யோபு 27:1-23

27  பின்பு யோபு தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். அவர் அவர்களிடம்,   “எனக்கு நியாயம் செய்யாத கடவுள்மேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,*என் வாழ்க்கையைக் கசப்பாக்கிவிட்ட சர்வவல்லமையுள்ளவர்மேல் சத்தியமாகச் சொல்கிறேன்,+   நான் உயிரோடு இருக்கிற வரைக்கும்,கடவுள் கொடுத்த உயிர்மூச்சு எனக்குள் இருக்கிற வரைக்கும்,+   அநியாயமாக எதையும் பேச மாட்டேன்.பொய் சொல்ல மாட்டேன்.   உங்களையெல்லாம் நீதிமான்கள் என்று சொல்ல எனக்கு வாயே வராது. சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்.*+   நான் எப்போதும் நீதியாக நடந்துகொள்வேன், ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டேன்.+உயிரோடு இருக்கும்வரை என் உள்ளம் என்னை உறுத்தாது.   என் எதிரிகள் பொல்லாதவர்களைப் போல நாசமாகட்டும்.என்னைத் தாக்குகிறவர்கள் அநியாயம் செய்கிறவர்களைப் போல ஒழிந்துபோகட்டும்.   கெட்டவனை* அவர் அழித்துவிடுவார்.அவனுக்கு இனி எந்த நம்பிக்கையும் இருக்காது.+   கஷ்டத்தில் அவன் கதறும்போதுகடவுள் கேட்பாரா?+ 10  அப்படிப்பட்டவன் சர்வவல்லமையுள்ளவரை வணங்குவதில்* சந்தோஷப்படுவானா? எப்போதும் அவரிடம் ஜெபம் செய்வானா? 11  கடவுள் எவ்வளவு வல்லமை உள்ளவர் என்று* நான் உங்களுக்குச் சொல்லித்தருவேன்.சர்வவல்லமையுள்ளவரைப் பற்றி எதையும் மறைக்காமல் சொல்வேன். 12  தரிசனங்களைப் பார்த்ததாக நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்கள்.ஆனால், நீங்கள் சொல்வது எல்லாமே முட்டாள்தனமாக இருக்கிறதே! 13  கெட்டவனுக்குக் கடவுள் என்ன கொடுக்கப்போகிறார் தெரியுமா?+கொடுமை செய்கிறவனுக்கு சர்வவல்லமையுள்ளவர் என்ன செய்யப்போகிறார் தெரியுமா? 14  அவனுக்கு நிறைய மகன்கள் பிறந்தாலும் அவர்கள் வாளால் சாவார்கள்.+அவனுடைய பிள்ளைகள் பசியில் தவிப்பார்கள். 15  அவனுக்குப் பின்பு உயிரோடு இருக்கிறவர்கள் பயங்கரமான வியாதியால் செத்துப்போவார்கள்.அவர்களுடைய மனைவிகள் அவர்களுக்காக அழ மாட்டார்கள். 16  வெள்ளியை அவன் ஏராளமாக* குவித்து வைத்தாலும்,நல்ல துணிமணிகளை நிறைய* சேர்த்து வைத்தாலும், 17  அவன் சேர்த்து வைத்ததையெல்லாம்நீதிமான்கள்தான் உடுத்திக்கொள்வார்கள்.+அவனுடைய வெள்ளியைப் பழிபாவம் இல்லாதவர்கள்தான் அனுபவிப்பார்கள். 18  அவன் கட்டுகிற வீடு ஒரு பூச்சியின்* கூட்டைப் போலவும்,வயலைக் காவல்காப்பவனுடைய பந்தல் போலவும்+ உறுதியில்லாமல் இருக்கும். 19  அவன் பணக்காரனாகத் தூங்கப் போனாலும், சொத்துகள் சேர்த்திருக்க மாட்டான்.அவன் கண்திறந்து பார்க்கும்போது ஒன்றுமே இருக்காது. 20  வெள்ளத்தில் மூழ்குவது போல அவன் பயத்தில் மூழ்குவான்.ராத்திரியில் புயல்காற்று அவனை அடித்துக்கொண்டு போய்விடும்.+ 21  கிழக்குக் காற்று அவனை இழுத்துக்கொண்டு போய்விடும்.அவனுடைய இடத்திலிருந்து அவனை அடித்துக்கொண்டு போய்விடும், அவன் இல்லாமல்போவான்.+ 22  அதனிடமிருந்து தப்பிக்க அவன் தலைதெறிக்க ஓடினாலும்,+ஈவிரக்கமில்லாமல் அது அவனை வாரிக்கொள்ளும்.+ 23  அது அவனைப் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கும்.அதன் இடத்திலிருந்து அவனைப் பார்த்துக் கிண்டலாக விசில் அடிக்கும்”*+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கடவுள் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
வே.வா., “நான் கடவுளுக்கு உண்மையாக இருப்பேன்.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனை; விசுவாசதுரோகியை.”
வே.வா., “சர்வவல்லமையுள்ளவரில்.”
அல்லது, “கடவுளுடைய உதவியால்.”
நே.மொ., “மண்ணைப் போல்.”
நே.மொ., “களிமண்ணைப் போல்.”
நே.மொ., “அந்துப்பூச்சியின்.”
அல்லது, “அவனைப் பார்த்து அவர்கள் கைதட்டிச் சிரிப்பார்கள், அவர்களுடைய இடத்திலிருந்து விசில் அடிப்பார்கள்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா