யோபு 34:1-37

34  பின்பு எலிகூ,   “ஞானிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்;அறிவாளிகளே, நான் சொல்வதைக் கவனியுங்கள்.   சாப்பாட்டை நாக்கு ருசி பார்க்கிறது.அது போல, வார்த்தைகளைக் காது சோதித்துப் பார்க்கிறது.   எது சரியானது என்று இப்போது நாம் முடிவுசெய்யலாம்.எது நல்லது என்று தீர்மானிக்கலாம்.   ஏனென்றால் யோபு, ‘நான் நேர்மையானவன்.+இருந்தாலும், கடவுளிடமிருந்து எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.+   நியாயம் கிடைக்க எனக்குத் தகுதி இல்லை என்று நான் பொய்யா சொல்ல முடியும்? நான் எந்தத் தப்பும் செய்யவில்லை, ஆனாலும் என் காயம் ஆறாமல் இருக்கிறது’+ என்று சொல்கிறார்.   யோபுவைப் போலக் கேலிப்பேச்சை அமைதியாகக் கேட்கிறவர்கள்யாராவது இருக்க முடியுமா?   அவர் தப்பு செய்கிறவர்களோடு பழகுகிறார்.கெட்டவர்களோடு சகவாசம் வைக்கிறார்.+   அதனால்தான், ‘கடவுளுக்குப் பிரியமாக நடப்பதால்மனுஷனுக்கு எந்த லாபமும் இல்லை’ என்று சொல்கிறார்.+ 10  புத்திசாலிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள். உண்மைக் கடவுள் ஒருபோதும் கெட்டது செய்ய மாட்டார்.+சர்வவல்லமையுள்ளவர் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார்.+ 11  மனுஷன் என்ன செய்கிறானோ அதற்கு ஏற்ற கூலிதான் அவனுக்குக் கிடைக்கிறது.+அதற்குத் தகுந்த பலனைத்தான் அவன் அனுபவிக்கிறான். 12  கடவுள் அக்கிரமம் செய்ய மாட்டார் என்பது நிச்சயம்.+சர்வவல்லமையுள்ளவர் நியாயத்தைப் புரட்ட மாட்டார் என்பது உறுதி.+ 13  பூமியை அவருடைய பொறுப்பில் விட்டது யார்?உலகத்தை அவர் கையில் ஒப்படைத்தது யார்? 14  மனுஷர்கள்மேல் அவர் பகையைக் காட்டி,அவர்களுடைய உயிரையும் சுவாசத்தையும் எடுத்துக்கொண்டால், 15  எல்லா மனுஷர்களும் அழிந்துவிடுவார்களே.+அவர்கள் எல்லாரும் மண்ணுக்குப் போய்விடுவார்களே.+ 16  நீங்கள் புத்திசாலியாக இருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள்.நான் பேசும்போது நன்றாகக் கவனியுங்கள். 17  நியாயத்தை வெறுக்கிற ஒருவரால் ஆட்சி செய்ய முடியுமா?அதிகாரமும் நீதியும் உள்ளவர்மேல் நீங்கள் குற்றம் சுமத்துவீர்களா? 18  ஒரு ராஜாவைப் பார்த்து, ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்று சொல்வீர்களா? உங்கள் தலைவனைப் பார்த்து, ‘நீ ஒரு அயோக்கியன்’ என்று சொல்வீர்களா?+ 19  அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குத் தனி சலுகை காட்டாத ஒருவர் இருக்கிறார்.+ஏழைகளைவிட பணக்காரர்களை* அவர் உயர்வாக நினைக்க மாட்டார்.+ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் படைத்தவர் அவர்தான். 20  அவர்கள் திடீரென்று நடுராத்திரியில்கூட+ செத்துப்போய்விடலாம்.+அவர்கள் குலைநடுங்கிப்போய் இறந்துவிடலாம்.பலம் படைத்தவர்கள்கூட மனுஷனுக்கு அப்பாற்பட்ட சக்தியால் ஒழிக்கப்படலாம்.+ 21  ஏனென்றால், மனுஷன் செய்வதையெல்லாம் கடவுள் கவனிக்கிறார்.+அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியையும் அவர் பார்க்கிறார். 22  தப்பு செய்கிறவர்கள் எங்கேயும் ஒளிந்துகொள்ள முடியாது.எப்பேர்ப்பட்ட இருட்டிலும் மறைந்துகொள்ள முடியாது.+ 23  கடவுள் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு கொடுப்பார்.அதற்காக அவர் முன்கூட்டியே யாருக்கும் நேரம் குறிப்பதில்லை. 24  அதிகாரத்தில் இருப்பவர்களை அவர் விசாரணை செய்துதான் நீக்க வேண்டும் என்றில்லை.அவர்களுடைய இடத்தில் யாரை வேண்டுமானாலும் வைப்பார்.+ 25  ஏனென்றால், அவர்கள் செய்வதெல்லாம் அவருக்குத் தெரியும்.+அவர்களை ஒரே ராத்திரியில் கவிழ்ப்பார், அவர்கள் ஒழிந்துபோவார்கள்.+ 26  அவர்கள் செய்த அக்கிரமத்துக்காக அவர்களைத் தண்டிப்பார்.எல்லாருடைய கண் முன்னாலும் அதைச் செய்வார்.+ 27  ஏனென்றால், அவரைவிட்டு அவர்கள் விலகிவிட்டார்கள்.+அவருடைய வழிகளை அவர்கள் மதிப்பதே இல்லை.+ 28  அவர்களுடைய கொடுமை தாங்காமல் ஏழைகள் கடவுளிடம் கதறி அழுகிறார்கள்.ஆதரவற்றவர்களின் கதறலை அவர் கேட்கிறார்.+ 29  ஆனால் அவர் ஒன்றும் செய்யாமல் இருந்தால், யார் அவரைக் குற்றப்படுத்த முடியும்? அவர் முகத்தை மறைத்துக்கொண்டால், யார் அவரைப் பார்க்க முடியும்? ஒரு தேசமானாலும் சரி, தனி மனுஷனாலும் சரி, வித்தியாசம் இல்லை. 30  ஆட்சி செய்யவோ ஜனங்களை ஆட்டிப்படைக்கவோகெட்டவனை* அவர் விடுவதில்லை.+ 31  நீங்கள் கடவுளிடம்,‘தப்பு செய்யாமலேயே நான் தண்டனையை அனுபவிக்கிறேன்.+ 32  எனக்கு ஏதாவது புரியாமல் இருந்தால் அதைப் புரிய வையுங்கள்.நான் ஏதாவது தப்பு செய்திருந்தால் என்னைத் திருத்திக்கொள்கிறேன்’ என்று சொல்கிறீர்கள். 33  அவருடைய தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படியிருக்கும்போது, நீங்கள் சொல்கிறபடி மட்டும் அவர் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுமா? இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்றால், அதைச் சொல்லுங்கள். 34  புத்திசாலிகள் என்னிடம் என்ன சொல்வார்கள் தெரியுமா?நான் பேசுவதைக் கேட்கிற ஞானிகள் என்ன சொல்வார்கள் தெரியுமா? 35  ‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்;+அவருடைய பேச்சில் அர்த்தமே* இல்லை’ என்றுதான் சொல்வார்கள். 36  யோபு முழுமையாகச் சோதிக்கப்பட வேண்டும்.*ஏனென்றால், அக்கிரமக்காரர்கள் பேசுவதுபோல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். 37  பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்.+நம் முன்னால் கைகொட்டிச் சிரிக்கிறார்.உண்மைக் கடவுளுக்கு எதிராக ஏதேதோ பேசுகிறார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “அந்தஸ்து இல்லாதவர்களைவிட அந்தஸ்து உள்ளவர்களை.”
வே.வா., “கடவுளைவிட்டு விலகியவனை; விசுவாசதுரோகியை.”
வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலே.”
அல்லது, “என் தகப்பனே, யோபு சோதிக்கப்படட்டும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா