Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

முக்கியக் குறிப்புகள்

  • 1

    • யோபு உத்தமராகவும் வசதியானவராகவும் இருக்கிறார் (1-5)

    • யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் கேள்வி எழுப்புகிறான் (6-12)

    • யோபு சொத்துகளையும் பிள்ளைகளையும் இழக்கிறார் (13-19)

    • யோபு கடவுளைக் குறை சொல்லவில்லை (20-22)

  • 2

    • யோபுவின் உள்நோக்கத்தைப் பற்றி சாத்தான் மறுபடியும் கேள்வி எழுப்புகிறான் (1-5)

    • யோபுவின் உடலைத் தாக்க சாத்தான் அனுமதிக்கப்படுகிறான் (6-8)

    • ‘கடவுளைத் திட்டித் தீர்த்துவிட்டு செத்துப்போங்கள்!’ என்று யோபுவின் மனைவி சொல்கிறாள் (9, 10)

    • யோபுவின் மூன்று நண்பர்கள் வருகிறார்கள் (11-13)

  • 3

    • யோபு தான் பிறந்ததை நினைத்துப் புலம்புகிறார் (1-26)

      • தனக்கு ஏன் இவ்வளவு வேதனை என்று கேட்கிறார் (20, 21)

  • 4

    • எலிப்பாஸ் முதல் தடவை பேசுகிறான் (1-21)

      • யோபு உத்தமமாக இருப்பதைப் பற்றிக் கேலி செய்கிறான் (7, 8)

      • ஓர் உருவம் சொன்ன விஷயத்தைச் சொல்கிறான் (12-17)

      • “கடவுள் தன்னுடைய ஊழியர்களை நம்புவதே இல்லை” (18)

  • 5

    • எலிப்பாஸ் தொடர்ந்து பேசுகிறான் (1-27)

      • ‘ஞானிகளை அவர்களுடைய தந்திரத்தை வைத்தே கடவுள் மடக்குகிறார்’ (13)

      • ‘கடவுளின் புத்திமதியை யோபு அசட்டை செய்யக் கூடாது’ (17)

  • 6

    • யோபுவின் பதில் (1-30)

      • வேதனை தாங்காமல் பேசிவிட்டதாக நியாயப்படுத்துகிறார் (2-6)

      • யோபுவுக்கு ஆறுதல் சொல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அளிக்கிறார்கள் (15-18)

      • “உள்ளதை உள்ளபடி சொல்வது வேதனை தராது” (25)

  • 7

    • யோபுவின் பதில் தொடர்கிறது (1-21)

      • வாழ்க்கையே ஒரு போராட்டம்தான் (1, 2)

      • “ஏன் என்மீதே குறியாக இருக்கிறீர்கள்?” (20)

  • 8

    • பில்தாத் முதல் தடவையாகப் பேசுகிறான் (1-22)

      • யோபுவின் பிள்ளைகள் பாவம் செய்திருப்பார்கள் என்று சொல்கிறான் (4)

      • ‘நீ நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு உதவி செய்வார்’ (6)

      • யோபு கடவுளை மறந்திருக்கலாம் என்று சொல்கிறான் (13)

  • 9

    • யோபுவின் பதில் (1-35)

      • சாதாரண மனுஷன் கடவுளோடு வழக்காட முடியாது (2-4)

      • ‘ஆராய்ந்தறிய முடியாத அதிசயங்களைக் கடவுள் செய்கிறார்’ (10)

      • யாராலும் கடவுளோடு வழக்காட முடியாது (32)

  • 10

    • யோபுவின் பதில் தொடர்கிறது (1-22)

      • ‘கடவுள் ஏன் என்னோடு வாதாடுகிறார்?’ (2)

      • கடவுளுக்கும் தனக்கும் உள்ள வித்தியாசத்தை யோபு சொல்கிறார் (4-12)

      • ‘நான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன்’ (20)

  • 11

    • சோப்பார் முதல் தடவையாகப் பேசுகிறான் (1-20)

      • அர்த்தமில்லாமல் பேசுவதாக யோபுவைக் குற்றப்படுத்துகிறான் (2, 3)

      • தப்பு செய்வதை விட்டுவிடும்படி யோபுவிடம் சொல்கிறான் (14)

  • 12

    • யோபுவின் பதில் (1-25)

      • “நான் எந்த விதத்திலும் உங்களுக்குக் குறைந்தவன் இல்லை” (3)

      • ‘என்னைக் கண்டாலே எல்லாருக்கும் கிண்டல்தான்’ (4)

      • ‘கடவுள் ஞானமுள்ளவர்’ (13)

      • நீதிபதிகளையும் ராஜாக்களையும்விட கடவுள் உயர்ந்தவர் (17, 18)

  • 13

    • யோபுவின் பதில் தொடர்கிறது (1-28)

      • ‘கடவுளிடம் பேசுவதுதான் நல்லது’ (3)

      • “நீங்கள் எதற்கும் லாயக்கில்லாத வைத்தியர்கள்” (4)

      • “என் பங்கில் நியாயம் இருப்பது எனக்குத் தெரியும்” (18)

      • தன்னைக் கடவுள் ஓர் எதிரிபோல் நினைப்பதாகச் சொல்கிறார் (24)

  • 14

    • யோபுவின் பதில் தொடர்கிறது (1-22)

      • மனுஷன் வாழ்வது கொஞ்சக் காலம்தான், அதுவும் பெரிய போராட்டம்தான் (1)

      • “ஒரு மரத்துக்குக்கூட நம்பிக்கை இருக்கிறது” (7)

      • ‘நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்து வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ (13)

      • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?” (14)

      • இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர கடவுள் ஏக்கமாக இருக்கிறார் (15)

  • 15

    • எலிப்பாஸ் இரண்டாவது தடவையாகப் பேசுகிறான் (1-35)

      • யோபுவுக்குக் கடவுள் பயமே இல்லை என்று சொல்கிறான் (4)

      • யோபுவை அகங்காரம் பிடித்தவன் என்று சொல்கிறான் (7-9)

      • “பரிசுத்த தூதர்களையே கடவுள் நம்புவது கிடையாது” (15)

      • ‘அக்கிரமம் செய்கிறவன் அவஸ்தைப்படுகிறான்’ (20-24)

  • 16

    • யோபுவின் பதில் (1-22)

      • ‘ஆறுதல்படுத்துவதற்குப் பதிலாக நீங்கள் என் மனதை நோகடிக்கிறீர்கள்’ (2)

      • தன்னைத் தாக்குவதிலேயே கடவுள் குறியாய் இருப்பதாக யோபு சொல்கிறார் (12)

  • 17

    • யோபுவின் பதில் தொடர்கிறது (1-16)

      • “கேலி செய்கிறவர்கள் என்னைச் சுற்றிலும் இருக்கிறார்கள்” (2)

      • “அவர் என்னைக் கேலி கிண்டலுக்கு ஆளாக்கிவிட்டார்” (6)

      • “கல்லறை என் வீடாகிவிடும்” (13)

  • 18

    • பில்தாத் இரண்டாவது தடவையாகப் பேசுகிறான் (1-21)

      • பாவம் செய்கிறவர்களின் கதியைப் பற்றி விவரிக்கிறான் (5-20)

      • யோபுவுக்குக் கடவுளைப் பற்றித் தெரியாது என்று மறைமுகமாகச் சொல்கிறான் (21)

  • 19

    • யோபுவின் பதில் (1-29)

      • “நண்பர்கள்” கண்டித்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் (1-6)

      • தான் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்கிறார் (13-19)

      • “என்னை விடுவிக்கிறவர் உயிரோடு இருக்கிறார்” (25)

  • 20

    • சோப்பார் இரண்டாவது தடவையாகப் பேசுகிறான் (1-29)

      • யோபு தன்னைக் கேவலப்படுத்திவிட்டதாக நினைக்கிறான் (2, 3)

      • யோபுவைக் கெட்டவன் என்பதுபோல் சொல்கிறான் (5)

      • கெட்டதைச் செய்வதில் யோபு சந்தோஷப்படுவதாகச் சொல்கிறான் (12, 13)

  • 21

    • யோபுவின் பதில் (1-34)

      • ‘கெட்டவர்கள் ஏன் நன்றாக வாழ்கிறார்கள்?’ (7-13)

      • “ஆறுதல் சொல்ல வந்தவர்களின்” எண்ணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் (27-34)

  • 22

    • எலிப்பாஸ் மூன்றாவது தடவையாகப் பேசுகிறான் (1-30)

      • “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?” (2, 3)

      • யோபுவைப் பேராசைக்காரன் என்றும், அநியாயம் செய்கிறவன் என்றும் குற்றம்சாட்டுகிறான் (6-9)

      • “சர்வவல்லமையுள்ளவரின் பேச்சைக் கேள்; அப்போது பழைய நிலைமைக்கு வந்துவிடுவாய்” (23)

  • 23

    • யோபுவின் பதில் (1-17)

      • தன்னுடைய வழக்கைக் கடவுளிடம் கொண்டுவர விரும்புகிறார் (1-7)

      • கடவுளைப் பார்க்க முடிவதில்லை என்று சொல்கிறார் (8, 9)

      • “அவருடைய வழியைவிட்டுக் கொஞ்சமும் விலகவில்லை” (11)

  • 24

    • யோபுவின் பதில் தொடர்கிறது (1-25)

      • ‘கடவுள் தண்டனைத் தீர்ப்பு நாளை ஏன் குறிக்காமல் இருக்கிறார்?’ (1)

      • கடவுள் கெட்ட காரியங்களை அனுமதிப்பதாகச் சொல்கிறார் (12)

      • பாவிகள் இருட்டை நேசிக்கிறார்கள் (13-17)

  • 25

    • பில்தாத் மூன்றாவது தடவையாகப் பேசுகிறான் (1-6)

      • ‘கடவுள் முன்னால் மனுஷன் எப்படிக் குற்றமற்றவனாக இருக்க முடியும்?’ (4)

      • மனுஷன் உத்தமனாக இருப்பது வீண் என்று சொல்கிறான் (5, 6)

  • 26

    • யோபுவின் பதில் (1-14)

      • “சோர்ந்துபோனவனுக்கு ரொம்பவே உதவி செய்துவிட்டீர்கள்!” (1-4)

      • “பூமியை அந்தரத்தில் தொங்கவிட்டார்” (7)

      • “இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!” (14)

  • 27

    • உத்தமமாக இருக்க வேண்டும் என்பதில் யோபு உறுதியாக இருக்கிறார் (1-23)

      • “என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்” (5)

      • கடவுள்பக்தி இல்லாதவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இருக்காது (8)

      • “நீங்கள் சொல்வது எல்லாமே முட்டாள்தனமாக இருக்கிறதே!” (12)

      • கெட்டவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது (13-23)

  • 28

    • பூமியில் இருக்கும் புதையல்களைவிட ஞானம் ஒப்பற்றது என்று யோபு சொல்கிறார் (1-28)

      • சுரங்கத்தைத் தோண்ட மனிதன் எடுக்கும் முயற்சிகள் (1-11)

      • முத்துக்களைவிட ஞானம் ரொம்பவே மதிப்புள்ளது (18)

      • யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் உண்மையான ஞானம் (28)

  • 29

    • கஷ்டங்கள் வருவதற்கு முன்னால் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி யோபு சொல்கிறார் (1-25)

      • நகரவாசலில் அவருக்குக் கிடைத்த மரியாதை (7-10)

      • நியாயமாக நடந்துகொண்டதைப் பற்றிச் சொல்கிறார் (11-17)

      • அவருடைய அறிவுரைகளை எல்லாரும் கேட்டார்கள் (21-23)

  • 30

    • தன்னுடைய சூழ்நிலை மாறிவிட்டதை யோபு சொல்கிறார் (1-31)

      • ஒன்றுக்கும் உதவாதவர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள் (1-15)

      • கடவுள் உதவிக்கு வராததாக நினைக்கிறார் (20, 21)

      • ‘என் தோலெல்லாம் கறுத்துப்போய்விட்டது’ (30)

  • 31

    • எப்போதும் உத்தமமாய் நடந்துகொண்டதாக யோபு சொல்கிறார் (1-40)

      • “என் கண்களை அலையவிடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன்” (1)

      • தன்னைத் தராசில் வைத்து கடவுள் நிறுத்துப் பார்க்கட்டும் என்று சொல்கிறார் (6)

      • ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாதவர் (9-12)

      • பண ஆசை இல்லாதவர் (24, 25)

      • சிலைகளை வணங்காதவர் (26-28)

  • 32

    • இளம் எலிகூ பேச ஆரம்பிக்கிறார் (1-22)

      • யோபுமீதும் யோபுவின் நண்பர்கள்மீதும் கோபமாக இருக்கிறார் (2, 3)

      • மற்றவர்கள் பேசி முடிக்கும்வரை மரியாதையோடு காத்திருந்து பேசுகிறார் (6, 7)

      • வயதாகிவிட்டால் மட்டும் ஞானம் வந்துவிடாது (9)

      • பேசுவதற்காக எலிகூ ஆர்வமாக இருக்கிறார் (18-20)

  • 33

    • தான் நல்லவன் என்று யோபு சொல்லிக்கொள்வதை எலிகூ கண்டிக்கிறார் (1-33)

      • மீட்பதற்கு வழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது (24)

      • மறுபடியும் இளமைத் துடிப்போடு வாழ்வது (25)

  • 34

    • கடவுளுடைய நீதியும் அவருடைய வழிகளும்தான் சரியானது என்று எலிகூ சொல்கிறார் (1-37)

      • கடவுளிடமிருந்து தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று யோபு சொல்கிறார் (5)

      • உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார் (10)

      • யோபு அறிவில்லாமல் பேசுகிறார் (35)

  • 35

    • யோபு தன்னை நியாயப்படுத்தி தவறாகப் பேசுவதை எலிகூ எடுத்துச் சொல்கிறார் (1-16)

      • கடவுளைவிட தான் நல்லவன் என்று யோபு சொல்கிறார் (2)

      • கடவுள் உயரத்தில் இருக்கிறார், மனிதர்கள் பாவம் செய்வதால் அவருக்குப் பாதிப்பு இல்லை (5, 6)

      • கடவுளுக்காக யோபு காத்திருக்க வேண்டும் (14)

  • 36

    • ஆராய்ந்தறிய முடியாத கடவுளின் மகிமையைப் பற்றி எலிகூ உயர்வாகப் பேசுகிறார் (1-33)

      • கீழ்ப்படிகிறவர்கள் நன்றாக வாழ்வார்கள்; கெட்டவர்கள் ஒதுக்கித்தள்ளப்படுவார்கள் (11-13)

      • ‘கற்றுக்கொடுப்பதில் கடவுளை மிஞ்ச யாருமே இல்லை’ (22)

      • யோபு கடவுளைப் புகழ்ந்து பேச வேண்டும் (24)

      • “நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் கடவுள் அற்புதமானவர்” (26)

      • மழையும் மின்னலும் கடவுளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன (27-33)

  • 37

    • இயற்கைச் சக்திகள் கடவுளுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன (1-24)

      • மனிதர்களுடைய வேலைகளைக் கடவுளால் நிறுத்த முடியும் (7)

      • ‘கடவுள் செய்திருக்கிற அற்புதங்களை யோசித்துப் பாருங்கள்’ (14)

      • மனிதர்களால் கடவுளைப் புரிந்துகொள்ளவே முடியாது (23)

      • தனக்கே எல்லாம் தெரியும் என்று மனிதன் நினைக்கக் கூடாது (24)

  • 38

    • மனிதன் எவ்வளவு அற்பமானவன் என்பதை யெகோவா உணர்த்துகிறார் (1-41)

      • ‘பூமியைப் படைத்தபோது நீ எங்கே இருந்தாய்?’ (4-6)

      • விடியற்கால நட்சத்திரங்கள் சந்தோஷமாகப் பாடினார்கள் (7)

      • இயற்கையாக நடக்கிற விஷயங்களைப் பற்றிய கேள்விகள் (8-32)

      • “வானத்தை இயக்கும் சட்டங்கள்” (33)

  • 39

    • மிருகங்கள் மனிதனுடைய அறியாமையை வெளிப்படுத்துகின்றன (1-30)

      • வரையாடுகள், மான்கள் (1-4)

      • காட்டுக் கழுதை (5-8)

      • காட்டு எருது (9-12)

      • நெருப்புக்கோழி (13-18)

      • குதிரை (19-25)

      • வல்லூறு, கழுகு (26-30)

  • 40

    • யெகோவா கேட்கிற இன்னும் சில கேள்விகள் (1-24)

      • பதில் சொல்ல இனி எதுவுமில்லை என யோபு ஒத்துக்கொள்கிறார் (3-5)

      • “என் தீர்ப்பையே நீ தப்பு என்று சொல்வாயா?” (8)

      • பிகெமோத்தின் பலத்தைக் கடவுள் விவரிக்கிறார் (15-24)

  • 41

    • பிரமாண்டமான லிவியாதானைப் பற்றிக் கடவுள் விளக்குகிறார் (1-34)

  • 42

    • யோபு யெகோவாவுக்குப் பதில் சொல்கிறார் (1-6)

    • மூன்று நண்பர்கள் கண்டிக்கப்படுகிறார்கள் (7-9)

    • யோபுவைப் பழைய நிலைமைக்கு யெகோவா உயர்த்துகிறார் (10-17)

      • யோபுவின் மகன்களும் மகள்களும் (13-15)