யோனா 2:1-10

2  மீனின் வயிற்றில் இருந்தபோது யோனா தன் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.+  அவரிடம், “யெகோவாவே, இக்கட்டான சமயத்தில் உங்களைக் கூப்பிட்டேன், எனக்குப் பதில் தந்தீர்கள்.+ கல்லறையின் ஆழத்திலிருந்து* உதவிக்காகக் கதறினேன்,+ என் குரலைக் கேட்டீர்கள்.   நடுக்கடலில் என்னைத் தூக்கியெறிந்தீர்கள், ஆழத்துக்குள் வீசினீர்கள்.தண்ணீர் புரண்டுவந்து என்னைப் புரட்டிப்போட்டது.+ பெரிய அலைகள் என்னைச் சுழற்றியடித்தன.+   அப்போது நான், ‘உங்கள் கண் முன்னாலிருந்து என்னை விரட்டிவிட்டீர்களே! இனி உங்களுடைய பரிசுத்த ஆலயத்தை எப்படிப் பார்ப்பேன்?’ என்று கேட்டேன்.   கடல்தண்ணீர் என்னை அமிழ்த்தியது, நான் மூச்சுத் திணறினேன்.+ஆழத்தில் மூழ்கிக்கொண்டே போனேன். கடற்பாசிகள் என் தலையைச் சுற்றிக்கொண்டன.   கடலின்* அடிமட்டத்துக்கே போய்விட்டேன். பூமியின் தாழ்ப்பாள்கள் என்முன் என்றென்றைக்கும் அடைத்துக்கொண்டன. ஆனாலும் என் கடவுளாகிய யெகோவாவே, என் உயிரைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றினீர்கள்.+   யெகோவாவே, என் உயிர் ஊசலாடியபோது உங்களைத்தான் நினைத்தேன்.+ உங்களுடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து என் ஜெபத்தைக் கேட்டீர்கள்.+   ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்குகிறவர்கள், தங்களுக்கு மாறாத அன்பைக் காட்டிய உங்களை மறந்துவிட்டார்கள்.*   ஆனால் நான் உங்களுக்கு நன்றி சொல்வேன், பலி செலுத்துவேன். உங்களிடம் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன்.+ யெகோவாவே, நீங்கள்தான் மீட்பர்”+ என்றார். 10  பின்பு, யெகோவா அந்த மீனுக்குக் கட்டளை கொடுத்தார். அது யோனாவைக் கரையில் கக்கிப்போட்டது.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “வயிற்றிலிருந்து.”
நே.மொ., “மலைகளின்.”
அல்லது, “நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா