யோபு 31:1-40

31  பின்பு அவர், “என் கண்களை அலையவிடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.*+ அப்படியிருக்கும்போது, இன்னொரு பெண்ணை* நான் எப்படிக் கெட்ட எண்ணத்தோடு பார்ப்பேன்?+   அப்படி நான் பார்த்தால், கடவுள் என்னை ஆசீர்வதிப்பாரா?சர்வவல்லமையுள்ள கடவுளிடமிருந்து நான் எதையாவது எதிர்பார்க்க முடியுமா?   தப்பு செய்கிறவன் அழிந்துதானே போவான்?கெடுதல் செய்கிறவன் ஒழிந்துதானே போவான்?+   என் வழிகளையெல்லாம் கடவுள் பார்க்கிறார்.+நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் அவர் கவனிக்கிறார்.   நான் எப்போதாவது பொய் பேசியிருக்கிறேனா?* மற்றவர்களை ஏமாற்றியிருக்கிறேனா?   கடவுள் என்னைத் தராசில்* வைத்து நிறுத்துப் பார்க்கட்டும்.+அப்போது நான் உத்தமன் என்று புரிந்துகொள்வார்.+   என் கால் தவறான வழியில் போயிருந்தால்,+என் கண்கள் போகிற போக்கில் என் இதயம் போயிருந்தால்,+என் கைகளில் கறை படிந்திருந்தால்,   நான் பயிர் செய்வதை இன்னொருவன் சாப்பிடட்டும்.+நான் நடுவதை வேறொருவன் பிடுங்கிப்போடட்டும்.*   என் இதயம் ஒரு பெண்ணிடம் மயங்கியிருந்தால்,+அவளுக்காக நான் அடுத்தவனின் வாசலில் காத்துக் கிடந்திருந்தால்,+ 10  என் மனைவி இன்னொருவனுக்கு மனைவியாகட்டும்.*மற்ற ஆண்கள் அவளோடு படுக்கட்டும்.+ 11  நான் ஒழுக்கக்கேடாக நடந்திருந்தால் அது படுகேவலமாக இருந்திருக்கும்.அந்தக் குற்றத்துக்காக நீதிபதிகள் என்னைத் தண்டிப்பதே நியாயமாக இருந்திருக்கும்.+ 12  எல்லாவற்றையும் பொசுக்கி நாசமாக்குகிற நெருப்பைப் போலஅந்தப் பாவம் எனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அழித்திருக்கும்.+ 13  வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் என்மேலுள்ள மனக்குறையைச் சொன்னபோது,*நான் நியாயத்தை அசட்டை பண்ணியிருந்தால், 14  கடவுள் அதைப் பற்றிக் கேட்கும்போது என்ன செய்வேன்? அவர் என்னிடம் விளக்கம் கேட்டால் என்ன பதில் சொல்வேன்?+ 15  தாயின் வயிற்றில் என்னை உருவாக்கியவர்தானே அவர்களையும் உருவாக்கினார்?+ பிறப்பதற்கு முன்பே எங்களுக்கு உருவம் கொடுத்தவரும் அவர்தானே?+ 16  ஏழைகள் கேட்டதை நான் கொடுக்காமல் இருந்தேனா?+விதவைகளுக்கு உதவி செய்யாமல் அவர்களைத் தவிக்க வைத்தேனா?+ 17  என் உணவை நான் மட்டும் சாப்பிட்டேனா?அநாதைகளோடு அதைப் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தேனா?+ 18  (நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் அவர்களுக்கு ஒரு அப்பா போலத்தான் இருந்திருக்கிறேன்.என் வாழ்க்கை முழுவதும் விதவைகளுக்கு ஆதரவாகத்தான் இருந்திருக்கிறேன்.) 19  போட்டுக்கொள்ள துணியில்லாமல் குளிரில் யாராவது செத்துப்போவதை நான் கண்டும்காணாமல் இருந்தேனா?போர்த்திக்கொள்ள எதுவும் இல்லாமல் ஒரு ஏழை தவிப்பதைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தேனா?+ 20  குளிரில் போர்த்திக்கொள்ள என் கம்பளியைக் கொடுக்காமல் இருந்தேனா?அதற்கு அவன் நன்றி சொல்லாமல் இருந்தானா?+ 21  என் உதவியைத் தேடி நகரவாசலுக்கு+ வந்த*அநாதைகளை மிரட்டுவதற்காக கையை ஓங்கினேனா?+ 22  அப்படிச் செய்திருந்தால் என்னுடைய கை தோள்பட்டையிலிருந்து முறிந்து விழட்டும்.என் முழங்கை உடைந்து போகட்டும். 23  உண்மையில், கடவுள் என்னைக் கொன்றுவிடுவாரோ என்று பயந்தேன்.அவருடைய மகிமைக்குமுன் என்னால் நிற்க முடியவில்லை. 24  தங்கத்தின் மேல் நான் நம்பிக்கை வைத்தேனா?அல்லது, சொக்கத்தங்கம்தான் எனக்குப் பாதுகாப்பு என்று சொன்னேனா?+ 25  எனக்கு நிறைய சொத்து இருந்தது.+ஆனால், அதுதான் சந்தோஷத்தைத் தரும் என்று நினைத்தேனா?+ 26  சூரியன் பிரகாசிப்பதைப் பார்த்தபோதோ,நிலா அழகாக உலா போவதைக் கண்டபோதோ,+ 27  மனம்* மயங்கி,அவற்றைக் கும்பிட்டேனா?*+ 28  அப்படிச் செய்திருந்தால், உண்மைக் கடவுளுக்குத் துரோகம் செய்தது போல ஆகியிருக்கும்.அந்தக் குற்றத்துக்கு நீதிபதிகள் என்னைத் தண்டிப்பதே நியாயமாக இருந்திருக்கும். 29  என் எதிரி அழிந்துபோவதைப் பார்த்து நான் எப்போதாவது சந்தோஷப்பட்டேனா?+அவனுக்குக் கெட்டது நடந்தபோது எனக்குக் கொண்டாட்டமாக இருந்ததா? 30  அவன் நாசமாய்ப் போக வேண்டும் என்று நான் சபித்ததே இல்லை.என் வாயால் அந்தப் பாவத்தைச் செய்ததே இல்லை.+ 31  என் வீட்டில் வயிறார சாப்பிடாதவர்கள் யாருமே இருந்ததில்லை.+இதை என் வீட்டு ஆட்கள்கூட எப்போதும் சொல்வார்கள். 32  வெளியூரிலிருந்து வந்தவர்கள் தெருவில் தங்கியதே இல்லை.+அவர்களுக்காக என் வீட்டு வாசல் திறந்தே இருந்தது. 33  மற்றவர்களைப் போல நான் எப்போதாவது என் தப்பை மூடி மறைத்தேனா?+யாரிடமும் சொல்லாமல் இருந்துவிட்டேனா?* 34  ஜனங்கள் என்ன சொல்வார்கள் என்று பயந்தோ,அக்கம்பக்கத்தார் என்னை அவமதிப்பார்கள் என்று நினைத்தோ,வாயை மூடிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டேனா? 35  நான் சொல்வதை யாராவது கேட்கக் கூடாதா?+ வேண்டுமென்றால், எழுதி கையெழுத்துகூட போட்டுத் தருகிறேன். சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பதில் சொல்லட்டும்.+ என்னைக் குற்றம்சாட்டுபவர், நான் என்ன குற்றம் செய்தேன் என்று பத்திரத்தில் எழுதித் தரட்டும். 36  அதை என் தோள்மேல் சுமப்பேன்.அதைக் கிரீடம் போலத் தலையில் வைத்துக்கொள்வேன். 37  நான் செய்த ஒவ்வொன்றுக்கும் அவரிடம் விளக்கம் தருவேன்.ஒரு இளவரசனைப் போல அவரிடம் தைரியமாகப் போவேன். 38  என் வயல் என்னைப் பார்த்துப் புலம்பியிருந்தால்,அதன் சால்கள்* ஒன்றுசேர்ந்து அழுதிருந்தால், 39  விவசாயிகளுக்குக் கூலி கொடுக்காமல் அதன் விளைச்சலை நான் சாப்பிட்டிருந்தால்,+அந்த வயலை மற்றவர்களிடமிருந்து நான் பிடுங்கியிருந்தால்,+ 40  கோதுமைக்குப் பதிலாக முட்செடிகள் அங்கே முளைக்கட்டும்.பார்லிக்குப் பதிலாக நாற்றமடிக்கும் களைகள் அங்கே வளரட்டும்” என்றார். இப்படியாக, யோபு பேசி முடித்தார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “கன்னிப் பெண்ணை.”
நே.மொ., “என் கண்களோடு ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.”
அல்லது, “பொய் பேசுகிறவர்களோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறேனா?”
நே.மொ., “நீதியின் தராசில்.”
வே.வா., “என் சந்ததி அழிந்துபோகட்டும்.”
நே.மொ., “மாவு அரைக்கட்டும்.”
வே.வா., “என்னோடு வழக்காடியபோது.”
அல்லது, “நகரவாசலில் எனக்குச் செல்வாக்கு இருந்ததால், அங்கு வந்த”
நே.மொ., “இதயம்.”
நே.மொ., “என் வாயால் என் கையை முத்தமிட்டேனா?”
நே.மொ., “உடையின் மடிப்பில் என் பாவத்தை மறைத்து வைத்தேனா?”
சால்கள் என்பது உழும்போது நிலத்தில் ஏற்படும் பள்ளங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா