யோபு 18:1-21
18 அதற்கு சுவாகியனான பில்தாத்,+
2 “உன் புராணத்தை எப்போதுதான் நிறுத்தப்போகிறாய்?
கொஞ்சமாவது புரிந்துகொள்; நாங்களும் பேச வேண்டாமா?
3 எங்களை ஏன் மிருகங்களைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாய்?+நாங்களெல்லாம் உனக்கு முட்டாள்களாக* தெரிகிறோமோ?
4 நீ கோபத்தில் உன்னையே குதறிப்போட்டாலும்,உனக்காக இந்தப் பூமி வெறுமையாகுமா?அல்லது, பாறைதான் அதன் இடத்தைவிட்டு நகர்ந்துபோகுமா?
5 கெட்டவனின் தீபம் அணைந்துதான் போகும்.அவனுடைய தீ சுடர்விட்டு எரியாது.+
6 அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இல்லாமல்போகும்.அவனுடைய விளக்கு அணைக்கப்படும்.
7 அவனுடைய நடையின் வேகம் குறைந்துவிடும்.அவனுடைய திட்டங்களே அவனைக் கவிழ்த்துவிடும்.+
8 அவனுடைய கால்களே அவனை வலையில் சிக்க வைக்கும்.அவன் நேராகப் போய் அதில் மாட்டிக்கொள்வான்.
9 கண்ணி அவன் குதிங்காலைக் கவ்வும்.பொறி அவனைப் பிடிக்கும்.+
10 அவன் வழியில் ஒரு கயிறு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.அவன் பாதையில் ஒரு கண்ணி ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது.
11 சுற்றிலும் திகில் அவனை நடுநடுங்க வைக்கிறது.+எங்கே போனாலும் அது அவனைத் துரத்துகிறது.
12 அவனுடைய பலம் அவனுக்குக் கைகொடுக்காது.ஆபத்தில் மாட்டிக்கொண்டு+ அவன் தத்தளிப்பான்.
13 படுபயங்கரமான நோய் அவனுடைய தோலைத் தின்கிறது.அவனுடைய உறுப்புகளை அது உருக்குலைக்கிறது.
14 பாதுகாப்பான கூடாரத்தைவிட்டு அவன் வெளியேற்றப்படுகிறான்.+நடுநடுங்க வைக்கும் ராஜாவிடம்* இழுத்துச் செல்லப்படுகிறான்.
15 முன்பின் தெரியாதவர்கள் அவன் கூடாரத்தில் குடியிருப்பார்கள்.அவன் வீட்டின் மேல் கந்தகம் தூவப்படும்.+
16 அவனுடைய வேர்கள் காய்ந்துபோகும்.கிளைகள் பட்டுப்போகும்.
17 அவனைப் பற்றிய நினைவுகள் மண்ணைவிட்டு நீங்கும்.தெருவில் அவனுடைய பெயர் இல்லாமல்போகும்.
18 அவன் வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குத் துரத்தப்படுவான்.வளமான தேசத்தைவிட்டு விரட்டப்படுவான்.
19 அவனுக்கு வாரிசும் இருக்காது, வம்சமும் இருக்காது.அவனுடைய பேர் சொல்ல ஊரில்* ஆளே இருக்க மாட்டார்கள்.
20 அவனுக்கு அழிவு வரும்போது மேற்கில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைவார்கள்.கிழக்கில் உள்ளவர்கள் திகிலடைவார்கள்.
21 தப்பு செய்கிறவனின் கூடாரத்துக்கு வரும் கதி இதுதான்.கடவுளைப் பற்றித் தெரியாதவனுக்கு வரும் நிலைமை இதுதான்” என்று சொன்னான்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “அசுத்தமாக.”
^ வே.வா., “கொடூரமான சாவைச் சந்திக்க.”
^ வே.வா., “அவன் குடியிருக்கும் இடத்தில்.”