யோசுவா 16:1-10

16  யோசேப்பின்+ வம்சத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் கிடைத்த தேசத்தின் எல்லை, எரிகோவுக்குப் பக்கத்திலுள்ள யோர்தானிலிருந்து ஆரம்பித்து, எரிகோவின் கிழக்கிலுள்ள நீரோடைவரை போனது. பின்பு, எரிகோவிலிருந்து மேலே ஏறி வனாந்தரத்தின் வழியாகப் போய் பெத்தேலின் மலைப்பகுதிவரை போனது.+  பிறகு லஸ்ஸுக்குப் பக்கத்திலுள்ள பெத்தேலிலிருந்து அற்கியரின் எல்லையாகிய அதரோத்வரை போய்,  கீழ் பெத்-ஓரோன்+ எல்லை வரையுள்ள யப்லெத்தியரின் எல்லைவரை மேற்காக இறங்கி, கேசேர்வரை+ போய், கடலில் முடிவடைந்தது.  யோசேப்பின் வம்சத்தார்,+ அதாவது மனாசே மற்றும் எப்பிராயீம் கோத்திரத்தார், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+  எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த எல்லை இதுதான்: கிழக்கே அவர்களுடைய எல்லை அதரோத்-அதார்+ தொடங்கி மேல் பெத்-ஓரோன்வரை+ நீண்டு,  கடலுக்குப் போனது. அந்த எல்லை வடக்கே மிக்மேத்தாத்தில்+ ஆரம்பித்து, அங்கிருந்து கிழக்கே தானாத்-சீலோவுக்குப் போய், மறுபடியும் கிழக்கே யநோகாவுக்குப் போனது.  பின்பு யநோகாவிலிருந்து இறங்கி, அதரோத்துக்கும் நாராவுக்கும் போய், எரிகோவை+ அடைந்து, யோர்தான்வரை போனது.  மேற்கே அந்த எல்லை தப்புவாவிலிருந்து+ காணா பள்ளத்தாக்குவரை* போய் கடலில் முடிவடைந்தது.+ எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்ட பகுதிகள் இவைதான்.  மனாசே கோத்திரத்தாருடைய பகுதிகளிலும் எப்பிராயீம் வம்சத்தாருக்கு+ நகரங்களும் கிராமங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. 10  ஆனால், கேசேரில் வாழ்ந்துவந்த கானானியர்களை எப்பிராயீமியர்கள் துரத்தியடிக்கவில்லை.+ அதனால், கானானியர்கள் இன்றுவரை அவர்களோடு குடியிருந்து,+ அவர்களுக்குக் கொத்தடிமைபோல் வேலை செய்துவருகிறார்கள்.+

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குவரை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா