மாற்கு எழுதியது 13:1-37
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
மேற்கு மதிலின் தென்பகுதியில் காணப்படும் இந்தக் கற்கள், முதல் நூற்றாண்டு ஆலயப் பகுதியில் அமைந்திருந்த கட்டிடங்களைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகிறது. எருசலேமும் அதன் ஆலயமும் ரோமர்களால் அழிக்கப்பட்ட கோர சம்பவத்தை நினைப்பூட்டுவதற்காக அவை இங்கே விடப்பட்டிருக்கின்றன.
ஒலிவ மலை (1) என்பது, எருசலேமின் கிழக்கே அமைந்திருக்கும் தொடர்ச்சியான சுண்ணாம்புக்கல் குன்றுகளைக் குறிக்கிறது. ஒலிவ மலைக்கும் எருசலேமுக்கும் இடையில் கீதரோன் பள்ளத்தாக்கு இருக்கிறது. ஆலயப் பகுதிக்கு (2) எதிரே இருந்த அதன் சிகரத்தின் அதிகபட்ச உயரம் சுமார் 812 மீ. (2,644 அடி). அதுதான் பைபிளில் பொதுவாக ஒலிவ மலை என்று அழைக்கப்படுகிறது. ஒலிவ மலையின் ஒரு பகுதியில்தான் இயேசு தன்னுடைய பிரசன்னத்தின் அடையாளத்தைப் பற்றித் தன் சீஷர்களுக்கு விளக்கினார்.