன்] 40  நாம் நம்முடைய வழிகளை நன்றாகச் சோதித்துப் பார்த்து+ யெகோவாவிடம் திரும்பிவிடலாம்.+ 41  முழு இதயத்தோடு நம்முடைய கைகளை உயர்த்தி, பரலோகத்தில் உள்ள கடவுளிடம்,+ 42  “நாங்கள் குற்றம் செய்துவிட்டோம்; கீழ்ப்படியாமல் போய்விட்டோம்;+ நீங்கள் எங்களை மன்னிக்கவில்லை.+ ס [சாமெக்] 43  எங்கள் மேலுள்ள கோபத்தினால் உங்களிடம் வரவிடாமல் தடுத்துவிட்டீர்கள்.+எங்களைத் துரத்திப் பிடித்து, கரிசனை இல்லாமல் கொன்றுவிட்டீர்கள்.+ 44  எங்கள் ஜெபங்கள் உங்களிடம் வந்து சேராதபடி மேகத்தால் அவற்றைத் தடுத்துவிட்டீர்கள்.+ 45  ஜனங்கள் மத்தியில் எங்களைக் குப்பைக்கூளம் போல அசிங்கமாக்கிவிட்டீர்கள்” என்று வேண்டிக்கொள்ளலாம். פ [பே]* 46  எங்களுடைய எதிரிகள் எல்லாரும் எங்களைக் கிண்டல் செய்கிறார்கள்.+ 47  எங்கள்முன் இருப்பதெல்லாம் திகிலும் படுகுழியும்தான்;+ நாங்கள் சீரழிந்தும் சிதைந்தும் போய்விட்டோம்.+ 48  என் ஜனங்களுடைய அழிவைப் பார்த்து என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தோடுகிறது.+ ע [ஆயின்] 49  ஓய்வே இல்லாமல் எந்நேரமும் கண்ணீர் விடுகிறேன்.+ 50  யெகோவா பரலோகத்திலிருந்து எங்களைப் பார்க்கும்வரை+ அழுதுகொண்டே இருப்பேன். 51  என் நகரத்தின் மகள்களுடைய நிலைமையைப் பார்த்து இரத்தக் கண்ணீர் வடிக்கிறேன்.+ צ [சாதே] 52  ஒரு பறவையை வேட்டையாடுவது போல எதிரிகள் காரணமே இல்லாமல் என்னை வேட்டையாடினார்கள். 53  என்னைக் குழியில் தள்ளி, என் மூச்சை அடக்கிவிட்டார்கள். என்மேல் கற்களை வீசிக்கொண்டே இருந்தார்கள். 54  தண்ணீர் என் தலைக்கு மேல் புரண்டது; “அவ்வளவுதான், நான் தொலைந்தேன்!” என்று சொன்னேன். ק [கோஃப்] 55  யெகோவாவே, ஆழமான குழியிலிருந்து நான் உங்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.+ 56  காப்பாற்றும்படி நான் கெஞ்சிக் கதறுவதைக் கேளுங்கள்; உங்கள் காதை அடைத்துக்கொள்ளாதீர்கள். 57  நான் உங்களைக் கூப்பிட்ட நாளில் என் பக்கத்தில் வந்தீர்கள். “பயப்படாதே” என்று சொன்னீர்கள். ר [ரேஷ்] 58  யெகோவாவே, நீங்கள் எனக்காக வழக்காடினீர்கள். என் உயிரை மீட்டீர்கள்.+ 59  யெகோவாவே, எனக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். தயவுசெய்து எனக்கு நியாயம் செய்யுங்கள்.+ 60  என்னுடைய எதிரிகள் எப்படியெல்லாம் சதித்திட்டம் தீட்டி என்னைப் பழிவாங்குகிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ש [ஸீன்] அல்லது [ஷீன்] 61  யெகோவாவே, அவர்கள் எனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுவதையும் என்னைப் பழித்துப் பேசுவதையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.+ 62  நாள் முழுக்க அவர்கள் எனக்கு எதிராக முணுமுணுப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். 63  அவர்களைப் பாருங்கள்; உட்கார்ந்தாலும் நின்றாலும் என்னைக் கேலி செய்து பாட்டுப் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். ת [ட்டா] 64  யெகோவாவே, அவர்களுக்கு நீங்கள் சரியான கூலி கொடுப்பீர்கள்! 65  சுரணைகெட்ட இதயத்தை ஒரு சாபமாக அவர்களுக்குக் கொடுப்பீர்கள். 66  யெகோவாவே, நீங்கள் அவர்களைக் கோபத்தோடு துரத்திக்கொண்டு போய், பூமியிலிருந்தே ஒழித்துக்கட்டுவீர்கள்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “பேச்சுமூச்சில்லாமல் கிடக்க வைத்தார்.”
வே.வா., “நல்லதையே.”
நே.மொ., “கீழே குனிந்து.”
வே.வா., “பொறுமையாய்.”
வே.வா., “கஷ்டங்களை அனுபவிப்பது.”
வே.வா., “மாறாத அன்போடு.”
வே.வா., “பாவத்தின் விளைவுகளை.”
எபிரெய அகரவரிசையில் “பே” என்று எழுத்து “ஆயின்” என்ற எழுத்துக்கு அடுத்ததாக வரும் என்றாலும், இங்கே அதற்கு முன்னதாக வருகிறது.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா