மத்தேயு—ஒரு சுருக்கம்
A. இயேசு கிறிஸ்துவின் வம்சாவளி (1:1-17)
B. இயேசுவின் பிறப்புமுதல் ஞானஸ்நானம்வரை (1:18–3:17)
கடவுளுடைய சக்தியால் மரியாள் கர்ப்பமாவதும், யோசேப்பு நடந்துகொண்ட விதமும் (1:18-25)
ஜோதிடர்களின் வருகையும், ஏரோதுவின் கொலைத் திட்டமும் (2:1-12)
யோசேப்பும் மரியாளும் இயேசுவைக் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பியோடுகிறார்கள் (2:13-15)
பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருக்கிற ஆண் குழந்தைகளை ஏரோது கொலை செய்கிறான் (2:16-18)
இயேசுவின் குடும்பத்தார் நாசரேத்தில் குடியேறுகிறார்கள் (2:19-23)
யோவான் ஸ்நானகரின் ஊழியம் (3:1-12)
இயேசுவின் ஞானஸ்நானம் (3:13-17)
C. இயேசுவைப் பிசாசு சோதிக்கிறான்; இயேசு கலிலேயாவில் பிரசங்கிக்க ஆரம்பிக்கிறார் (4:1-25)
D. மலைப் பிரசங்கம் (5:1–7:29)
இயேசு மலைப் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார் (5:1, 2)
ஒன்பது சந்தோஷங்கள் (5:3-12)
‘பூமிக்கு உப்பு,’ ‘உலகத்துக்கு ஒளி’ (5:13-16)
திருச்சட்டத்தை இயேசு நிறைவேற்றுவார் (5:17-20)
கோபப்படுவது, மற்றவர்களோடு உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது சம்பந்தமான அறிவுரைகள் (5:21-26)
முறைகேடான உறவுகொள்வது, விவாகரத்து செய்வது சம்பந்தமான அறிவுரைகள் (5:27-32)
சத்தியம் செய்வது, பழிக்குப் பழி வாங்குவது, எதிரிகளிடம் அன்பு காட்டுவது சம்பந்தமான அறிவுரைகள் (5:33-48)
நீதியான செயல்களை மற்றவர்கள்முன் காட்டிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் (6:1-4)
ஜெபம் செய்ய வேண்டிய விதமும், மாதிரி ஜெபமும் (6:5-15)
வெளிவேஷக்காரர்களைப் போல் விரதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் (6:16-18)
பூமியிலும் பரலோகத்திலும் பொக்கிஷங்கள் (6:19-24)
கவலைப்படுவதை நிறுத்துங்கள்; கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள் (6:25-34)
நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள் (7:1-6)
கேட்டுக்கொண்டே, தேடிக்கொண்டே, தட்டிக்கொண்டே இருங்கள் (7:7-11)
பொன் விதி (7:12)
இடுக்கமான வாசல் (7:13, 14)
போலித் தீர்க்கதரிசிகள்; ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனி காட்டும் (7:15-23)
பாறைமேல் கட்டப்பட்ட வீடும், மணல்மேல் கட்டப்பட்ட வீடும் (7:24-27)
இயேசு கற்றுக்கொடுக்கும் விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோகிறார்கள் (7:28, 29)
E. இயேசு கலிலேயாவில் நிறைய அற்புதங்களைச் செய்கிறார் (8:1–9:34)
தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (8:1-4)
படை அதிகாரியின் விசுவாசம் (8:5-13)
கப்பர்நகூமில் நிறைய பேரை இயேசு குணமாக்குகிறார் (8:14-17)
இயேசுவைப் பின்பற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் (8:18-22)
கலிலேயா கடலில் இயேசு புயல்காற்றை அடக்குகிறார் (8:23-27)
பேய்கள் பன்றிகளுக்குள் அனுப்பப்படுகின்றன (8:28-34)
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனை இயேசு குணமாக்குகிறார் (9:1-8)
மத்தேயுவை இயேசு அழைக்கிறார் (9:9-13)
விரதத்தைப் பற்றிய கேள்வி (9:14-17)
யவீருவின் மகள் உயிரோடு எழுப்பப்படுகிறாள்; இயேசுவின் மேலங்கியை ஒரு பெண் தொடுகிறாள் (9:18-26)
கண் தெரியாதவர்களையும் பேச முடியாதவர்களையும் குணமாக்குகிறார் (9:27-34)
F. மற்றவர்களுக்குப் போதிக்கும் பிரமாண்டமான வேலையைப் பற்றி இயேசு விவரிக்கிறார், போதகர்களுக்கு அறிவுரை தருகிறார் (9:35–11:1)
அறுவடை அதிகம், வேலையாட்களோ குறைவு (9:35-38)
12 அப்போஸ்தலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் (10:1-4)
ஊழியம் சம்பந்தமான அறிவுரைகள் (10:5-15)
சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் (10:16-25)
கடவுளுக்குப் பயப்படுங்கள், மனிதர்களுக்கு அல்ல (10:26-31)
சமாதானத்தை அல்ல, பிரிவினையை உண்டாக்கவே இயேசு வந்தார் (10:32-39)
இயேசுவின் சீஷர்களை ஏற்றுக்கொள்வது பலன் தரும் (10:40-42)
கற்பிக்கவும் பிரசங்கிக்கவும் இயேசு புறப்படுகிறார் (11:1)
G. இயேசு கலிலேயா முழுவதும் பயணம் செய்து, மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார் (11:2–12:50)
‘வர வேண்டியவரை’ பற்றி யோவான் கேட்கிறார் (11:2-6)
யோவான் ஸ்நானகரை இயேசு புகழ்கிறார் (11:7-15)
மனம் திருந்தாத தலைமுறை (11:16-19)
கோராசின், பெத்சாயிதா, கப்பர்நகூம் நகரங்கள் கண்டனம் செய்யப்படுகின்றன (11:20-24)
தாழ்மையானவர்களுக்குத் தயவு காட்டியதற்காக இயேசு தன் தகப்பனைப் புகழ்கிறார் (11:25-27)
இயேசுவின் சீஷர்களாக அவருடைய நுகத்தடியைச் சுமப்பது புத்துணர்ச்சி தருகிறது (11:28-30)
இயேசு, ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ (12:1-8)
சூம்பிய கையுடையவன் ஓய்வுநாளில் குணமாக்கப்படுகிறான் (12:9-14)
இயேசு, கடவுளுடைய அன்பு ஊழியர்(12:15-21)
பெயல்செபூபினால் அல்ல, கடவுளுடைய சக்தியினால் பேய்கள் விரட்டப்படுகின்றன (12:22-30)
மன்னிக்கப்படாத பாவம் (12:31, 32)
ஒரு மரம் எப்படிப்பட்டது என்பதை அதன் கனி காட்டும் (12:33-37)
யோனாவின் அடையாளம் (12:38-42)
பேய் திரும்பிவருகிறது (12:43-45)
இயேசுவின் அம்மாவும் சகோதரர்களும் (12:46-50)
H. உவமைகள் மூலமாகக் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி இயேசு கற்றுக்கொடுக்கிறார் (13:1-58)
படகில் உட்கார்ந்தபடி, கூட்டம் கூட்டமான மக்களுக்கு இயேசு கற்பிக்கிறார் (13:1, 2)
நான்கு விதமான நிலங்களில் விதை விதைக்கப்படுகிறது (13:3-9)
இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கான காரணம் (13:10-17)
விதைப்பவரைப் பற்றிய உவமையின் விளக்கம் (13:18-23)
கோதுமைப் பயிர்களும் களைகளும் (13:24-30)
கடுகு விதையும் புளித்த மாவும் (13:31-33)
இயேசு உவமைகளைப் பயன்படுத்தியது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (13:34, 35)
கோதுமைப் பயிர்கள், களைகள் பற்றிய உவமையின் விளக்கம் (13:36-43)
புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷமும் அருமையான முத்தும் (13:44-46)
இழுவலை (13:47-50)
மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறவர் புதிய, பழைய பொக்கிஷங்களை வெளியே எடுக்கிறார் (13:51, 52)
சொந்த ஊர்க்காரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை (13:53-58)
I. கலிலேயாவிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயேசு கடைசியாக ஊழியம் செய்கிறார் (14:1–18:35)
யோவான் ஸ்நானகரின் மரணம் (14:1-12)
பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, சுமார் 5,000 ஆண்களுக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (14:13-21)
இயேசு தண்ணீர்மேல் நடக்கிறார் (14:22-33)
கெனேசரேத்தில் மக்களைக் குணமாக்குகிறார் (14:34-36)
கை கழுவும் சடங்கைப் பற்றிய விவாதம் (15:1-9)
இதயத்திலிருந்து வருவது தீட்டுப்படுத்துகிறது (15:10-20)
பெனிக்கேயப் பெண்ணின் உறுதியான விசுவாசம் (15:21-28)
இயேசு பலவித நோய்களைக் குணமாக்குகிறார் (15:29-31)
பெண்களையும் பிள்ளைகளையும் தவிர, 4,000 ஆண்களுக்கு இயேசு உணவு கொடுக்கிறார் (15:32-39)
பரிசேயர்களும் சதுசேயர்களும் வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படி கேட்கிறார்கள் (16:1-4)
பரிசேயர்கள் சதுசேயர்களின் புளித்த மாவைப் பற்றி இயேசு எச்சரிக்கிறார் (16:5-12)
இயேசுதான் கிறிஸ்து என்று பேதுரு சொல்கிறார் (16:13-17)
பரலோக அரசாங்கத்தின் சாவிகளை பேதுருவுக்கு இயேசு கொடுக்கிறார் (16:18-20)
தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார் (16:21-23)
உண்மையான சீஷர்கள் செய்ய வேண்டியது (16:24-28)
இயேசுவின் தோற்றம் மாறுகிறது (17:1-13)
பேய் பிடித்த பையனை இயேசு குணமாக்குகிறார் (17:14-18)
கடுகளவு விசுவாசம் (17:19, 20)
தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி இயேசு மறுபடியும் முன்னறிவிக்கிறார் (17:22, 23)
மீன் வாயிலிருந்து எடுக்கப்பட்ட காசு வரியாகக் கொடுக்கப்படுகிறது (17:24-27)
பரலோக அரசாங்கத்தில் மிக உயர்ந்தவர் யார்? (18:1-6)
பாவம் செய்யத் தூண்டுகிறவர்கள் (18:7-10)
வழிதவறிப் போன ஆட்டைப் பற்றிய உவமை (18:12-14)
பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, ஒரு சகோதரரை நல்ல வழிக்குக் கொண்டுவருவது எப்படி (18:15-20)
மன்னிக்காத அடிமையைப் பற்றிய உவமை (18:21-35)
J. பெரேயாவிலும் எரிகோவின் சுற்றுப்புறத்திலும் இயேசு ஊழியம் செய்கிறார் (19:1–20:34)
திருமணமும் விவாகரத்தும் (19:1-9)
திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் (19:10-12)
சின்னப் பிள்ளைகளை இயேசு ஆசீர்வதிக்கிறார் (19:13-15)
பணக்காரனாக இருந்த இளம் மனிதனின் கேள்வி (19:16-26)
பரலோக அரசாங்கத்துக்காகச் செய்யும் தியாகங்களுக்குப் பலன் கிடைக்கும் (19:27-30)
திராட்சைத் தோட்டத்துக் கூலியாட்கள் எல்லாருக்குமே ஒரு தினாரியு கூலி (20:1-16)
தன் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி இயேசு மறுபடியும் முன்னறிவிக்கிறார் (20:17-19)
பரலோக அரசாங்கத்தில் முக்கிய இடம் வேண்டுமென்று கேட்கிறார்கள் (20:20-28)
எரிகோவுக்குப் பக்கத்தில், பார்வையில்லாத இருவரை இயேசு குணமாக்குகிறார் (20:29-34)
K. எருசலேமில் இயேசு கடைசியாக ஊழியம் செய்கிறார் (21:1–23:39)
எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றி பவனி (21:1-11)
ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (21:12-17)
அத்தி மரத்தைச் சபிக்கிறார் (21:18-22)
இயேசுவின் அதிகாரத்தைப் பற்றிக் கேள்வி (21:23-27)
அப்பாவையும் இரண்டு பிள்ளைகளையும் பற்றிய உவமை (21:28-32)
கொலைவெறி பிடித்த திராட்சைத் தோட்டக்காரர்களைப் பற்றிய உவமை (21:33-46)
திருமண விருந்தைப் பற்றிய உவமை (22:1-14)
கடவுளும் அரசனும் (22:15-22)
உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி (22:23-33)
மிக முக்கியமான இரண்டு கட்டளைகள் (22:34-40)
கிறிஸ்து தாவீதின் மகனா? (22:41-46)
வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் போல் இருக்காதீர்கள் (23:1-12)
வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் கேடுதான் வரும் (23:13-36)
எருசலேமைப் பார்த்து இயேசு புலம்புகிறார் (23:37-39)
L. தன்னுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றி இயேசு சொன்ன மாபெரும் தீர்க்கதரிசனம் (24:1–25:46)
இயேசுவுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றிய கேள்வி (24:1-3)
கூட்டு அடையாளத்தின் அம்சங்களும் மிகுந்த உபத்திரவமும் (24:4-22)
போலிக் கிறிஸ்துக்களை நம்புவதால் வரும் ஆபத்துகள் (24:23-28)
மனிதகுமாரனின் வருகை (24:29-31)
அத்தி மரத்தைப் பற்றிய உவமை (24:32, 33)
இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது (24:34, 35)
அந்த நாளும் நேரமும் மனிதர்களுக்கோ தேவதூதர்களுக்கோ தெரியாது; நோவாவின் நாட்களைப் போலவே இயேசுவின் பிரசன்னம் இருக்கும் (24:36-39)
விழிப்பாக இருங்கள் (24:40-44)
உண்மையும் விவேகமும் உள்ள அடிமையும், பொல்லாத அடிமையின் குணாதிசயமும் (24:45-51)
10 கன்னிப்பெண்கள் பற்றிய உவமை (25:1-13)
தாலந்துகள் பற்றிய உவமை (25:14-30)
செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமை (25:31-46)
M. இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார், துன்புறுத்தப்படுகிறார், கொலை செய்யப்படுகிறார், அடக்கம் செய்யப்படுகிறார் (26:1–27:66)
இயேசுவைக் கொல்ல குருமார்களின் திட்டம் (26:1-5)
இயேசுவின் தலைமேல் வாசனை எண்ணெயை ஒரு பெண் ஊற்றுகிறாள் (26:6-13)
இயேசுவின் கடைசி பஸ்காவும், யூதாஸ் காட்டிக்கொடுப்பதும் (26:14-25)
எஜமானின் இரவு விருந்து ஆரம்பித்து வைக்கப்படுகிறது (26:26-30)
தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (26:31-35)
கெத்செமனேயில் இயேசு ஜெபம் செய்கிறார் (26:36-46)
இயேசு கைது செய்யப்பட்டு, நியாயசங்கத்துக்கு முன் கொண்டுவரப்படுகிறார் (26:47-68)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு மூன்று தடவை சொல்கிறார்; கதறி அழுகிறார் (26:69-75)
பிலாத்துவிடம் இயேசு ஒப்படைக்கப்படுகிறார் (27:1, 2)
யூதாஸ் மனம் வருந்தி, தூக்குப்போட்டுக்கொள்கிறான் (27:3-10)
பிலாத்து முன்னால் இயேசு நிற்கிறார் (27:11-26)
எல்லாருக்கும் முன்பாக இயேசுவைப் படைவீரர்கள் கேலி செய்கிறார்கள் (27:27-31)
இயேசு கொல்கொதாவில் மரக் கம்பத்தில் அறையப்படுகிறார் (27:32-44)
இயேசுவின் மரணம் (27:45-56)
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (27:57-61)
இயேசுவின் கல்லறைக்குக் காவல் (27:62-66)
N. இயேசு உயிரோடு எழுப்பப்படுகிறார்; சீஷராக்கும் பொறுப்பைக் கொடுக்கிறார் (28:1-20)