யோசுவா 12:1-24

12  யோர்தானின் கிழக்குப் பகுதியில் இருந்த தேசத்தை, அதாவது அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து*+ எர்மோன் மலை+ வரையிலும் கிழக்கே அரபா முழுவதிலும்+ இருந்த தேசத்தை, இஸ்ரவேலர்கள் கைப்பற்றி, அங்கிருந்த ராஜாக்களைத் தோற்கடித்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவன்தான், எஸ்போனில் வாழ்ந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன்.+ அவன் அர்னோன் பள்ளத்தாக்கின்+ ஓரத்தில் இருக்கிற ஆரோவேர் நகரத்தையும்+ கீலேயாத்தின் பாதிப் பிரதேசத்தையும் ஆட்சி செய்தான். அர்னோன் பள்ளத்தாக்கின் மத்தியப் பகுதியிலிருந்து யாபோக் பள்ளத்தாக்கு வரையுள்ள முழு பகுதியையும் ஆட்சி செய்தான். இந்த யாபோக் பள்ளத்தாக்கு அம்மோனியர்களின் எல்லையாகவும் இருந்தது.  அரபா பகுதியையும் சீகோன் ஆட்சி செய்தான். அதாவது, கிழக்கே கின்னரேத் கடல்*+ வரைக்கும் அரபா கடலாகிய உப்புக் கடல்* வரைக்கும் உள்ள பகுதியையும் ஆட்சி செய்தான். உப்புக் கடலுக்குப் பக்கத்தில் பெத்-யெசிமோத்தின் திசையில் இருக்கிற அரபா வரைக்கும் தெற்கே பிஸ்கா+ மலைச் சரிவுகளின் அடிவாரம் வரைக்கும் அவனுடைய எல்லை விரிந்திருந்தது.  பாசானின் ராஜாவாகிய ஓகின்+ பகுதியையும் இஸ்ரவேலர்கள் கைப்பற்றினார்கள். ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.+ அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்துவந்தான்.  எர்மோன் மலையையும், சல்காவையும், கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லை வரையுள்ள பாசான்+ முழுவதையும், எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லை+ வரையுள்ள கீலேயாத்தின் பாதிப் பகுதியையும் ஆட்சி செய்தான்.  யெகோவாவின் ஊழியராகிய மோசேயும் இஸ்ரவேலர்களும் அவர்களைத் தோற்கடித்திருந்தார்கள்.+ அதன்பின் யெகோவாவின் ஊழியராகிய மோசே, அவர்களுடைய தேசத்தை ரூபன் கோத்திரத்துக்கும் காத் கோத்திரத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சொத்தாகக் கொடுத்திருந்தார்.+  யோர்தானின் மேற்கே, லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள+ பாகால்-காத்+ தொடங்கி சேயீருக்கு+ ஏறிப்போகும் ஆலாக் மலை+ வரையுள்ள தேசத்தை யோசுவாவும் இஸ்ரவேலர்களும் கைப்பற்றினார்கள்.  அதாவது ஏத்தியர்கள், எமோரியர்கள்,+ கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களின் மலைப்பகுதியையும் சேப்பெல்லாவையும் அரபாவையும் மலைச் சரிவுகளையும் வனாந்தரத்தையும் நெகேபையும்+ கைப்பற்றினார்கள். பின்பு, இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தேசத்தை யோசுவா பிரித்துக் கொடுத்தார்.+ அவர்கள் கைப்பற்றிய தேசங்களின் ராஜாக்கள் இவர்கள்தான்:   எரிகோவின் ராஜா;+ பெத்தேலுக்குப் பக்கத்திலுள்ள ஆயி நகரத்தின் ராஜா;+ 10  எருசலேமின் ராஜா; எப்ரோனின் ராஜா;+ 11  யர்மூத்தின் ராஜா; லாகீசின் ராஜா; 12  எக்லோனின் ராஜா; கேசேரின் ராஜா;+ 13  தெபீரின் ராஜா;+ கெதேரின் ராஜா; 14  ஓர்மாவின் ராஜா; ஆராத்தின் ராஜா; 15  லிப்னாவின் ராஜா;+ அதுல்லாமின் ராஜா; 16  மக்கெதாவின் ராஜா;+ பெத்தேலின்+ ராஜா; 17  தப்புவாவின் ராஜா; ஹேப்பேரின் ராஜா; 18  ஆப்பெக்கின் ராஜா; லசரோனின் ராஜா; 19  மாதோனின் ராஜா; ஆத்சோரின் ராஜா;+ 20  சிம்ரோன்-மேரோனின் ராஜா; அக்சாப்பின் ராஜா; 21  தானாக்கின் ராஜா; மெகிதோவின் ராஜா; 22  கேதேசின் ராஜா; கர்மேலிலுள்ள யொக்னியாமின்+ ராஜா; 23  தோர் மலைச் சரிவுகளில் இருந்த தோரின் ராஜா;+ கில்காலில் இருந்த கோயிமின் ராஜா; 24  திர்சாவின் ராஜா; ஆக மொத்தம், 31 ராஜாக்கள்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து.”
அதாவது, “கெனேசரேத்து ஏரி; கலிலேயா கடல்.”
அதாவது, “சவக் கடல்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா