மீகா 3:1-12

3  பின்பு நான், “யாக்கோபின் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்,இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+ உங்களுக்கு நீதிநியாயம் தெரிய வேண்டாமா?   நீங்கள் நல்லதை வெறுக்கிறீர்கள்,+ கெட்டதை விரும்புகிறீர்கள்.+என் ஜனங்களுடைய தோலை உரிக்கிறீர்கள், அவர்களுடைய எலும்புகளிலிருந்து சதையைப் பிய்த்தெடுக்கிறீர்கள்.+   பிய்த்தெடுத்த சதையைச் சாப்பிடவும் செய்கிறீர்கள்.+என் ஜனங்களின் தோலைக் கிழித்தெடுக்கிறீர்கள்.அவர்களுடைய எலும்புகளை உடைத்து நொறுக்குகிறீர்கள்.+பானையில் வேகிற இறைச்சித் துண்டுகளைப் போல் ஆக்குகிறீர்கள்.   அந்த நாளில், நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள்.ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார். உங்களிடமிருந்து தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார்.+ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.+   தீர்க்கதரிசிகள் யெகோவாவின் ஜனங்களைக் கெட்ட வழிக்குக் கொண்டுபோகிறார்கள்.+யாராவது சாப்பாடு கொடுக்கும்போது,*+ ‘நன்றாக இருப்பீர்கள்!’ என்று வாழ்த்துகிறார்கள்.+ஆனால் யாராவது சாப்பாடு கொடுக்காதபோது, ‘நாசமாய்ப் போவீர்கள்!’ என்று சபிக்கிறார்கள்.   அவர்களிடம் கடவுள், ‘உங்களுக்கு இரவு நேரம் வரும்,+ நீங்கள் எந்தத் தரிசனமும் பார்க்க மாட்டீர்கள்.+கும்மிருட்டில்தான் கிடப்பீர்கள், குறிசொல்ல மாட்டீர்கள்.தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையில் சூரியன் மறைந்துவிடும்.பகல் இரவாகிவிடும்.+   தரிசனம் பார்க்கிறவர்கள் அவமானம் அடைவார்கள்.+குறிசொல்கிறவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். கடவுளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால்அவர்கள் எல்லாரும் அவமானத்தில் தங்கள் வாயை* மூடிக்கொள்வார்கள்’ என்று சொல்கிறார்” என்றேன்.   யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் புரிய வைக்க,யெகோவாவின் சக்தி என்னைப் பலத்தினாலும்*நீதியினாலும் தைரியத்தினாலும் நிரப்பியிருக்கிறது.   யாக்கோபின் வம்சத் தலைவர்களே, தயவுசெய்து கேளுங்கள்.இஸ்ரவேலின் அதிகாரிகளே, கவனியுங்கள்.+நீங்கள் நீதிநியாயத்தை வெறுக்கிறீர்கள், நேரானதைக் கோணலாக்குகிறீர்கள்.+ 10  சீயோனை இரத்தத்தாலும், எருசலேமை அக்கிரமத்தாலும் நிரப்புகிறீர்கள்.+ 11  எருசலேமின் தலைவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு சொல்கிறார்கள்.+அவளுடைய குருமார்கள் பணத்துக்காகப் போதிக்கிறார்கள்.+அவளுடைய தீர்க்கதரிசிகள் காசுக்காக* குறிசொல்கிறார்கள்.+ ஆனாலும், யெகோவாமேல் நம்பிக்கை இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார்கள். “யெகோவா எங்களோடு இருக்கிறார்,+ எங்களுக்கு எந்த ஆபத்தும் வராது”+ என்று சொல்லிக்கொள்கிறார்கள். 12  அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.எருசலேம் மண்மேடாகும்.+ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+உங்களால்தான் இந்த நிலைமை வரும்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தங்கள் பற்களால் கடிக்கும்போது.”
நே.மொ., “மீசையை.”
வே.வா., “வல்லமையினாலும்.”
வே.வா., “வெள்ளிக்காக.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா